சர்வாதிகாரம் எப்படி நடைமுறைப்படுத்தப்படுகிறது?




 
சர்வாதிகாரம் எப்படி நடைமுறைப்படுத்தப்படுகிறது?

அனைத்து விதிகளையும் சட்டங்களையும் சர்வாதிகார அரசு உடைத்தெறியும் என சட்ட கோட்பாட்டாளர் கார்ல் ஸமிட்ச்ட் கூறினார். நாட்டை நிரந்தரமான அவசர நிலைமையில் வைத்திருக்க முயல்கின்றனர். அப்போதுதான் குடிமக்கள் தங்கள் பாதுகாப்புக்காக, அடிப்படை சுதந்திரத்தை விலைபேச முன்வருவார்கள்.

தீவிரவாதம் பற்றி இன்றைக்கு நிறைய ஆட்சியாளர்கள் பேசிக்கொண்டே இருக்கிறார்கள். எக்காரணம் கொண்டும் மக்கள் அதை நம்பி விடக்கூடாது. அதில் எந்த உ்ணமையும் இல்லை. அடிப்படை உரிமைகளை இழந்தால் அரசு கொடுப்பதாக கூறும் பாதுகாப்பும் கேள்விக்குறியாகிவிடும். ஒன்றை இழந்து ஒன்றை பெறுவதும் நடைபெறுவதுண்டு.

அதிகாரத்திற்கு கீழ்ப்படிவது சற்று இணக்கமான பாதுகாப்பான தன்மையை ஏற்படுத்துகிறது. சுதந்திரம், பாதுகாப்பு என இரண்டையும் இழந்துவிடுகிறோம். பாசிஸ்ட் ஒருவருக்கு வாக்களித்தால், மோசமான நிலையே கிடைக்கும். சர்வாதிகாரிகள், பயங்கரவாதம், தீவிரவாதம் பற்றி பேசும்போதெல்லாம் கவனமாக இருக்கவேண்டும். அவர்கள், தங்களுடைய கருத்துகளை எதிர்ப்பவர்களை, விமர்சனம் செய்பவர்களை தீவிரவாதிகள், பயங்கரவாதிகள் என அடையாளப்படுத்துகிறார்கள். நவீன காலத்தில் சர்வாதிகார நாடுகள், தீவிரவாதிகள் என்று பெயர் கூறி பத்திரிகைக்கார ர்களை கைதுசெய்து வருகின்றன. அவர்களை ஒழித்துக்கட்டுவதுதான் முக்கியமான நோக்கம்.

குடிமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதாக நடித்து அவர்களின் அத்தனை உரிமைகளையும் பறிப்பதே சர்வாதிகார ஆட்சியாளர்களின் அடிப்படை நோக்கம்.

தாய்நாடு முக்கியம் என்றாலும் உயிரோடு இருப்பது அதைவிட முக்கியம். வெளிநாடுகளில் நண்பர்கள், உறவுகள் இருந்தால் அவர்களோடு நல்ல உறவில் இருப்பது நல்லது. ஒருவேளை சர்வாதிகார ஆட்சியில் நீங்கள் குறிவைக்கப்பட்டால், நாட்டிலிருந்து வெளியேறுவதற்கு உறவுகள் உதவும். குடும்பத்திலுள்ள அனைவருக்குமே பாஸ்போர்ட் அட்டைகள் வாங்கி வைத்திருப்பது முக்கியம்.

சர்வாதிகார நாடாக மாறிவரும் இந்தியா, ரஷ்யா, துருக்கியில் அரசு அல்லாத அமைப்புகளின் மீதான கட்டுப்பாடுகள் இறுகி வருகின்றன. அவற்றுக்கான நன்கொடைகள் நிறுத்தப்பட்டுள்ளன. முடிந்தால், பழங்குடி, மக்கள் உரிமைகள், சிறுபான்மையினருக்காக பாடுபடுபவர்கள் விசாரணையின்றி தடுப்புக்காவலில் வைக்கப்படுகின்றனர். இப்படியான சுதந்திரம், அதன் உரிமைகளை ஆதரிப்பவர்கள் முன்னமே தடுக்கப்பட்டு சிதைக்கப்படுகிறார்கள்.

இரண்டாம் உலகப்போரில் ஜெர்மனி தோற்றது. அதற்குப்பிறகு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் அனைத்தும் ஜெர்மனி நாட்டுக்கு எதிராக நேர்மையாக நின்று தீமையை எதிர்த்து போரிட்டதாக மாயக்காட்சியை உருவாக்கினர். ஆனால் நடந்த உண்மை அதுவல்ல. 1930ஆம் ஆண்டில், பெரும்பாலான நாடுகள், ஜெர்மனியை எதிர்த்து போராடாமல் பணிந்து போய்விட்டன. அமெரிக்கா, அமெரிக்கா முதலில் என்ற கோஷத்தை எழுப்பி, நாஜிகளுக்கு எதிரான செயல்பாட்டை நிறுத்திக்கொண்டது. இதற்கு உதவியவர் சார்லஸ் லிண்ட்பெர்க் என்பவர்.

