இடுகைகள்

விமர்சனப்பகிர்வுகள் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

நூல் வெளி

35 இந்தியப்பிரிவினை சினிமா யமுனா ராஜேந்திரன் உயிர்மை பதிப்பகம்                                                      பக்சி இந்நூலில் பிரிவினையைப்பற்றிய பிரச்சனைகளைப்பேசும் 7 படங்கள் அவற்றின் கதை, அது ஏற்படுத்திய தாக்கம் பற்றிய முழுமையான விளக்கம் என நம்முன் வைக்கிறது. இதில் நான் முழுமையாக பார்த்திருப்பது தீபா மேத்தா இயக்கிய எர்த் படம் ஒன்றைத்தான். 1999 ல் வந்த இப்படம் பாப்ஸி லபித்வா எனும் பாகிஸ்தான் எழுத்தாளர் எழுதிய Cracking India   எனும் நாவலை மூலமாக கொண்டது. இதில் வரும் காட்சிகள், பிரிவினை கலவரங்களை சூழல்களை ஓரளவு உணர்த்தும்படியான காட்சிகளைக்கொண்டுள்ளன என்று கூறலாம். கதையைக்கூறும் லெனி தன் உறவினரான சிறுவனோடு எதிரில் உள்ள சிறுவனோடு நிகழ்த்தும்   காட்சி எனக்கு பிடித்தமானது என்பேன்.   லெனியாக நடித்திருக்கும் சிறுமியின் நடிப்பில் துக்கம், மகிழ்ச்சி, வலி என   அத்தனையையும் அந்த முகம் வெளிப்படுத்துகிறது. அமீர்கான் முஸ்லீம் மக்கள் இந்துமக்களை கொன்று குவிப்பதை சிரிப்புடன் ரசிக்கும் காட்சியில் பதறும் நந்திதாதாஸின் முகபாவம் ஒன்றேபோதும்; அவரது நடிப்பிற்கு சான்றுகூற. இது