இடுகைகள்

ஆயுர்வேதம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஆயுர்வேதத்தை நவீன வடிவில் பயன்படுத்துவதுதான் என்னுடைய ஐடியா - மீரா குல்கர்னி , ஃபாரஸ்ட் எச்ன்ஷியல்ஸ்

படம்
  மீரா குல்கர்னி ஃபாரஸ்ட் எசன்ஷியல்ஸ் மீராவின் நிறுவனமான ஃபாரஸ்ட் எசன்ஸியல்ஸ் 2 லட்ச ரூபாய் முதலீட்டில் தொடங்கப்பட்டது. இன்று இந்த பிராண்டின் பொருட்கள் இந்தியா முழுக்க 80 கடைகளில் கிடைக்கிறது. 190 ஹோட்டல்களுக்கு விநியோகிக்கப்படுகிறது. 120 நாடுகளுக்கு ஏற்றுமதியாகிறது.  ஆர்வம் பிறந்தது எப்படி ? நான் சென்னையில் உள்ள ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் கலைப்படிப்பு படித்தவள். எங்கள் பூர்விகம் உத்தரகாண்ட்டின் டெரி கார்வாய் நகரம். எனக்கு தொடக்கத்தில் இருந்தே அங்கு பிரபலமாக இருந்த ஆயுர்வேத மருத்துவத்தில் ஆர்வம் இருந்தது. எனவே, அதை பயன்படுத்தி சோப்புகள் தயாரிக்க நினைத்தேன்.  எப்படி சாதித்தீர்கள்? எங்கள் பூர்விக ஊரில் இருந்த வைத்தியர்கள், நவீன உயிரி வேதியியலாளர்கள் என பலரையும் ஆலோசனை சொல்லக் கேட்டு த்தான் சோப்புகளை தயாரிக்க தொடங்கினேன். இதில் பயன்படுத்தும் எண்ணெய்கள் அனைத்துமே குளிர்வான முறையில் ஆட்டி எடுத்தவை. இதனால் ஆயுர்வேத தன்மை நாங்கள் செய்யும் பொருட்களில் இருக்கும். அவை மாறாது.  தொழிலாக மாறிய மனதிற்கு பிடித்த விஷயம் என்று கூறலாமா? உண்மைதான். நீங்கள் கூறியபடியே வைத்துக்கொள்ளலாம். நாங்கள் முதலில் ப

வாசனைப் பொருட்களின் வரலாறும் பயன்பாடும் - மஞ்சள், லவங்கப்பட்டை

படம்
  மேற்கத்திய நாடுகள் இந்தியாவுக்கு வந்ததே இங்குள்ள பல்வேறு இயற்கை வளங்களை கொள்ளையடித்து விற்கத்தான். அன்று ஆங்கிலேயர்கள் செய்தனர். இன்று இந்திய தரகர்கள், தொழிலதிபர்கள் வெளிநாட்டு பெரு நிறுவனங்களின் கைக்கூலியாக அதே வேலையை இடைவேளை கூட விடாமல் செய்து வருகின்றனர். அதை விடுங்கள். நாம் இங்கு பேச வந்தது. தெற்காசியாவில் உள்ள வாசனைப் பொருட்கள் பற்றித்தான். கொச்சியை வாசனைப் பொருட்களின் தலைமையகம் என்று கூறுகிறார்கள். அந்தளவு இப்பகுதியில் டச்சுகாரர்கள் ஆட்சி செய்தபோது வாசனைப் பொருட்களின் விற்பனை நடைபெற்றிருக்கிறது. முக்கிய வாசனைப் பொருட்கள் என்னென்ன? இன்றும் செட்டிநாடு ஓட்டல்களில் பயன்படுத்தும் பொருட்கள்தான். நம் குடலில் அழற்சி ஏற்படுத்தும் தன்மை கொண்டவைதான். அவை குறிப்பிட்ட அளவைக் கொண்டவை அல்ல. மற்றபடி மருந்தாக பயன்படுத்தினால் மகத்துவம் கொண்டவைதான்.  மிளகு, ஏலக்காய், கிராம்பு, மஞ்சள் இவைதான்.  தெற்காசிய வாசனைப் பொருட்கள் ஆப்பிரிக்கா, அரபு நாடுகள் ஆகியவற்றுக்கு இந்தோனேஷிய மாலுமிகளால் கொண்டு செல்லப்பட்டன. பதினைந்தாம் நூற்றாண்டில்தான் வாஸ்கோட காமா ஐரோப்பாவிற்கும் இந்தியாவிற்குமான வணிக வாசலைத் திறந்

பெருந்தொற்று காலத்தில் தொழிலதிபர்கள் என்ன நிர்வாகத்திட்டங்களை பின்பற்றினார்கள்? - வணிக மந்திரம் - டாடா, டாபர், நெஸ்லே

படம்
                வணிக மந்திரம் சி.கே. வெங்கட்ராமன் தலைவர், தி டைட்டன் கம்பெனி எனக்கு இப்போதைக்கு இருக்கும் பிரச்னை, மக்கள் பெருந்தொற்று காலத்தில் எப்படி பண்டிகைகளை கொண்டாடுவார்கள். உடைகளை உடுத்துவார்கள் என்பதுதான். எங்களது விற்பனைக்குழு, புதிய வழியில் வாடிக்கையாளர்களை அணுகுவதற்கான பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது. இன்று உணவகங்களுக்கு செல்வது, திருமண பார்ட்டிகள் ஆகியவை நடைபெறுவது அரிதாகிவிட்டது. இன்று வீட்டில் பணியாற்றும் மக்களுக்கு நாம் மகிழ்ச்சியை கொடுப்பதற்கு யோசித்து வருகிறோம். அண்மையில் ஒரு வீடியோவை நான் பார்த்தேன். ஸ்காட்லாந்து நாட்டைச் சேர்ந்த தம்பதியினர், தங்கள் குழந்தைகளுக்காக உணவகம் ஒன்றை உரு்வாக்கினர். இதில் மனைவி சர்வராகவும், கணவர் சமையற்கலைஞராகவும் இருந்தனர். ஹோட்டலுக்கு உண்டான அனைத்து விஷயங்களும் இதில் இடம்பெற்றிருந்தன. உண்மையில் இதுபோன்ற சூழலை நாம் வீட்டில் உருவாக்க வேண்டும் என்பதை நான் உணர்ந்தேன்.  டிஜிட்டலுக்கு மாறுவோம்! suresh narayanan சுரேஷ் நாராயணன், தலைவர், நெஸ்லே இந்தியா பெருந்தொற்று காலம் வாடிக்கையாளர்களின் மனநிலையை பெருமளவு மாற்றியுள்ளது. இன்று மக்கள் நான்கு சு