ஹங்கேரி, ரோமானியா பல்கேரியா ஆகிய நாடுகள் ஜெர்மனி நாட்டிடம் பேசி வணிகம், நிலப்பரப்பு சார்ந்து ஒப்பந்தங்களைப் போட்டுக்கொண்டன. அதன் ஆதரவு அணியில் இடம்பிடித்தன. 1922ஆம் ஆண்டு வாக்கிலேயே இத்தாலி பாசிச நாடாக மாறிவிட்டது. அது போரில் கூட ஜெர்மனியின் ஆதரவாக நின்று போரிட்டதை அனைவரும் அறிவோம். 1939ஆம் ஆண்டு சோவியத் யூனியன், ஜெர்மனியோடு சேர்ந்து நின்று போலந்தை ஆக்கிரமித்தது. போலந்து விட்டுக்கொடுக்கவில்லை. போரில் ஈடுபட்டது. அந்த நாடு இங்கிலாந்து, பிரான்ஸ் ஆகிய நாடுகளோடு இதுதொடர்பான ஒப்பந்தங்களை செய்துகொண்டது. ஜெர்மனி போரில் உணவு எரிபொருளை சோவியத் யூனியனின் சிவப்பு ராணுவத்திற்கு வழ்ங்கியது. அந்த வகையில் சிவப்பு ராணுவம் வழியாக நார்வே, நெதர்லாந்து, பெல்ஜியம், பிரான்ஸ் வரை கைப்பற்றப்பட்டது.  

1940ஆம் ஆண்டு வின்ஸ்டன் சர்ச்சில் இங்கிலாந்தின் பிரதமரானார். போரில், போலந்து நாட்டிற்காக களமிறங்கியது. அப்போது சோவியத் யூனியனும், ஜெர்மனியும் போரில் நாடுகளை கைப்பற்றி வலுவாக இருந்தது. சோவியத் அப்போது எஸ்டோனியா, லாட்வியா, லிதுவேனியா ஆகிய நாடுகளை கைப்பற்றியது. ஹிட்லருக்கு இருந்த கருத்து என்னவெனில், பிரான்சை கையகப்படுத்தினால் இங்கிலாந்தை எளிதாக பிடித்துவிடலாம் என்பதுதான். அங்குதான் அவரது கணிப்பு தவறியது.

பிரிட்டனின் போர் இனிமேல்தான் தொடங்கப்போகிறது என நாடாளுமன்றத்தில் அறிவித்தார் சர்ச்சில். அவரது அறிவிப்பும் செயல்பாடும் ஹிட்லரின் திட்டங்களை மாற்ற வைத்தது. அவருக்கு, சோவியத் மூலமாக நாடுகளை கைப்பற்றி பிறகு, அந்த நாட்டை ஏமாற்றி அதையும் கைப்பற்றலாம் என்ற எண்ணம் இருந்தது. 1941ஆம்ஆண்டு ஜெர்மனி சோவியத் யூனியன் மீது படையெடுத்தது.

------

பாசிஸ்டுகள் பேசும் பேச்சில் சிறியளவு உண்மையே இருக்கும். அவர்கள் புதிய மதத்தை கண்டுபிடித்தது போல சுலோகன்களை உருவாக்கி அதையே சொல்லி மகிழ்ந்துகொண்டிருப்பார்கள். வரலாற்றில் இருந்து புனைகதைகளை உருவாக்கி உண்மை போல உலவவிடுவார்கள். அன்றைய காலத்தில் புகழ்பெற்றதாக இருந்த வானொலியை தங்களின் பொய் பிரசாரத்திற்கு பயன்படுத்தினர். உண்மைக்கு நிரூபணம் தேவை. பொய்க்கு குழப்பமே போதும். அதை வைத்தே தேர்தலில் எளிதாக வெல்ல முடியும்.

உண்மையைப் போலவே பொய்யை உருவாக்கி சொல்லிக்கொண்டே வருவது பாசிஸ்டுகளின் வழக்கம். அது ஒரு கற்பனையான உலகு. அதற்கு நிகராக அதை உடைக்க இன்னொரு கற்பனையாக உலகை உருவாக்கினால்தான் முடியும். பேசுவதில் எழுபது சதவீதம் பொய்யும் புரட்டுமாகவே இருக்கும். யாரை எதிர்க்கிறோமோ அந்த இனத்தை குறிவைத்து பல்வேறு வார்த்தைகளை அள்ளி வீசவேண்டும். பெரும்பாலும் வெறுப்பை தூண்டுவதாக உடல்மொழி, சொற்கள், வார்த்தை தேவை. அவை முன்னேயுள்ள மக்களுக்கு தொடர்பை ஏற்படுத்துவதாக இருக்கும்.

