இடுகைகள்

இனவேற்றுமை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

அறிவியலில் இனவேற்றுமை காட்டும் இங்கிலாந்து! - எழுத்தாளர் ஏஞ்சலா சைனி

படம்
என் முன்னோர்கள் என்பவர்கள் என் பெற்றோர்கள் மட்டுமே! நேர்காணல் ஏஞ்சலா சைனி இந்தியாவை பூர்விகமாக கொண்ட அறிவியல் எழுத்தாளர். இங்கிலாந்தில் வாழும் இவர், அங்கு அறிவியல் துறையில் நிகழும் இனரீதியான பல்வேறு பிர்சனைகளை தான் எழுதியுள்ள புதிய நூலான சுப்பீரியர் தி ரிடர்ன் ஆப் தி ரேஸ் சயின்ஸில் கூறியுள்ளார். நீங்கள் ஒரு இந்தியர் என்பதால் இனவெறுப்பை சந்தித்திருக்கிறீர்களா? நான் பள்ளியில் படிக்கும்போது இனவெறுப்பு சம்பவங்களைச் சந்தித்துள்ளேன். இங்கு இனவெறுப்பு என்பது சாதாரண பேச்சுகளிலிருந்து தொடங்குகிறது. நான் லண்டனின் தென்கிழக்குப் பகுதியில் வசிக்கிறேன். இங்கு அனைத்து வித மக்களும் வாழ்கிறார்கள் என்று கூறிவிட முடியாது. நீங்கள் இந்த நூலை எழுவதற்கான காரணம் என்ன?  1930 களில் ஜெர்மன் நாஜிகள், ஆரியர்களின் இனத்தூய்மை என்ற வாத த்தை கையில் எடுத்தனர். இன்று உலகம் அதே வழியில் பயணித்து வருகிறது. வலது சாரி பாபுலிச அரசுகள் தங்களது அரசியல் வெற்றிக்காக அனைத்து துறைகளிலும் இனவாதத்தை தூண்டி வருகின்றனர். உயிரியல் அடிப்படையில் அறிவியல் அமைப்புகளிலும் இனவாதம் புகுந்துள்ளதை விளக்கவே இந்