சாட் ஜிபிடி மூலம் பாடம் கற்கலாமா கூடாதா?
சாட் ஜிபிடி மூலம் பாடம் கற்கலாமா கூடாதா? கணினி, இணையம் ஆகிய தொழில்நுட்ப முன்னேற்றங்கள் நம் வாழ்க்கையில் நுழைந்தபோது நிறைய மாற்றங்கள் நடந்தன. வேலையிழப்பு, பழைய தொழில்கள் அழிவு இதெல்லாம் நடந்தது. பழையன கழிதல் புதிது கிடையாது. இப்போது அந்த இடத்தை ஓப்பன் ஏஐயின் சாட்ஜிபிடி பிடித்திருக்கிறது. கலிபோர்னியாவில் உள்ள சமூக அறிவியல் ஆசிரியர், பீட்டர் பேக்கன், வகுப்பறையில் சாட்ஜிபிடியைப் பயன்படுத்தி பாடங்களை நேர்த்தியாக நடத்தி வருகிறார். அதை அனுகூலமான வகையில் பயன்படுத்துவதோடு, அதைப்பற்றி ஜூம் மீட்டிங் கூட ஏற்பாடு செய்து பேசியுள்ளார். அனைத்து பாடங்களையும் ஆசிரியரே நடத்தாமல், சில எளிய விஷயங்களை சாட்ஜிபிடியிடம் ஒப்படைத்துவிடலாம் என்பது அவரது கருத்து. பாடங்களை முற்று முழுதாக ஆசிரியர் கற்றுத்தருவது அழுத்தங்கள் நிறைந்த பாடத்திட்டத்தில் இயலாத ஒன்று. அதை சாட்ஜிபிடி மூலம் சாத்தியப்படுத்திக்கொள்கிறார் பீட்டர். தான் நடத்திய ஜூம் சந்திப்பில் கல்வியில் சாட்ஜிபிடி ஏற்படுத்தும் சாத்தியம், அதை எப்படி பயன்படுத்துவது என நாற்பது சக ஆசிரியர்களிடம் விவாதித்திருக்கிறார் பீட்டர். மருத்துவம் தொடங்கி ராணுவ...