இடுகைகள்

உக்கிரப்புத்தன்! லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

வாராக்கடனில் தவிக்கும் முத்ரா திட்டம்!

படம்
முத்ரா திட்டத்திலும் வாராக்கடன்!  இந்திய அரசு தன் சாதனைத்திட்டங்களில் ஒன்றாக மார்தட்டும் பிரதான்மந்திரி முத்ரா யோஜனா(2015,ஏப்.8) திட்டத்திலும் அபரிமிதமாக வாராக்கடன் அளவு அதிகரித்துள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளாக இந்தியாவில் 7.28 கோடி மக்களுக்கு முத்ரா கடன் வழங்கப்பட்டு வேலைவாய்ப்பு விண்ணை எட்டியதாக பிரதமர் மோடி தமது அரசை தானே உச்சிமுகர்ந்து பாராட்டிக்கொண்டார். ஆனால் இத்திட்டத்தில் 13.85 லட்சம் பேர்களுக்கு வழங்கப்பட்ட ரூ.11 ஆயிரம் கோடி வாராக்கடனாக மாறியுள்ளதை தகவலறியும் உரிமைச்சட்டத்தில் தேசிய நாளிதழ் பெற்ற அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. முத்ரா யோஜனாவில் ஷிக்சு(ரூ.50 ஆயிரம்), கிஷோர்(ரூ.5 லட்சம் வரை), தருண்(ரூ.10 லட்சத்திற்குள்) என மூன்று பிரிவுகளின் கீழ் ரூ.10 லட்சம் வரையிலான கடன்களை வங்கிகள் தொழில்முனைவோர்களுக்கு வழங்கின. இதில் ரூ.10 ஆயிரத்து 915 கோடி வாராக்கடனாக மாறியுள்ளதை அரசு வெற்றி என்ற ஒற்றைச்சொல்லில் மறைக்க முயல்கிறது. வாராக்கடன் அதிகம் உள்ளது ரூ. 50 ஆயிரத்திற்கும் அதிகமான தொகையை மக்களுக்கு வழங்கிய ஷிக்சு பிரிவு ஆகும். “ஹரியானா முதல்வர் தேவிலால் இதுபோன்ற திட

பயணிகளை காக்குமா ஜீரோ எஃப்ஐஆர்?

படம்
ஜீரோ எஃப்ஐஆர்!  ரயில்களில் செல்லும்போது பாலியல் வல்லுறவு, திருட்டு குறித்து புகாரளிக்க இனி அடுத்த ரயில்நிலையம் வரும்வரை காத்திருக்க வேண்டியதில்லை. உடனடியாக புகாரளிக்க ஜீரோ எஃப்ஐஆர் எனும் புதிய வசதியை இந்திய ரயில்வே விரைவில் நாடெங்கும் அமுல்படுத்தவிருக்கிறது. ஜீரோ எஃப்ஐஆர் ஆப் மூலம் ரயிலில் நடக்கும் திருட்டு, வல்லுறவு குறித்த நிகழ்வுகளை இணையம் அல்லது இணைய    வசதியின்றியும் பதிவு செய்தால் ரயில்வே காவல்படை உடனடியாக ஆக்சனில் இறங்கி நீதிபெற்றுத்தரும். தற்போது மத்தியப்பிரதேசத்தில் சோதனை முறையில் ஜீரோ எஃப்ஐஆர் வசதி செயல்பாட்டுக்கு வந்துள்ளது. இதுமட்டுமின்றி டிடிஇயிடம் புகார் படிவங்களை நிரப்பித் தந்தும் குற்றங்களை போலீசுக்கு பதிவு செய்யலாம். குற்றங்கள் எந்த இடத்தில் நிகழ்ந்ததோ அந்த போலீஸ் ஸ்டேஷனில் குற்றவிவரங்கள் பதிவாக விசாரணை தொடங்கும் என்பதை குறிக்கவே ஜீரோ எஃப்ஐஆர் என்று குறிப்பிடுகின்றனர்.

மம்தாவுடன் இணையும் மோடி!

