இடுகைகள்

ஸ்டூவர்ட் ஆர்கின் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

டைம் 100 - சிக்கில் செல் நோயைத் தீர்க்கும் சிகிச்சையைக் கண்டறிந்த ஆராய்ச்சியாளர்!

படம்
            ஸ்டூவர்ட் ஆர்கின் stuart orkin மரபணு தொடர்பான நோய்களை தீர்ப்பது, குணப்படுத்துவது, குறைந்தபட்சமான வலி, வேதனையை குறைப்பது கடினமான ஒன்று. உலகமெங்கும் உள்ள மரபணு ஆராய்ச்சியாளர்கள் விடாமுயற்சியோடு செயல்பட்டு, சிகிச்சையை மேம்படுத்த, தீர்வுகளைக் கண்டறிய முயன்று வருகிறார்கள். அவர்களில் முக்கியமான ஆராய்ச்சியாளர், ஸ்டூவர்ட் ஆர்கின். இவர் சிக்கில் எனும் நோயைக் குணப்படுத்தும் ஆராய்ச்சியை செய்துவருகிறார். ஹீமோகுளோபின் மரபணுவில் உள்ள டிஎன்ஏவில் ஏற்படும் மாறுதலால் சிக்கில் நோய் ஏற்படுகிறது. இதன் காரணமாக ரத்த செல்களின் வடிவம் மாறி, உடலில் ரத்தவோட்டத்தில் தடை ஏற்படுகிறது. இது உயிருக்கே ஆபத்தான நிலை. ஆர்கின், கிரிஸ்பிஆர் நுட்பத்தை சிக்கில் நோயைத் தீர்க்கும் சிகிச்சைக்குப் பயன்படுத்துகிறார். கிரிஸ்பிஆர் சிகிச்சையாளர்கள், வெர்டெக்ஸ் பார்மசூட்டிகல் நிறுவனம் ஆகியோர் இணைந்து ஆர்கினின் கண்டுபிடிப்பை சிகிச்சைக்கு பயன்படுத்த அமெரிக்க அரசிடம் அனுமதி பெற்றுவிட்டனர். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பெற்ற அனுமதி மூலம், சிக்கில் நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் உடலில் கிரிஸ்பிஆர் நுட்பம் மூலம் ஆரோக்கியமான ஹீம