இடுகைகள்

அபே லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

துப்பாக்கி வன்முறை குற்றங்கள் குறைவாக உள்ள நாடு ஜப்பான்!

படம்
  ஜப்பான் நாட்டில் துப்பாக்கிகளை வாங்குவதற்கும் பயன்படுத்துவதற்கும் நிறைய விதிகள், சட்டங்கள் உள்ளன. குடிமக்கள் ஷாட்கன், ஏர் ரைபிள் மட்டுமே வாங்க முடியும். ஹேண்ட் கன் ரகங்களை வாங்க முடியாது.  துப்பாக்கி வாங்க நினைத்தால் இதற்கான பயிற்சி வகுப்புகளுக்கு செல்லவேண்டும். அடுத்து, எழுத்து தேர்வு எழுதி தேர்ச்சி பெறவேண்டும். பிறகு, துப்பாக்கி சுடும் பயிற்சியில் வெற்றி பெறவேண்டும். இதன் பின்னால், மனநலன் சார்ந்த தேர்வு, சாப்பிடும் மருந்துகள் பற்றிய சோதனை நடைபெறும். இவையன்றி, நமது பின்னணி பற்றிய தேர்வும் உண்டு.  இதெல்லாம் துப்பாக்கி வாங்குவதற்குத்தான். அதற்கு பிறகு இன்னும் சில நடைமுறைகள் உள்ளன.  துப்பாக்கியை அருகிலுள்ள காவல்நிலையத்தில் பதிவு செய்யவேண்டும். துப்பாக்கி பற்றிய தகவல்கள், தோட்டா பற்றியும் கூறவேண்டும். ஆண்டுக்கு ஒருமுறை தோட்டாக்களை காவல் நிலையத்தார் சோதனை செய்வார்கள். துப்பாக்கி பயன்படுத்தும் உரிமத்தை  மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பிக்க வேண்டும். இப்படி புதுப்பிக்கும்போது எழுத்து தேர்வு எழுதவேண்டும்.  தண்டனை என்ன? துப்பாக்கியை வைத்து குற்றங்களை பெரிதாக செய்தால் 15 ஆண்டுகள் சிறை வாசம