இடுகைகள்

இரை உணவு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தெரிஞ்சுக்கோ - திமிங்கலம்

படம்
  தெரிஞ்சுக்கோ – திமிங்கலம் ஊரில் உள்ள பெரிய மனிதர்களை, சமகாலத்தில் திமிங்கலம் என குறிப்பிடுகிறார்கள்.பெருசு, சீயான், பெரிய தலைக்கட்டு என்ற வரிசையில் திமிங்கலமும் சேர்கிறது. உண்மையில் கடல் உயிரினமான திமிங்கலத்திற்கு அப்படி என்ன சிறப்பு உள்ளது என பார்ப்போம். பவ்ஹெட் திமிங்கலத்தின் வாய் 2.4 மீட்டர் நீளமானது. அதாவது, மூன்று வயது வந்த மனிதர்களின் வாய்களின் அளவுக்கு பெரியது. ஹம்பேக் திமிங்கலத்தின் எடை 36 டன்னுக்கும் அதிகம். ஸ்பெர்ம் திமிங்கலம் வேட்டையாட செல்லும்போது கடலுக்குள் 3 கி.மீ. தூரம் பயணிக்கிறது. நீலத்திமிங்கலம் 30 மீட்டர் நீளத்திற்கு வளர்கிறது. நீலத்திமிங்கலத்தின் இதயத்தின் எடை 200 கிலோவுக்கு அதிகம். விலங்குகளில் அதிக எடை கொண்ட இதயம் இதுவே. ஸ்பெர்ம் திமிங்கலத்தின் மூளை 7.8 கி.கி எடை கொண்டது. விலங்குகளில் அதிக எடை கொண்ட மூளை இதுவே. பவ்ஹெட் திமிங்கலம், இருநூறு ஆண்டுகள் வாழ்கிறது. நீலத்திமிங்கலத்தின் எடை 150 டன்னுக்கும் அதிகம். அதாவது 32 ஆசிய யானைகளின் எடைக்கு நிகரானது. ஹம்பேக் திமிங்கலம் பாட ஆரம்பித்தால், பாடல் 35 நிமிடங்களுக்கு நீள்கிறது. இந்த திமிங்கலங்கள், இனப்