முரண்பாடான வாக்குறுதிகளை பிரசாரத்தில் அள்ளி வீசவேண்டும். ஒன்றுக்கொன்று தொடர்பே இருக்காது. இருக்க கூடாது. அனைத்து மக்களின் வரியை குறைப்பேன் என்று அலறுவது, அடுத்த வரியே ராணுவ பாதுகாப்புக்கு நிதி ஒதுக்கப்போகிறோம் என்று கூறுவது. ஒரு விவசாயி, கோழி அடைகாத்த முட்டையை எடுத்து வேகவைத்து மனைவிக்கு கொடுத்தார். பிறகு பிள்ளைகளுக்கு கொடுத்தார். பிறகு முட்டையை உடைந்துவிடாமல் எடுத்துச்சென்று கோழி அடைக்கும் இடத்தில் வைத்து விட்டார். அது விரைவில் குஞ்சு பொரித்துவிடும். இந்த கதை எப்படியிருக்கிறது?

பாசிஸ்டு தலைவர்களை வணங்கும் பக்தர்கள். முழுக்க தங்களது உணர்வுகளை கைவிட்டவர்கள். உண்மையில் அப்படி உணர்வுகள் திரும்ப வந்தாலும் உண்மையை தாங்கிக்கொள்வது கடினம். ஜெர்மனி போரில் தோற்றுவிட்டது. அப்போரில் கையை இழந்த ராணுவ வீரன் ஒருவன், ஹிட்லர் பொய் கூறவில்லை. நான் அவரை நம்புகிறேன் என்று கூறினார். எதனால் அவன் இப்படி கூறினான் என்று யோசித்துப் பாருங்கள். பல்கலைக்கழக பேராசிரியர்கள், மாணவர்கள், சிந்தனையாளர்கள், எழுத்தாளர்கள் நாஜியினரை ஆதரித்தனர். இந்த மூளைச்சலவை தொடர்ச்சியாக நடத்தப்படுகிறது. தொடக்கத்தில் மறுத்தவர்கள் கூட ஒருகட்டத்தில் திரும்பத்திரும்ப சொல்லும் பொய்யான புரட்டு வாதங்களை ஏற்கத் தொடங்கிவிடுகிறார்கள். விரைவில் நாஜியினரை ஏற்று அந்த அமைப்பை ஆதரிக்கத் தொடங்குகிறார்கள்.

பாசிச தலைவர்கள், நாளிதழ்களில் புலனாய்வு செய்து தகவல்களை, செய்திகளை வெளியிடுபவர்களை வெறுக்கிறார்கள். அவர்களை தாக்கி படுகொலை செய்ய வெறுப்பை தங்களது பரப்புரையில் கக்குகிறார்கள். பத்திரிகையாளர்கள் சொல்வது அனைத்தும் பொய்கள் என்ற ஒற்றை வார்த்தையில் கட்டுரைகள், புலனாய்வு அறிக்கைகளை மறுக்கிறார்கள். இதை ஹிட்லரே தனது பிரசாரத்தில் செய்தார்.

இன்று பத்திரிகையாளர்கள் அச்சு ஊடகங்களை மட்டும் நம்புவதில்லை. மரபான ஊடகங்களை பாசிச சக்திகள் எளிதாக மிரட்டி வாயில் வாழைப்பழத்தை அமுக்கி ஏய்த்துவிடுகின்றன. ஆனால் இணையம் மாறுபாடான ஒன்று. அங்கு பத்திரிகையாளர் ஒருவர் தனது தொழில் கொள்கையைக் காப்பாற்றியபடியே இயங்க முடியும். வலைப்பூவை வைத்து எழுதி வரமுடியும். பத்திரிகையாளர் முழுக்க சரியானவர் என்று கூற முடியாது. ஆனால் தொழில்கொள்கையை கடைபிடிப்பவர் என்ற வகையில் அவர் நேர்மையானவர். இணையத்தை சர்வாதிகார சக்திகள் பயன்படுத்தி பொய் பிரசாரத்தை பெரிய அளவில் செய்கின்றன. இதற்கு தொழில்நுட்ப பாட்கள் கூட பயன்படுத்தப்படுகின்றன. இவற்றை எதிர்த்து நிற்பது கடினம். மாற்று கருத்துகளை பேசுபவர்களை, எதிர்த்து ட்ரோல்கள் செய்யப்படுகின்றன. தனிநபர் தாக்குதல்கள், வெறுப்பு அதிகரித்துள்ளது. பத்திரிகையாளர்கள் வீடுபுகுந்து கொல்லப்படுகிறார்கள். வீடு எரியூட்டப்படுகிறது. தேசதுரோக வழக்கு பதிவு செய்யப்படுகிறது. விசாரணை இல்லாமல் தடுப்பு காவலில் வைக்கப்படுகிறார்கள்.

மூலம்

ஆன் டைரனி - டிமோத்தி ஸ்னைடர்


கருத்துகள்

பிரபலமான இடுகைகள்