விலங்குகளின் குணநலன்கள் என்ன?, நம் கண்களால் பார்க்க முடிந்த தொலைவு? - அறிவியல் பேச்சு - மிஸ்டர் ரோனி

 

 

 



 

 

 

 


ஈத்தாலஜி என்பது என்ன? எதைப்பற்றியது?

கிரேக்க மொழியில் இருந்து உருவான சொல் ஈத்தாலஜி. ஒருவரின் செயல், நடத்தை, அறம் ஆகியவற்றைக் குறிப்பது. தற்போது, விலங்கியல் பக்கம் நகர்ந்து விலங்கின் நடத்தை என்பதாக மாறிவிட்டது. 1872ஆம் ஆண்டு டார்வின், தி எக்ஸ்பிரஷன் ஆப் தி எமோஷன் என்ற நூலை எழுதினார். மனிதர்களின் உணர்வு வெளிப்பாட்டுத்தன்மை, விலங்குகளின் நடத்தைக்கு அடிப்படையாவதுஎப்படி என ஆய்வு செய்து எழுதியிருந்தார்.
1950களில் விலங்குகளின் நடத்தை எப்படி மாறுகிறது என கான்ராட் லோரன்ஸ் என்பவர் ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டார். அதில், விலங்குகளை தூண்டிவிடும் இயல்பு கொண்டதாக இனப்பெருக்க கால துணையின் நடனம், வாசனைகள் உள்ளன என கண்டறிந்தார். இப்போதும் தேனீக்கள், எறும்புகளைப் பார்த்தால் உலகில் அவை மட்டுமே உள்ளது என எண்ணுவதைப் போல குழுவாக எதிலும் மூக்கை நுழைக்காமல் வேலை செய்துகொண்டிருக்கும். விலங்குகள் தனியாக செயல்படும்போது உற்பத்தி திறன் கொண்டவையாகவும், குழுவாக இருக்கும்போது பிழைத்திருப்பதற்கான வாய்ப்புகள் கூடுவதையும் ஆராய்ச்சிகள் காட்டின. இனக்குழுவின் நன்மைக்காக தன்னை தியாகம் செய்துகொள்ளும் பண்பும் விலங்குகளிடையே உண்டு.

ஈத்தாலஜியில் காகம், நாய் ஆகியவற்றின் விசேஷ கூறுகள் பற்றி ஆராய்ச்சி செய்தனர். இவை இரண்டுமே தங்களைக் காப்பாற்றிக் கொள்வதில் தனித்துவமான தன்மையைக் கொண்டவை.

 

 

 

2

சாதாரண கண்களால் எவ்வளவு தூரம் பார்க்கமுடியும்?

தோராயமாக 2.5 மில்லியன் ஒளி ஆண்டு தொலைவை பார்க்க முடியும்.

நல்ல இருட்டு, இரவும் கூட. அந்த நிலையில் கண் பார்வையில் குறையொன்றும் இல்லை என்றால் பத்து கி.மீ தொலைவில் எரியும் மெழுகுவர்த்தியின் சுடரை ஒருவரால் பார்க்க முடியும். ஆனால் நகரத்தில் உள்ள மின்விளக்குகள், வானத்திலுள்ள மேக ஜொலிப்பு ஆகியவை நம்மை அந்தளவு பார்க்க இயலாதபடி தடுக்கின்றன. இதெல்லாம் பூமியில் உள்ள பிரச்னைகள்தான். விண்வெளியில் அல்ல.

ஆந்த்ரோமெடா பால்வெளி 2.5 மில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில் அருகில் உள்ளது. நல்ல கண் பார்வை உடையவர் அதைக் காண முடியும். பூமியில் நிறைய வரம்புகள் உள்ளன. ஆனால் பால்வெளியில் அவை கிடையாது.

pixabay




 

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்