இடுகைகள்

தேக்கம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

அரசு பொதுத்துறை பங்குகளை விற்பதே சரியானது! - அரவிந்த் பனகரியா

படம்
நியூஸ்கிளிக் வாகனத்துறை, நுகர்வுப்பொருட்கள் ஆகியவற்றின் விற்பனை வீழ்ச்சி இந்தியப் பொருளாதாரத்தைத் தடுமாற வைத்துள்ளது. ஆனால் அரசு, பொதுத்துறை நிறுவனங்களிலுள்ள பங்குகளை குறைத்துக்கொண்டால் இழப்பிலிருந்து தப்பிக்க முடியும் என பொருளாதார வல்லுநர்கள் கூறிவருகின்றனர். வாகனத்துறை உற்பத்தி தேக்கமடையத் தொடங்கியதும், அரசு நிதியளித்து உதவ வேண்டும் என்ற குரல்கள் அத்துறையிலிருந்து எழத் தொடங்கிவிட்டன. உண்மையில் அரசு தாராளமயமாக்கல் கொள்கைக்காக இறக்குமதிக் கொள்கைகளைத் தளர்த்தியுள்ளது. ஆனாலும் உள்நாட்டு உற்பத்தியைக் காக்க, அதிகளவு சுங்கவரியை வசூலித்து வருகிறது. இதன்காரணமாகவே, இந்திய வாகனத்துறை உற்பத்தி தேக்கத்தால் பெரியளவு பாதிக்கப்படவில்லை. வெளிநாடுகளிலிருந்து இறக்குமதியாகும் சொகுசு கார்களுக்கு 100 சதவீத சுங்க வரி உண்டு. அதிலும் 28 லட்சத்திற்கும் குறைவான கார்களுக்கு 60 சதவீத வரியும், பயன்படுத்திய கார்களுக்கு 125 சதவீத வரியும் இந்திய அரசு விதிக்கிறது. இதன் விளைவாக, சிறிய கார்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் இந்தியாவில் இன்றும் மூடப்படாமல் இயங்கி வருகின்றன. பொருளாதார தேக்கம் என்பது

தேக்கத்திற்கு காரணம் வாகன உற்பத்தியாளர்கள்தான்! - ருத்ரதேஜ் விளக்கம்!

படம்
நேர்காணல் ருத்ரதேஜ் பிஎம்டபிள்யூ இயக்குநர் உலகளவில் சொகுசு கார்களின் விற்பனை 4 சதவீதமாக இருக்கிறது. இந்தியாவில் விற்பனை 1 சதவீதமாக உள்ளது. என்னதான் பிரச்னை? கார் விற்பனை தேக்கம் என்பது அரசு உருவாக்கியதல்ல. கார் உற்பத்தியாளர்களால் உருவானது. ஒரு காரை பயனர் வாங்குகிறார் என்றால் அதில் முதலில் பார்ப்பதாக விலை எனும் அம்சம் இருக்கிறது. குறைந்த விலை என்றால் அது தவறாக சந்தைப்படுத்தப்படுகிறது என்றாகிறது. கார் வாங்குவது என்பது ஒரு வாழ்நாள் சாதனை போல மாற்றி வைத்திருக்கிறார்கள். எங்களுடைய கார்களை வாங்குபவர்கள் விலையை பொருட்டாக கொள்ளாதவர்கள்தான். கார் வாங்குபவர்களுக்கான ஊக்கத்தொகை பற்றி தங்கள் கருத்து என்ன? எங்களுடைய கார்களை வாங்குபவர்களில் 35 சதவீதம் கார்ப்பரேட் ஆட்கள்தான். மீதி 15 சதவீதம் பேர் பிற துறையினர், மக்கள் என வைத்துக்கொள்ளலாம். தற்போது விழாக்காலம் என்பதால் என்பதால் விற்பனை அதிகரிக்க வாய்ப்புள்ளது. எங்களுடைய பிராண்டை மக்கள் மனதில் பதிய வைப்பதே எங்களுக்கு முக்கியம். இப்போது நாங்கள் மற்றொரு போட்டியாளருடன் போட்டியிடப் போவதில்லை. காரணம், அப்படியொரு உறுதியான போட்டியாளர் ச

வீழ்ச்சியில் சிக்கிய இந்திய ஆட்டோமொபைல் துறை!- பிரச்னை என்ன?

படம்
பொருளாதாரம் வாகனத்துறை சரிவிலிருந்து மீளுமா? இந்தியாவின் ஆட்டோமொபைல் துறை உற்பத்தி மற்றும் விற்பனையில் பெரும் சரிவைச் சந்தித்துள்ளது. இதற்கு இந்திய அரசு உயர்த்திய ஜிஎஸ்டி வரியும், வாகனங்களின் பதிவுக்கட்டண உயர்வும் முக்கிய காரணமாக உள்ளது. பத்து முதல் இருபது லட்சம் ரூபாய் மதிப்பிலான வாகனங்களுக்கு பத்திரப்பதிவுக்கட்டணம் 8-16 சதவீதம் உயர்ந்துள்ளது. வாகனத்துறையில் நேரடியாகவும் மறைமுகமாகவும் 3கோடியே 20 லட்சம்பேர் பணியாற்றி வருகின்றனர். இத்துறையின் மதிப்பு 8.3 லட்சம் கோடியாகும். 2021ஆம் ஆண்டில் உலகளவில் மூன்றாவது பெரிய வாகனத்துறையாக இந்தியா மாறும் என்று ஆய்வுகள் கூறிவந்த நிலையில்தான் பெரும் சரிவு நடந்துள்ளது. அதிகரிக்கும் வேலை இழப்பு! விழாக்காலங்களில் அதிகரிக்கும் கார் மற்றும் பைக் விற்பனை கூட இந்த ஆண்டு மந்தமானதால், வேலையிழப்பு அபாயமும் ஏற்பட்டுள்ளது. ”ஆட்டோமொபைல் துறையில் முதலீடு இல்லை; தேவையும் இல்லை. வளர்ச்சி வானத்திலிருந்தா வரும்?” என்கிறார் பஜாஜ் ஆட்டோ நிறுவனரான ராகுல் பஜாஜ். இவரின் கூற்றை ஆமோதிக்கும் விதமாகவே கார் மற்றும் பைக் விற்பனை நிலவரங்கள் திகிலூட்டுகின்றன.