இடுகைகள்

குருப்போ லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மாடர்ன் பிரெட்டின் கதை! - இந்தியா, சிங்கப்பூர், மெக்சிகோ என மூன்று நாடுகளை சுற்றி வந்த பிரெட்!

படம்
  இந்திய பிரெட்டின் கதை மாடர்ன் பிரெட்டைப் பற்றி தெரியாதவர்கள் கூட அதனை ஒருமுறையாவது சாப்பிட்டிருப்பார்கள். அந்தளவு ஏராளமான வெரைட்டிகளில் பிரெட்டையும், பன்களையும் விற்றுவருகிற தனியார் நிறுவனம் அது. 1965ஆம் ஆண்டு மத்திய அரசால் சென்னையில் தொடங்கப்பட்ட நிறுவனம் இது. பின்னாளில் இங்கிலாந்தைச் சேர்ந்த யூனிலீவர் நிறுவனத்திற்கு விற்கப்பட்டது. குறைந்த விலைக்கு விற்கப்பட்ட மத்திய அரசின் நிறுவனம் என்ற சர்ச்சை இன்றுவரை தீரவில்லை. மத்திய அரசு தொடங்கி நடத்திய உணவு நிறுவனம், லாபகரமாக இயங்கியது பலருக்கும் ஆச்சரியம்தான். இதனை 2000ஆம் ஆண்டில் தேசிய ஜனநாயக முன்னணி தலைமையிலான அரசு சுருக்கமாக பாஜக அரசு முதலீடுகளைக் குறைத்துக்கொண்டு தனியார் நிறுவனமான ஹெச்யூஎல்லுக்கு விற்றது. இந்த நிறுவனம், மாடர்ன் பிரெட்டை விரிவாக்கி ஏராளமான புதிய  வெரைட்டிகளை கொண்டு வந்தது. பிறகு, 2016இல் சிங்கப்பூரைச் சேர்ந்த ஈக்விட்டி நிறுவனமான எவர்ஸ்டோன் குளோபலுக்கு விற்றது.  தற்போது இந்த நிறுவனம் மெக்சிகோவைச் சேர்ந்த பிரெட் தயாரிப்பு நிறுவனமான குருப்போ பிம்போவுக்கு மாடர்ன் நிறுவனத்தை விற்றுவிட்டது. என்ன விலை என்பது தெரியவில்லை.  குருப்