படம்
மம்தாவுடன் இணையும் மோடி! அரசியலில் வேறுபட்டு நின்றாலும் மாநில மக்களுக்கான அரசு திட்டங்களில் பிரதமர் மோடியின் ஆயுஷ்மான் பாரத்தும், மேற்கு வங்க முதல்வர் மம்தாவின் ஸ்வஸ்திய சதியும் விரைவில் இணையவிருக்கின்றன. 2016 ஆம் ஆண்டு மேற்குவங்க முதல்வர் மம்தாவினால் ஸ்வஸ்திய சதி மருத்துவ திட்டம் காப்பீடு பெற்றவரின் பெற்றோர்களுக்கும் மனைவிக்கும் விரிவுப்படுத்தப்பட்டது. தற்போது அமுலாகிய இந்திய அரசின் ஆயுஷ்மான் திட்டத்திற்கு 60:40 என மத்திய அரசும் மாநில அரசும் நிதியளிக்கவிருக்கின்றன. மேற்குவங்காளத்தில் மத்திய அரசின் ஆயுஷ்மான் திட்டம் ஸ்வஸ்திய சதி திட்டத்தின் பெயரிலேயே இணைந்து அமுலாகும் என மம்தா அறிவித்திருக்கிறார். தற்போது மேற்கு வங்கத்திலுள்ள 47 லட்சம் பேர்களுக்கும் உதவும் திட்டம் இந்திய அரசின் ஆயுஷ்மான் திட்டத்துடன் இணைந்தபின் 6 கோடிப்பேருக்கு விரிவுபடுத்தப்படுகிறது. காப்பீட்டுத் தொகையும் ரூ.5 லட்சமாக உயர்கிறது.   ஆயுஷ்மான் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டபோது, மாநில அரசின் திட்டங்கள் இருக்கும்போது மத்திய அரசின் சுகாதார தேவையில்லாத வெட்டிச் செலவு என மேற்கு வங்காள முதல்வர் மம்தா பா

கிழக்கு மாநிலங்களுக்கு புதிய டைம்!

படம்
வடகிழக்கு மாநிலங்களுக்கு தனி டைம்! – இருவகை கடிகார நேரங்களை இந்தியா பயன்படுத்தலாம் என சிஎஸ்ஐஆர் தேசிய இயற்பியல் ஆய்வக விஞ்ஞானிகள், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்துக்கு பரிந்துரை செய்துள்ளனர். வடகிழக்கு மாநிலங்களில் சூரிய உதயம் முன்னமே வந்துவிடுவதால் நேரநிலையை மாற்றியமைத்தால் அவர்களுக்கு உதவும் என கடந்தாண்டு மார்ச்சில் பதிவான பொதுநல மனுவை கௌகாத்தி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. தற்போது ஆய்வாளர்கள் பரிந்துரைத்துள்ள IST-I(UTC + 5.30 h) and IST-II (UTC + 6.30 h) நேரமுறை சூரிய உதயம், அஸ்மனத்தை பொறுத்தது, மின்சார சிக்கனம், ரயில்வே விபத்துகளையும் குறைக்கும் என கூறியுள்ளனர். “வடகிழக்கு மாநிலங்களில் முன்னமே சூரிய உதயம் ஏற்படுவதால் தற்போதைய நேரமுறைப்படி சில மணிநேரங்களை இழப்பதோடு பனிக்காலங்களில் அதிக மின்சாரம் இழப்பாகிறது. தீர்ப்பு அரசின் கையில்தான் உள்ளது” என்கிறார் தேசிய இயற்பியல் ஆய்வக தலைவர் டாக்டர் டி.கே. அஸ்வால்

குற்றங்களை விளம்பரம் செய்யலாமா?

படம்
குற்றங்களை விளம்பரம் செய்யலாம்! குற்றப்பின்னணி கொண்ட எம்எல்ஏ, எம்பிகள் தங்கள் மீதான குற்றவழக்குகளை கட்சிக்கு தெரிவிப்பதோடு நாளிதழ்களிலும் விளம்பரம் செய்யலாம் என தேர்தல் ஆணையம் விநோத அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தேர்தல் சட்டப்படி படிவம் 26 என்பதை நிரப்புவதோடு தேர்தல் பிரசாரத்தின்போது குற்றப்பின்னணி வேட்பாளர்கள் தங்கள் குற்றங்களை டாப் 3 பத்திரிகைகளில்   மூன்று வெவ்வேறு நாட்களில் விளம்பரம் செய்யலாம் என தேர்தல் ஆணையம் ஐடியா கொடுத்துள்ளது. மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம், தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் வரும் நவம்பர் – டிசம்பர் மாதங்களில் நடைபெறும் சட்டமன்ற தேர்தல்களில் தேர்தல் ஆணையத்தின் புதிய விதிமுறைகள் அமுலாகின்றன.

