சர்வாதிகாரம் - அமைப்புகளை காப்பாற்றுதல்
சர்வாதிகாரம்
அமைப்புகளை காப்பாற்றுதல்
அரசு அமைப்புகள் நாகரிகத்தை ஜனநாயகத்தை காப்பாற்ற உதவுகின்றன. அவற்றுக்கு மக்களின் உதவியும் தேவைப்படுகிறது. அமைப்புகளுக்காக அதனால் பயன்பெறும் மக்கள் ஆதரவாக நின்று பேச வேண்டும் போராடவேண்டும். அமைப்புகளுக்கு சுயமாக தன்னை பாதுகாத்துக்கொள்ளும் திறன் கிடையாது. அவை பாதுகாக்கப்படாதபோது ஒன்றன்பின் ஒன்றாக வீழ்வதைப் பார்ப்போம். இதற்கு எடுத்துக்காட்டாக நீதிமன்றம், நாளிதழ், சட்டங்கள், தொழிலாளர் சங்கங்களைக் கூறலாம்.
பெரும்பாலான சர்வாதிகார ஆட்சி என்பது மக்களால் வழங்கப்படுவதுதான். இத்தகைய நெருக்கடியான சூழலில் முன்னமே தங்களை அதிகாரத்திற்கு கீழ்ப்படிவதாக ஒப்புக்கொடுக்க கூடாது.
1933ஆம் ஆண்டு ஜெர்மனியில் ஹிட்லர் அரசை அமைத்துவிட்டார். அப்போது பிப்ரவரி மாதம் வெளியான யூதர்களின் நாளிதழில், ஹிட்லர் தனது பிரசாரத்தில் கூறிய யூதர்களுக்கு எதிரான நடவடிக்கைகள் எடுக்கப்படாது என நம்புவதாக கூறப்பட்டிருந்தது. ஆனால், சர்வாதிகாரி சொன்னதை செய்து முடித்தார். அந்த ஆண்டின் இறுதிக்குள்ளாக அனைத்து அரசு அமைப்புகளும் நாஜி கட்சியினரால், அதன் ஆதரவாளர்களால் கைப்பற்றப்பட்டது. நாட்டில் ஒரே கட்சிதான் இருந்தது. அது ஹிட்லரின் கட்சி மட்டும்தான். நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் யாருமே இல்லை. யூதர்கள் சிலர் கூட நாஜிக்கட்சிக்கு ஆதரவளித்து தங்களைக் காத்துக்கொள்ள முயன்றனர். ஆனால், அவர்களது நம்பிக்கை வீணாகப்போனது.
சில அரசியல் கட்சிகள் எதிரிகளை அழுத்தி நசுக்க முயல்கின்றன. ஒரே கட்சி ஆட்சிமுறை ஆபத்தானது. உள்ளூர், மாநில, ஒன்றிய என எப்படி பார்த்தாலும் பல்வேறு கட்சிகள் உள்ள முறையே ஜனநாயகத்தன்மை கொண்டது.
எந்த நாட்டில் தேர்தல் நடைபெறுவது நின்றுபோகிறதோ, அங்கு சர்வாதிகாரம் தொடங்குகிறது என அமெரிக்காவில் கூறும் வாசகம் உண்டு. 1932ஆம் ஆண்டு நாஜிக்கட்சிக்கு வாக்களித்து ஜெர்மனி மக்களுக்கு அதோடு தேர்தலே நடக்காது என்பது தெரியாது. அதுபோலவே , 1946ஆம் ஆண்டு செக்கோஸ்லோவியா கம்யூனிஸ்ட் கட்சிக்கு செக், ஸ்லோவேகியர்கள் வாக்களித்தனர். அவர்களின் ஆட்சி தேர்தலே இல்லாமல் 1989ஆம் ஆண்டு வரை நீடித்தது. நாஜிக்கட்சி ஆட்சி, இரண்டாம் உலகப்போர் முடிந்தபிறகும் கூட நீடித்தது. சர்வாதிகார ஆட்சியை அந்தளவு எளிதாக நீக்கிவிடவும் முடியாது. சிந்தனையாளர் வெண்டல் பிலிப்ஸ், சுதந்திரத்திற்கு கொடுக்கும் பெரும் விலையாக என்றென்றைக்குமான கண்காணிப்பை ஏற்க வேண்டியிருக்கிறது என்றார்.
சர்வாதிகாரம், இனப்படுகொலை, மேலாதிக்கம் ஆகியவற்றை அடையாளப்படுத்தும் அடையாளங்களை மக்கள் பயன்படுத்தக்கூடாது. அவை பிறரிடம் தவறான வழிகாட்டுதலை உருவாக்கும். வரலாற்றில் சர்வாதிகார ஆட்சியில் ஸ்வஸ்திகா என்பது விசுவாச அடையாளம். அதை ஆஸ்திரியர்கள் பெருமையாக அணிந்தனர். அதற்கு மறைமுகமான பொருள், நாஜியினரை கீழ்ப்படிந்து ஏற்கிறோம். விசுவாசமாக இருப்போம் என்பதுதானே?
தொழில்களை அதற்கான விதிகளுக்கு உட்பட்டு செய்வது முறை. அதை எப்போதும் மீறக்கூடாது. சர்வாதிகாரிகள், தங்களுக்கு கீழ்ப்படிந்து நடப்பவர்களை பதவிகளில் அமர்த்துகிறார்கள். தொழிலதிபர்களுக்கு குறைந்த விலையில் தொழிலாளர்களை கிடைக்கும்படி செய்கிறார்கள். நீதிபதிகள் இல்லாமல் விசாரணை நடக்காது. வழக்குரைஞர்கள் இல்லாமல் சட்டம் செயல்படாது என்பதை மனதில் கொள்ளவேண்டும்.
சுதந்திரத்தைப் பெற உயிரை அர்ப்பணிக்க, தியாகம் செய்ய தயாராக இல்லையெனில் சர்வாதிகார ஆட்சியில் உயிரை இழக்கும்படி சூழ்நிலை உருவாகும்.
ஆன் டைரனி
டிமோத்தி ஸ்னைடர்
கருத்துகள்
கருத்துரையிடுக