தாவரத்தில் இருந்து பெறும் ஆபத்தான நஞ்சு எது?
அறிவியல் கேள்வி பதில்கள்
மிஸ்டர் ரோனி
தாவரத்தில் இருந்து பெறும் ஆபத்தான நஞ்சு எது?
கானியம் மெக்குலாடம் என்ற தாவரமே நஞ்சு என்ற வகையில் ஆபத்தானது. தென் அமெரிக்காவில் உள்ள லானா மரம், நஞ்சில் இரண்டாவது இடத்தில் உள்ளது. பழங்குடிகள் இதன் நஞ்சை, தங்களின் அம்புகளில் பயன்படுத்துகிறார்கள்.
தாவரங்கள், மரம், செடிகள் எதனால் முக்கியத்துவம் பெறுகின்றன?
காகிதம், ஜவுளி, கட்டுமானம், உணவு ஆகியவற்றுக்கு மூலப்பொருட்களை மரங்களே தருகின்றன. சாக்லெட்டுகளை உருவாக்க கோக்கோ விதைகள் தேவை. குறிப்பாக தியாபுரோமா காகோவ் என்ற மர இனம் தேவைப்படுகிறது. ஃபாக்ஸ் குளோவ் என்ற தாவரத்தில் இருந்து இதய செயலிழப்புக்கான மருந்து பெறப்படுகிறது. காமெலியா சினென்சிஸ் என்பதை அறிவீர்களா, அதுதான் தினந்தோறும் பருகும் தேநீரில் பயன்படுத்தும் தேயிலை.
மரக்கன்று இனப்பெருக்கத்தில் மாற்றத்தை உருவாக்கியவர் யார்?
லூதர் பர்பேங்க் என்பவர், மரக்கன்றுகளை வீரியம் மிக்கதாக கலப்பு முறையில் உருவாக்கினார். பல்வேறு காய்கறி செடிகளை பார்த்து அடையாளம் கண்டு அதை கலப்பு முறைக்கு ஏற்றதாக மாற்றினார். இந்த வகையில் உருளைக்கிழங்கு, பிளம் ஆகிய செடிகள் உள்ளடங்கும். அவர் உருவாக்கிய ரகங்கள் இன்றும் பயன்பாட்டில் உள்ளன.
ஜார்ஜ் வாஷிங்டன் கார்வரின் சாதனைகள் என்னென்ன?
டாக்டர் ஜார்ஜ் வாஷிங்டன் கார்வர், தாவர நோய்கள், மண் ஆய்வு, பயிர் மேம்பாடு ஆகியவற்றில் சாதனைகள் செய்தவர். இவரது முறைகளைக் கையாண்ட அமெரிக்காவின் தென்பகுதி விவசாயிகள், அதிக விளைச்சலை லாபத்தைப் பெற்றனர். கார்வர், சர்க்கரை வள்ளிக்கிழங்கிலிருந்து 118 பொருட்களையும், நிலக்கடலையிலிருந்து 325 பொருட்களையும் உருவாக்கி சாதித்தார். நிலக்கடலை, சோயாபீன்ஸ் ஆகிய மண்ணை வளப்படுத்தும் பயிர்ச்செடிகளை பயிரிட விவசாயிகளை ஊக்கப்படுத்தினார். சோயாபீன்ஸிலிருந்து பிளாஸ்டிக்கை உருவாக்கியது மற்றொரு முக்கியமான சாதனை. இதை ஹென்றி போர்டு, தனது வாகனத் தயாரிப்பில் பயன்படுத்தினார். அலபாமா சிவப்பு களிமண்ணில் இருந்து சாயங்களை உருவாக்கி அதை கலப்பு பருத்தியில் பயன்படுத்தினார்.
நன்றாக வளர்ந்த மரத்தில் எத்தனை இலைகள் இருக்கும்?
அதை முழுமையாக ஆராய்ந்து கூறிவிடமுடியாது. கிடைத்த தகவல்கள் அடிப்படையில் கூறலாம். நன்கு வளர்ந்து முதிர்ச்சியுற்ற மரத்தில் பத்து லட்சம் இலைகள் இருக்கும். ஓக் மரத்தில் ஏழு லட்சம் இலைகள் இருக்கும். எல்ம் மரத்தில் ஐந்து மில்லியன் இலைகள் இருக்கும். அதாவது அந்த பருவத்தில் மட்டும் என புரிந்துகொள்ளுங்கள்.
உலகிலேயே பெரிய இலை கொண்ட தாவரம் எது?
மான்ஸ்டெரா என்ற தாவரத்தின் இலைகள் இரண்டிலிருந்து மூன்றடி நீளமாக இருக்கும். கரும்பச்சையாக பளபளப்பாக இருக்கும்.
கருத்துகள்
கருத்துரையிடுக