மொழிபெயர்ப்பு ஏற்படுத்திய பதற்றம்!

படம்
மொழிபெயர்ப்பு கோளாறு! வனவிலங்குகளுக்கு உணவுப்பொருட்கள் வாங்கும் ஏல விளம்பர குளறுபடியால், கடுமையான விமர்சனங்களை மும்பை மாநகராட்சி எதிர்கொண்டு வருகிறது. மும்பையில் கடந்த 2015 ஆம் ஆண்டு மாட்டிறைச்சி விற்பதும் உண்பதும் சட்டவிரோதமாக்கப்பட்டு ரூ.10 ஆயிரம் அபராதமும், ஐந்து ஆண்டு சிறைதண்டனை என அறிவிக்கப்பட்டுள்ளது. எருமை இறைச்சி விற்பனை தடையின்றி அனுமதிக்கப்பட்டது.     மாநகராட்சி பைகுல்லா வனவிலங்கு பூங்காவுக்கு உணவுப்பொருட்களை பெறுவதற்கான ஏல அறிவிப்பை பல்வேறு மொழிகளில் வெளியிட்டது.  அதில் புலி, கழுதைப்புலிகளுக்கான எருமை இறைச்சி என்பதை மராத்தி, குஜராத்தி, இந்தி, ஆங்கில பத்திரிகைகளில் வெளியிடும்போது, குஜராத்தி, ஆங்கில விளம்பரங்களில் பசு இறைச்சி என மாறி அச்சிட்டு வெளியாக பலரும் அதிர்ச்சியடைந்தனர். விளம்பரம் பற்றி புகார்கள் குவிய, மாநகராட்சி கமிஷனர் அஜய் மேத்தாவுக்கு பிஎம்சி பாஜக உறுப்பினரான மனோஜ் கோடக், விளம்பரத்தை தடை செய்யவும், நேர்ந்த பிழையை ஆராய வற்புறுத்தியும் கடிதம் எழுதியுள்ளார்.         

தாறுமாறு பேச்சுக்கு மன்னிப்பு போதுமா?

படம்
சபரிமலை நொறுங்கும்! சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு வயது பேதமின்றி அனைத்து பெண்களும் செல்லலாம் என உச்சநீதிமன்றம் கூறியதிலிருந்து போகலாம், போக கூடாது என விவாதங்களும் போராட்டங்களும் கேரளாவில் அதிகரித்து வருகின்றன. “பெண்கள் சபரிமலை கோவிலுக்குள் நுழைந்தால் கோவில் இரு துண்டுகளாக உடைந்து நொறுங்கும்” என சர்ச்சை வெடியை கொளுத்தியுள்ளார் கேரள நடிகரான கொல்லம் துளசி. கேரள அரசு உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து அப்பீல் செய்யாத நிலையில் கேரள பாஜக, காங்கிரஸ் கட்சிகள் பெண்கள் கோவிலுக்குள் நுழைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களை நடத்தி வருகின்றன. ‘சேவ் சபரிமலா’ என்ற பிரசாரத்தை தொடங்கிவைத்த நடிகர் கொல்லம் துளசி, “படித்த பெண்கள் சபரிமலைக்கு செல்லமாட்டார்கள் என்பதை அறிவேன். நாம் பாடும் அய்யப்ப கீர்த்தனைகள் உச்சநீதிமன்ற முட்டாள்களுக்கு கேட்கட்டும்” என வாய்சவடால் விடுத்தவரின் அருகில் பாஜக கட்சி மாநில தலைவர் ஸ்ரீதரன் பிள்ளை அமர்ந்திருந்தார். பின்னர் தான் பேசிய அவதூறு பேச்சுக்கு பிற பாஜக தலைவர்கள் போலவே நடிகர் துளசி உடனடி மன்னிப்பு கேட்டுவிட்டார். நீதிபதிகளை முட்டாள் என்பதற்கு தண

குழந்தைகளுக்கான உதவி எண்ணுக்கு நேர்ந்த அவலம்!

