இடுகைகள்

மிஸ்டர் ரோனி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

குறிப்பிட்ட பகுதியில் உள்ள கொழுப்பை மட்டும் குறைக்க முடியுமா? - மிஸ்டர் ரோனி

படம்
  உடலின் குறிப்பிட்ட பகுதியில் உள்ள கொழுப்பை மட்டும் குறைக்க முடியுமா? இணையத்தில், நாளிதழில் கூறப்படும் செய்திகளை அடிப்படையாக வைத்து பலரும் இந்த கேள்வியைக் கேட்கிறார்கள். லிப்டன் டீ விளம்பரத்தில் கூட வயிற்றில் உள்ள கொழுப்பை குறைக்க டீ அருந்தினால் போதும் என கூறுகிறார்கள். ஆனால் இதற்கு அறிவியல்ரீதியாக எந்த   ஆதாரமும் இல்லை. உடலில் கொழுப்பு சேகரிக்கப்படுவது, பின்னாளில் தேவைப்படும்போது எடுத்து பயன்படுத்திக்கொள்ளத்தான். வயிறு, தொடை, மார்பு என அதை தனி மனிதர் தீர்மானிக்க முடியாது.   குறிப்பிட்ட இடத்தில் கொழுப்பைக் குறைத்து அந்த இடத்தில் தசை அழகை கூட்ட நிறையப் பேர் முயல்கிறார்கள். கொழுப்பு குறைந்து உடல் ஒல்லியாவது அல்லது குறிப்பிட்ட கட்டமைப்பிற்குள் வருவது உடல் முழுக்க நடைபெறும் ஒத்திசைவான செயல்பாடு. உடல் எடை குறைப்பு இந்த வகையில் நடைபெற்றால்தான் ஆரோக்கியமானது. எடை குறைப்பு என்பது குறிப்பிட்டளவில் நின்றுவிட்டால், ஒருவர் தான் சாப்பிடும் உணவு முறையை மாற்ற வேண்டுமா? உணவுமுறையில் காய்கறிகள், குடிக்கும் நீர் அளவைக் கூட்டவேண்டும். உடல் எடை குறையாதபோது குறிப்பிட எடையில் நிலைத்து இருக்க ஏற்றபட

பதில் சொல்லுங்க ப்ளீஸ் 3 - புதிய மின்னூல் வெளியீடு

படம்
  பதில் சொல்லுங்க ப்ளீஸ் 3, தொடர்வரிசை நூலாக வெளிவருவது திட்டமிடாத ஒன்று. இந்த நூலில் தினசரி வாழ்க்கையில் எதிர்கொள்ளும் பல்வேறு வேடிக்கையான கேள்வி பதில்கள் உள்ளன. அதை ஒருவர் வாசிக்கும்போது, அதற்கான அறிவியல் விளக்கத்தை எளிதாக புரிந்துகொள்ள முடியும்.  கேள்வி பதில் என்றாலும் அதன் வடிவம் மூடநம்பிக்கை, அதற்கான அறிவியல் விளக்கம் என்பதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால் ஒருவரின் மனதில் ஆராயாமல் நம்பும் விஷயத்தை தவறு என்று சொல்ல அறிவியலில் நிச்சயமாக ஆதாரங்கள் தேவைதானே? அந்த அடிப்படையில் அறிவியல் ஆதாரங்கள் எழுதப்பட்டுள்ளன. பிபிசி, நியூ சயின்டிஸ்ட், கார்டியன், டிஸ்கவரி, நியூ சயின்டிஸ்ட், பாப்புலர் சயின்ஸ் என பல்வேறு அறிவியல் இதழ்களிலிருந்து பெறப்பட்ட அறிவியல் தகவல்களின் சேகரம்தான் இது. நூலை வாசியுங்கள். பிடித்திருந்தால் நண்பர்களுக்கும், அறிவியலை நேசிப்போருக்கும் பகிருங்கள். நூலைத் தரவிறக்கி வாசிக்க... https://www.amazon.in/dp/B0BXF3HGTF அட்டைப்படம்  பின்டிரெஸ்ட்  வடிவமைப்பு  AU STUDIO

