நீர்மூலம் மின்சாரம் தயாரிப்பது சூழலுக்கு கேடுதான்
ஜெய்ராம் ரமேஷ்
உங்களுக்கும் ஜிடி அகர்வாலுக்குமான நட்பு குறித்து கூறுங்களேன்
2010 ஆம் ஆண்டு நான் காங்கிரசில் சுற்றுச்சூழல்துறை அமைச்சராக இருந்தபோது அகர்வால் உண்ணாவிரதமிருக்கப்போவதாக அறிவித்தார். அப்போது அவரை சந்தித்து அவரின் கோரிக்கைகளை கேட்டேன். ஐஐடி கான்பூரில் சிவில் எஞ்சினியரிங் பேராசிரியராக அகர்வால் பணியாற்றிய போது என்னுடைய தந்தை மும்பை ஐஐடியில் அதேதுறையில் பேராசிரியராக இருந்தார்.
என்ன கோரிக்கைகளை அவர் உங்களிடம் முன்வைத்தார்?
கோமுக் - உத்தர்காசி பகுதியை இயற்கை பகுதியாக அறிவிக்க கோரியதோடு, பாகிரதி, பாரோன் கடி, பால மனேரி ஆகிய இடங்களில் நடைபெறும் மின்சார நிலைய பணிகளை நிறுத்த கோரினார். இது குறித்து என்னுடைய Green Signals: Ecology Growth and Democracy in India. குநூலில் எழுதியுள்ளேன்.
பாரோன் கடி -பால மனேரி திட்டம் தொடங்கப்படவில்லை. ஆனால் லோகரினாக் மின்சார நிலைய திட்டத்திற்கான பணிகளில் ரூ.1000 கோடி(NTPC) செலவிடப்பட்டுவிட்டது. எனவே அத்திட்டத்தை நிறுத்தமுடியாத நிலை. இதனை எப்படி சுற்றுச்சூழல் துறை அனுமதித்தது என்பதும் எனக்கு புரியவில்லை. நான் இதுகுறித்து பிரதமர் மன்மோகன்சிங், நிதியமைச்சர் பிரனாப் முகர்ஜி, மின்சாரத்துறை அமைச்சர் சுசில்குமார் ஷிண்டே ஆகியோரை சந்தித்து பேசி அவர்களை அகர்வாலின் கோரிக்கைகளை ஏற்கவைத்தேன். பிறகு அகர்வாலை சந்தித்து உண்ணாவிரதத்தை கைவிடச்செய்தேன். கடைசியாக 2016 ஆம் ஆண்டு அவரை நேரடியாக சந்தித்து பேசினேன்.
நீர்வளத்துறை அமைச்சர் நிதின்கட்கரி, நாடாளுமன்றத்தில் கங்கையை காப்பதற்கான திட்டங்களை விரைவில் வெளியிடவிருந்ததாக கூறுகிறார்களே?
பிரதமர் மோடி, அமைச்சர் கட்கரி இருவரும் கங்கையை சுத்தப்படுத்தும் திட்டத்தைப் பற்றியே பேசிக்கொண்டிருந்தார்கள். இது நல்லவிஷயம்தான். ஆனால் கங்கையில் நீர் இருந்தால்தானே சுத்தப்படுத்தும் செயல்பாடு நடைபெறும்? மத்திய அரசு சூழல் பிரச்னைகள் காரணமாக நிறுத்தப்பட்ட மின்சார நிலைய திட்டங்களை தொடங்குவதற்கான முயற்சிகளை தொடங்கியுள்ளது.
நீர்மூலம் தயாரிக்கும் மின்சாரம் தூயதுதானே? மேலும் இந்தியா மின்சார உற்பத்தியில் பயன்பாட்டில் இன்னும் தன்னிறைவு பெறவில்லையே..?
நீர்மூலம் இந்தியா 17% மின்சாரத்தை பெறுகிறது. 2030 ஆம் ஆண்டு கரிம பொருட்களை தவிர்த்து 40 சதவிகித மின்சாரத்தை புதுப்பிக்கும் மூலங்களான காற்று, நீர், அணு ஆராய்ச்சி, சோலார் மூலம் பெறுவது திட்டம். பொதுவாக பார்த்தால் நீர்வழியாக மின்சாரம் தயாரிப்பது சுற்றுச்சூழல் பிரச்னை கிடையாது என நினைப்போம். மக்கள் இடம்பெயர் உள்ளிட்ட துயரங்களை அரசு சமாளிக்கவேண்டும்.
தமிழில்: ச.அன்பரசு
நன்றி: நிதி ஜாம்வால், தி வயர்.