படம்
பூனைச் சகோதரிகள்! இஸ்‌ரேலின் தாக்குதல்களால் சிதைந்த காசா எல்லைப்புற பகுதியில் ஆதரவின்றி சுற்றித்திரிந்த 35 பூனைகளை மரியம், ரயிஷா, எல்ஹம் அல்பர் ஆகிய மூன்று சகோதரிகள் பாதுகாத்துள்ளனர். மூன்று சகோதரிகளும் அல்ஷாதி அகதிகள் முகாமில் சுற்றித்திரிந்த 35 க்கும் மேற்பட்ட பூனைகளை காப்பகம் அமைத்து உணவு, சிகிச்சை கொடுத்து பராமரித்து வருகின்றனர். “பூனைகள் எங்கள் குடும்பத்தின் உறுப்பினர்களாகவே மாறிவிட்டன. பூனைகளை பராமரிப்பதில் எங்களுடைய குடும்பமும் ஆதரவளித்து உதவுகிறது” என்கிறார் மூன்று சகோதரிகளில் இளையவரான மரியம். காசாவிலுள்ள இஸ்லாமிய பல்கலைக்கழக பட்டதாரியான மரியம், ஆசிரியர் வேலைக்கான தேடுதலில் இருந்தார். சாலையில் சென்றுகொண்டிருந்தபோது, சாலையைக் கடந்த பூனை காரில் அடிபட்டு குற்றுயிராக விழுந்ததைப் பார்த்து காப்பாற்றினார். அன்றிலிருந்து அப்பகுதியில் காயம்பட்ட ஆதரவற்ற பூனைகளை பாதுகாக்க தொடங்கினார் மரியம். இவரின் ஆர்வத்தை மூத்த சகோதரிகளான ரயிஷா, எல்ஹம் அல்பர் ஆகியோரும் அவர்களின் பிள்ளைகளும் பின்பற்ற பூனைகளின் காப்பகம் மெல்ல உயிர்பெற்றிருக்கிறது. தற்போது பராமர

செக்ஸ் தவறுகளுக்கு தண்டனை இதுதான்!

படம்
செக்ஸ் தவறுக்கு சிறை உறுதி!  மேலைநாடுகள் மட்டுமல்ல இந்தியாவிலும் சினிமா, பத்திரிகை வட்டாரங்களை #மீ டூ குற்றச்சாட்டுகள் உலுக்கி வருகின்றன. பெண்கள் மீதான அத்துமீறல்களுக்கு ஐந்து ஆண்டுகளுக்கு சிறைதண்டனை உண்டு என்பதால் ஜொள்ளு விடும் ஆண்களே கவனம்! 1997 ஆம் ஆண்டு விசாகா விதிகளின் படி பணியிடங்களுக்கான பாலியல் அத்துமீறல்களை உச்சநீதிமன்றம் வரையறுத்தது. டிசம்பர் 2013 ஆம் ஆண்டு பாலியல் குற்றங்களை தடுப்பது, தண்டிப்பது, இழப்பீடு ஆகியவற்றுக்கான விதிமுறைகள்(கூடுதலாக பிரிவு 354) வகுக்கப்பட்டு சட்டம் வெளியானது. பெண்களை கை, கால்களால் தொடுவது, ஆபாச படங்களை காண்பிப்பது, வலுக்கட்டாயமான பாலுறவுக்கு நிர்பந்தம், இவை சொற்களால் பாலுறவுக்கு கட்டாயப்படுத்துவதும் தண்டனைக்குரிய குற்றங்கள்தான். பாலியல்புகார் எழும்போது பத்து பேர் கொண்ட ஊழியர்களின் குழு, அமைக்கப்பட்டு இதனை விசாரிக்கலாம். இதில் 4 பேர் கட்டாயம் பெண் உறுப்பினர்களாக இருப்பது அவசியம். பெண்களை பாலியல்ரீதியில் தீண்டுவதற்கு குற்றவியல் சட்டம் 2013 படி, 1-5 ஆண்டுகளும், பெண்களை அவர்களுக்கு தெரியாமல் புகைப்படம் எடுத்து விநியோகிப்பதற்கு சட்டம்

ரயில்வேயில் கடத்தப்படும் குழந்தைகள்!