பதில் சொல்லுங்க ப்ளீஸ் 2 - அறிவியல் கேள்வி பதில்கள் - மின்னூல் வெளியீடு

படம்
  பதில் சொல்லுங்க ப்ளீஸ் 2, எந்த வகையில் வேறுபட்டது? முதல் நூல் போல இதில் நகைச்சுவை இருக்காது. சற்று குறைவு. ஏன் இல்லவே இல்லை எனலாம். இதெல்லாம் வெளியிட்ட நாளிதழின் ஆசிரியரின் கைத்தொழில் காரியம். ஆனால் அறிவியல் மூடநம்பிக்கைகளை, அறிவியல் உண்மையோடு எதிர்கொள்ள நேர்ந்தது எனக்கு பிடித்திருந்தது. வாரம்தோறும் இரண்டு நாட்கள் இதற்காக வேலை செய்தபோது தெரிந்து கொண்ட விஷயங்கள் எனக்கு பரவசம் தந்தன.  தினந்தோறும் அறிவியல் உலகம் புதுப்பிக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறது. கேள்விகளை பல்வேறு வடிவங்களில் இணையத்தில் தேடி, அதற்கான பதில்களை ஒப்பீடு செய்து தேர்ந்தெடுத்து தமிழாக்கம் செய்தேன். இந்த வேலை தந்த மகிழ்ச்சி, அக்காலகட்ட  இழிவான அலுவலக அரசியலைக் கூட சற்று மறக்கடித்துவிட்டது. வித்தியாசமான கோக்குமாக்கான கேள்விகளை எடுத்தாலும் அதற்கு நேர்த்தியான அறிவியல் ரீதியான விளக்கம் உள்ளே இருக்கிறது. இதுதான் வாசகர்களுக்கு வாசிப்பில் ஆர்வமூட்டும் விஷயமாக கருதுகிறேன். வாசியுங்கள். நூல் பிடித்திருந்தால் நண்பர்களுக்குப் பகிருங்கள். நன்றி நூலைத் தரவிறக்கி வாசிக்க.... https://www.amazon.in/dp/B0BWXM1M4X

பதில் சொல்லுங்க ப்ளீஸ் 2 - மிஸ்டர் ரோனி - புதிய மின்னூல் அட்டைப்படம் வெளியீடு

படம்
  பதில் சொல்லுங்க ப்ளீஸ 2 அட்டைப்படம்

சைக்கிளின் முன் டயர் பெரிதாக இருந்தால் என்னவாகும்? மிஸ்டர் ரோனி

படம்
  பதில் சொல்லுங்க ப்ரோ? மிஸ்டர் ரோனி 123rf முதல் சூப்பர் மார்க்கெட் எப்போது தொடங்கப்பட்டது? அமெரிக்காவின் நியூயார்க் நகரில் 1903ஆம் ஆண்டு ஆகஸ்ட் 4ஆம் தேதி கிங் குலன் என்ற பெயரில் சூப்பர் மார்க்கெட் தொடங்கப்பட்டது. அதிக பொருட்கள் குறைந்த விலை என தள்ளுபடியை அடித்து தூள் கிளப்பியதால் கடை தொடங்கிய வேகத்தில் ஹிட்டானது. மேலும் கடைகளின் கிளைகளும் கூட வேகமாக தொடங்கப்பட்டன. மைக்கேல் ஜே குல்லன் என்பவர்தான் கிங் குலன் கடைகளின் முதலாளி. இவர் இறக்கும்போது மொத்தம் 17 கிளைகள் தொடங்கப்பட்டுவிட்டன.  1870களில் சைக்கிள் முன் டயர் பெரிதாக இருப்பது ஏன்? வேகமாக செல்வதற்குத்தான் இவைதான் இப்போதைய சைக்கிள்களின் முன்னோடி. இதற்குப்பிறகுதான் சைக்கிள் ரிம்களின் டயர்களை அணிவிக்கப்பட்டு பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டன. அன்றைக்கு பென்னி ஃபார்த் என்றழைக்கப்பட்ட இந்த பெரிய வீல் சைக்கிள்தான் புகழ்பெற்றிருந்தன. பெரிய வீலில் இணைக்கப்பட்டு பெடலை மிதிக்க சைக்கிள் நகரும்.  பல்பு உடையாமல் வாகனத்தை ஓட்டுவது நமது சாமர்த்தியம்தான்.  வேகமாக செரிக்கும் உணவு எது? எதில் குளுகோஸ் உள்ளதோ அதுதான் செரிக்க எளிமையான உணவு, ஸ்டார்ச், நார்ச்சத்த

