தாறுமாறு பேச்சுக்கு மன்னிப்பு போதுமா?
சபரிமலை நொறுங்கும்!
சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு
வயது பேதமின்றி அனைத்து பெண்களும் செல்லலாம் என உச்சநீதிமன்றம் கூறியதிலிருந்து போகலாம்,
போக கூடாது என விவாதங்களும் போராட்டங்களும் கேரளாவில் அதிகரித்து வருகின்றன.
“பெண்கள் சபரிமலை கோவிலுக்குள்
நுழைந்தால் கோவில் இரு துண்டுகளாக உடைந்து நொறுங்கும்” என சர்ச்சை வெடியை கொளுத்தியுள்ளார்
கேரள நடிகரான கொல்லம் துளசி. கேரள அரசு உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து அப்பீல் செய்யாத
நிலையில் கேரள பாஜக, காங்கிரஸ் கட்சிகள் பெண்கள் கோவிலுக்குள் நுழைவதற்கு எதிர்ப்பு
தெரிவித்து போராட்டங்களை நடத்தி வருகின்றன.
‘சேவ் சபரிமலா’ என்ற பிரசாரத்தை
தொடங்கிவைத்த நடிகர் கொல்லம் துளசி, “படித்த பெண்கள் சபரிமலைக்கு செல்லமாட்டார்கள்
என்பதை அறிவேன். நாம் பாடும் அய்யப்ப கீர்த்தனைகள் உச்சநீதிமன்ற முட்டாள்களுக்கு கேட்கட்டும்”
என வாய்சவடால் விடுத்தவரின் அருகில் பாஜக கட்சி மாநில தலைவர் ஸ்ரீதரன் பிள்ளை அமர்ந்திருந்தார்.
பின்னர் தான் பேசிய அவதூறு பேச்சுக்கு பிற பாஜக தலைவர்கள் போலவே நடிகர் துளசி உடனடி
மன்னிப்பு கேட்டுவிட்டார். நீதிபதிகளை முட்டாள் என்பதற்கு தண்டனை இல்லையா?