படம்
கடத்தல் குழந்தைகளை மீட்கும் ரயில்வே! – இந்தியா முழுக்கவுள்ள ரயில் நிலையங்களில் தினசரி 30 கடத்தல் குழந்தைகளை ரயில்வே போலீஸ்(RPF) மீட்டுவருகிறது. கடந்தாண்டிலிருந்து இவ்வாண்டுவரை (ஆகஸ்ட்வரை) 20 ஆயிரம் குழந்தைகளை கடத்தல் கண்ணியிலிருந்து ரயில்வே போலீஸ் மீட்டு சாதனை செய்துள்ளது. “குற்றம் நடைபெற்றபின் குழந்தைகளை பிடிப்பது என்ற நிலை மாறி, உதவி தேவைப்படும் குழந்தைகளை முன்னமே கண்டறிவதாக முன்னேறியுள்ளோம் ” என்கிறார் ரயில்வே போலீஸ்துறை தலைவரான ஜெயாசிங்.   கடந்தாண்டு ரயில்வே போலீசார் மீட்ட 11 ஆயிரத்து 178 சிறுவர்களில் 8,963 பேர் சிறுவர் காப்பகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். தினசரி 30 பேர் என மாதம் ஆயிரம் சிறுவர்களை மீட்டிருக்கிறது ஆர்பிஎஃப். முந்தைய ஆண்டுகளில் மாதத்திற்கு 581 சிறுவர்கள்(2016) கடத்தப்படும் எண்ணிக்கை அண்மையில் அதிகரித்து வருவது கவலையான செய்தி. 2014-2018 காலகட்டத்தில் ரயில்நிலையத்தில் மீட்கப்பட்ட சிறுவர்களின் எண்ணிக்கை 41 ஆயிரத்து 072. இதில் பெரும்பாலான சிறுவர்கள் காணாமல் போன புகாரின் கீழ் தேடப்பட்டு வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 2 எட்டு லிட்டர

தனியொரு நீதிபதி! - மனசாட்சியின் குரல்

படம்
தெலுங்கு தேசமாகும் அமெரிக்கா! அமெரிக்காவின் மக்கள்தொகையில் பாதிக்கும் மேல் பிறமொழி மக்கள்தான். அண்மையில் இவர்களில் பெரும்பாலானவர்கள் பேசும் மொழியை கண்டறிய குடியேற்ற மையம் செய்த ஆய்வில் பெங்காலியுடன் தெலுங்கு மொழி(57%-2000-17) முன்னிலை வகிக்கிறது. தமிழின் விகிதம் 55%. பெங்காலி மொழியுடன் சரிக்குசமமாக போட்டியிடும் தெலுங்குமொழி ஆந்திரா, தெலுங்கானாவிலிருந்து அமெரிக்காவுக்கு வந்து அறிவியல்துறைகளில் பணியாற்றுபவர்களால் முன்னணி இடத்தை வகிக்கிறது. 2000-17 வரையிலான காலகட்டத்தில் 2,22,977- 4,15,414 என தெலுங்கு குடியேற்றவாசிகளின் எண்ணிக்கை   அதிகரித்துள்ளது. இதோடு இந்தி(8 லட்சத்திற்கும் அதிகம்), பெங்காலி, தமிழ் ஆகிய மொழிகளும் பெரும்பான்மை மக்களால் பேசப்பட்டு வருகிறது. அமெரிக்க மக்கள்தொகையில் ஆங்கிலம் அல்லாத மொழிகளை பேசுபவர்களின் அளவு 21.8%. வடக்கு டகோடா, உடா, டி.சி, வியோமிங் ஆகிய வட்டாரங்கள் பிறமொழி மக்களின் கோட்டையாக திகழுகின்றன. 2 நகரை சுத்தமாக்கிய ஐஏஎஸ் அதிகாரி சத்தீஸ்கரின் சர்குஜா மாவட்டத்தைச் சேர்ந்த அம்பிகாபூர் நகரெங்கும் துளி குப்பையின்றி பளிச்சென சுத்

தீவிரவாதக்குழுக்களில் இணையும் காஷ்மீர் இளைஞர்கள்!