சூரியனை நெருங்குவது சாத்தியமா? மிஸ்டர் ரோனி

படம்
        மிஸ்டர் ரோனி சூரியனில் வேதிவினைகள் நடைபெறவில்லை என்றால் அதனை எளிதாக சென்றடையமுடியுமா? சாத்தியமில்லை. அதன் வெளிப்பரப்பு 10 ஆயிரம் டிகிரி பாரன்ஹீட்டில் கொதித்து வருகிறது. பீட்ஸா வேகும் ஓவனில் உள்ள வெப்பம் 700 டிகிரி பாரன்ஹீட்தான். சூரியன் பூமியிலிருந்து 9,30,00,00,000 மைல் தூரத்தில் அமைந்துள்ளது. 65 கி.மீ வேகத்தில் குளிர்பானம் குடிக்க கூட நிற்காமல் சென்றால் சூரியனுக்கு சென்று சேர 160 ஆண்டுகள் ஆகும். நிலவைப் போல நானூறு மடங்கு தூரம் கொண்டது சூரியன். விண்கலத்தில் சென்றாலும் கடினமான பயணமாகவே இருக்கும். அலுமினிய விண்கலத்தில் சென்றால் அதன் உருகும் வெப்பநிலை 1220 டிகிரி பாரன்ஹீட் வரைதான் பொறுத்துக்கொள்ளமுடியும். அதற்குமேல் விண்கலம் உருகிவிடும். அதன் வெப்பத்தை உள்ளிழுக்காமல் தடுக்கும் கவசங்கள் இருந்தால் மட்டுமே சூரியனுக்கு அருகில் செல்லமுடியும். இல்லையெனில் தேங்காய்க்குள் பொட்டுக்கடலை, வெல்லம் போட்டு சுட்டு சாப்பிடுகிறோம் அல்லவா? அதுபோல விண்கலத்தில் வீர ர்கள் வெ்ந்து கருகிவிடுவார்கள். வெப்பத்தோடு கதிர்வீச்சு பிரச்னையும் உண்டு. 2004இல் ஏவப்பட்ட மெர்குரி மெசஞ்சர் இந்த வகையில் 30 மில்லியன்

செயற்கை நுண்ணறிவு நம்மை விட சிறந்ததா?

படம்
      கிகா மிஸ்டர் ரோனி செயற்கை நுண்ணறிவு நம்மை விட சிறந்ததா? இது பதில் சொல்லுவதற்கு மிக கடினமான கேள்வி. இன்றுவரை செயற்கை நுண்ணறிவு ஆறுவயது சிறுவனின் அறிவை விட அதிகமாக கற்றுக்கொள்ளவில்லை. மனிதர்களின் உதவியின்றி தானியங்கி கார்களை சாலையில் விட்டால் விபத்துகள் ஏற்படும். அதைப்போலத்தான் பாத்திரங்களை கழுவது போன்றவையும் உள்ளது. முன்பை விட இன்று நம்மிடையே ஆற்றல் வாய்ந்த கணினிகள், நிறைய தரவுகள் உள்ளன. கோடிக்கணக்கான அல்காரிதம்கள் உள்ளன. தானியங்கி கார்களை ஓட்டுவதில் செயற்கை நுண்ணறிவு இன்னும் மனிதர்களைப் போல நிபுணத்துவம் பெறவில்லை. ஒரு படத்தில் ஒளிந்துள்ள பூனையின் ஒருபகுதி போன்ற செயல்களை மனிதர்களை விட வேகமாக திறமையாக செயற்கை நுண்ணறிவு கண்டுபிடிக்கிறது என்பது உண்மை. மனிதர்களின் உதவியின்றி செயற்கை நுண்ணறிவு எப்படி திறன் பெற்றதாக உருவாகும் என்று தெரியவில்லை. ஆனால் எதிர்காலத்தில் அதற்கான வாய்ப்பு உள்ளது. மனிதர்களைப் போன்ற திறன் பெற்ற ஏ.ஐ எதிர்காலத்தில் நம்மோடு போட்டிபோடும்படி உருவாகும் வாய்ப்பு உள்ளது. தினசரி வாழ்க்கையில் செயற்கை நுண்ணறிவு பயன்படுகிறதா? நீங்கள் இணையத்தில் வாங்கும் அனைத்து பொருட்களின்