படம்
தீவிரவாத குழுக்களில் இளைஞர்கள்! ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதக்குழுக்களில் இணையும் இளைஞர்களின் எண்ணிக்கை கிடுகிடுவென அதிகரித்து வருகிறது. இவ்வாண்டில் மட்டும் 130 இளைஞர்கள்(88-2016) டெரர் குழுக்களில் அட்மிஷன் போட்டுவிட்டனர். காஷ்மீரின் தெற்கு பகுதியிலுள்ள சோபியன் மாவட்டத்தில் மட்டும் 35 இளைஞர்கள் பல்வேறு தீவிரவாதக்குழுக்களில் இணைந்துள்ளனர். பெரும்பாலும் இந்த அமைப்புகளின் பாஸ், உலகளாவிய தீவிரவாத அமைப்பான அல்கொய்தா.   ஸாகிர் மூசா தலைமை வகிக்கும் அல்கொய்தா நேச அமைப்பான அன்சார் கவாத் ஹிந்த் எனும் அமைப்பு இளைஞர்களை அதிவேகமாக உள்ளிழுத்து ஜிகாதிகளாக்கி வருகிறது.  முன்னாள் கேரம் சாம்பியனும், பொறியியல் பட்டதாரியுமான மூசா, ‘ஷரியத் யா ஷகாதத்’ எனும் கோஷத்தை முன்வைத்து ஹூரியத் தலைவர்களை மிரட்டி இளைஞர்களை மூளைச்சலவை செய்து வருகிறார். ஷோபியன், புல்வாமா, அனந்த்நாக், குல்காம், அவந்திபோரா ஆகிய மாவட்டங்களிலிருந்து பெருமளவு இளைஞர்கள் டெரர்குழுக்களில் ஐக்கியமாகியுள்ளனர். 2 40 லட்ச ரூபாய் பாக்கெட் வாட்ச்! டைட்டானிக் கப்பல் மூழ்கி 106 ஆண்டுகளுக்கு பிறகு அதிலிருந்து கைப்பற்றப்ப

இந்தியாவின் முதல் இந்து கோர்ட்!

படம்
காந்தியை கொன்றிருப்பேன்! உத்தரப்பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள முதல் இந்து நீதிமன்றத்தில் பேராசிரியை, “கோட்சேவுக்கு முன்பாக நான் பிறந்திருந்தால் காந்தியை கொன்றிருப்பேன்” என பேசி திகிலூட்டியுள்ளார். அண்மையில் உ.பியின் மீரட் நகரில் இந்து மகாசபா(AIHM), சார்பில் முதல் இந்து நீதிமன்றம் அமைக்கப்பட்டது. அதன் முதல் நீதிபதியாக கணித பேராசிரியை பூஜா சாகுன் பாண்டே என்ற பெண்மணி நியமிக்கப்பட்டார். இவ்விழாவில் “இந்திய- பாகிஸ்தான் பிரிவினையை தூண்டி இந்துக்களை பலிவாங்கிய காந்தியை கோட்சேவுக்கும் முன்பாக பிறந்திருந்தால் நானே கொன்றிருப்பேன்” என தடாலடியாக பேசிய கூட்டத்தின் அசல் தேசபக்தர்களிடம் கைதட்டல்களை பெற்றுள்ளார். மேலும் தேசத்தந்தை என்ற பட்டத்தையும் காந்தியிடமிருந்து பறிக்கவேண்டும் என்பதும் பேராசிரியை பூஜாவின் ஆவேச கோரிக்கை. அமைப்பிலுள்ள உறுப்பினர்களின் பிரச்னைகளை சுமூகமாக செட்டில் செய்வதற்கான அமைப்பே இந்த நீதிமன்றமாம். எல்லை மீறும் சாதிப்பஞ்சாயத்து!

தீராத காதல்!

படம்
காதல்போராட்டம்! 2015 ஆம் ஆண்டு சத்தீஸ்கரைச் சேர்ந்த சவுண்ட் எஞ்சினியரான இப்ராகிம் சித்திக், ஒரு நிகழ்வில் கல்லூரி மாணவியான அஞ்சலியை சந்தித்தார். கண்டதும் காதல் நெருப்பு பற்ற, சித்திக் திருமணமாகி விவாகரத்து பெற்றவர் என்ற உண்மையைக் கூட புறந்தள்ளிவிட்டார் அஞ்சலி. ஆனால் அவரது பாரம்பரிய பெற்றோருக்கு இது கசப்பாக மாற, அஞ்சலியை சித்திக்குடன் வாழ அனுமதிக்கவில்லை. “நான் ஜெயின் சமூகத்தினரான அஞ்சலிக்காக இஸ்லாமிலிருந்து இந்துவாக மாறினேன். 2016 ஆம் ஆண்டு எங்கள் திருமணம் ஆர்ய சமாஜ கோவிலில் நடந்ததற்கான ஆதாரம் உள்ளது. அஞ்சலியை மதம் மாறச்சொல்லும் குற்றச்சாட்டு பொய்”   என உயர்நீதிமன்றத்தில் சித்திக் மன்றாடியும் பயனில்லை. அஞ்சலிக்கு நீதிமன்றம் அளித்தது இரண்டே வாய்ப்புகள்தான். பெற்றோர்களுடன் வாழ்வது, பிலாஸ்பூரிலுள்ள அரசு கல்லூரி விடுதியில் தங்குவது. இதனை எதிர்த்து தற்போது உச்சநீதிமன்றம் சென்றுள்ளார் சித்திக். “சித்திக் மதம் மாறியதாக கூறினாலும் அரசு ஆவணங்களில் அவரது பெயர் மாற்றப்படவில்லை. மேலும் அவருக்கு வயது 33. அஞ்சலிக்கு 23 தான் ஆகிறது. சித்திக்கின் முந்தைய திருமணம் குறித

இரண்டாயிரம் ரூபாய்க்கு ஆதார் அட்டை!

படம்
சமூக விழிப்புணர்வுக்கு கிகி சேலஞ்ச் ! மும்பையின் விரார் ஸ்டேஷனில் மின்ரயில்களில் அபாயகரமான ஸ்டன்டுகளை செய்து வந்த இளைஞர்களை பிடித்து கிகி சேலஞ்சிற்கு எதிரான விளம்பரத்தை ரயில்வே உருவாக்கியுள்ளது . நிஷாந்த் ஷா , துருவ் ஷா , ஷியாம் ஷர்மா எனும் மூன்று ரோமியோக்கள் மின்ரயில்களில் செய்த ஸ்டன்டுகளுக்காக ரயில்வே போலீஸ் கைது செய்தது . இவர்களின் ஸ்டன்ட் வீடியோக்களுக்கு மட்டும் ஒரு கோடி ரசிகர்கள் இணையத்தில் உண்டு . பிரபலம் என்றாலும் ரூல்ஸ் மீறினால் போலீஸ் காப்பு மாட்டாமல் விடுவார்களா ? ரயில்வே கோர்ட்டில் ஆஜர்படுத்தியபோது , மூன்றுநாட்கள் ரயில்வே ஸ்டேஷனை தூய்மைபடுத்துவதோடு , காலை 11 மணி முதல் 5 மணிவரை ரயில்வே விபத்து விழிப்புணர்வை கிகி சேலஞ்சிற்கு எதிராக செய்ய உத்தரவாகியுள்ளது . " இந்நடவடிக்கை மூலம் கிகி சேலஞ்சின் ஆபத்தை மக்கள் புரிந்துகொள்வார்கள் " என்கிறார் ரயில்வே பாதுகாப்பு கமிஷனர் அனுப் சுக்லா .   2 குண்டர்களுக்கு நோ புரமோஷன் ! ராணுவத்தில் தொந்தி ஆபீசர்களுக்கு புரமோஷன் கிடையாது என ராணுவ அமைச்சகம் முடிவெடுத்துள்ளது . அண்மையில் வெளியான