மதக்கலவர, பேரிடர் சூழலில் உங்களை தற்காத்துக்கொள்வதே முக்கியம்!

 



உலகளவில் வல்லுறவு, கொலை, கொள்ளை வழக்குகளில் அதிகம் பாதிக்கப்படும் நபர்களாக பெண்களே உள்ளனர். எழுபத்து மூன்று சதவீதம். தற்காப்புக்கலையில் பெல்ட்டுகள் வாங்கித்தள்ளாவிட்டாலும் அடிப்படையாக சில முறைகளைக் கற்றுக்கொண்டால் நல்லதுதான். மதவாத நாடான இந்தியாவில் தலித்துகள் திருமணத்தின்போது கூட தாக்கப்படுகிறார்கள். ஆர்எஸ்எஸ் என்ற தீவிரவாத இயக்கத்தின் கீழ் ஏராளமான சகோதர குண்டர்கள் அமைப்பு உண்டு. இவர்கள் வேலையே தாழ்த்தப்பட்டவர்களை, சிறுபான்மையினரை தாக்கி சொத்தை கொள்ளையடிப்பதுதான். எனவே, தற்காப்புக்கலை கற்பது ஏழை நாட்டில் மட்டுமல்ல வளர்ந்த நாட்டிலும் நல்ல விஷயம்தான்.

உயிர்பிழைக்க சண்டைபோடும்போது ஆயுதம் என தனியாக பிரித்துச் சொல்ல ஏதுமில்லை, அனைத்துமே ஆயுதங்கள்தான். கல், மண், குச்சி, செங்கல், ஆணி, சுத்தி, என அனைத்தையும் பயன்படுத்தலாம். உடலையும் ஆயுதமாக பயன்படுத்தலாம் என்பதை மறந்துவிடாதீர்கள்.  

கைகளை வைத்து ஒருவரை முதுகில் முன்புறமாக மார்பில் வைத்து பின்புறமாக எப்படி வேண்டுமானாலும் தள்ளலாம். உங்கள் ஆற்றலைப் பொறுத்து எதிரிக்கு மார்பு எலும்புகள் கூட உடையும். கையிலுள்ள மூட்டு காயமடையாமல் இருந்தால் சரி. அதற்கென ஏற்பாடு செய்துகொண்டு வலுவான குத்துக்களை பயன்படுத்தலாம். கையில் உள்ள மூட்டுகளை பாதுகாக்கவில்லையெனில், ஒருவரின் தாடையை குத்தி பெயர்க்கும்போது காயம் ஏற்படும். எதிரிக்கு பல் விழும். உங்களுக்கு கையிலுள்ள விரல் மூட்டுகள் பழுதாகும்.
முழங்கைகளை நிறைய தற்காப்புக்கலைகளில பயன்படுத்துவார்கள். குறிப்பாக ஒருவரின் தலையில் அடித்தால் வலியை வார்த்தைகளால் விவரிக்கமுடியாது. பொறி கலங்கிப்போனது என்பார்களே அந்த ரகத்தில் தலையைச் சுற்றி குருவிகள் பறக்கும். முழங்கை எலும்புகளை நெருக்கமாக போடும் சண்டையில் பயன்படுத்தலாம்.

முழங்கால், எலும்பு, தசைக்கூட்டணி என வலுவானது. இடுப்புக்கு கீழே பிறப்புறுப்பை தாக்கினால் ஆணோ, பெண்ணோ யாராக இருந்தாலும் தலை கிறுகிறுத்துவிடும். தலை, வயிறு என பல்வேறு இடங்களில் முழங்கால் தாக்குதலை பயன்படுத்தலாம்.
பாதங்களை வைத்து என்ன செய்வது என்று கேட்கிறீர்கள். ஆனால், அதை பயன்படுத்தி கழுதை எப்படி உதைக்கிறதோ அப்படி பின்புறமிருந்து தாக்கும் எதிரிகளை தாக்கி அழிக்கலாம். பாதங்களை வலுவாக்க வேண்டுமானால், செருப்பு அணியாமல் நடப்பது, பாதத்தை ஆயுதம் போலாக்க நிறைய தற்காப்புக்கலை பயிற்சிகள் உண்டு. அதை ஒருவர் செய்யலாம்.

முதுகெலும்பை நேராக வைத்து தலையாலும் கூட தாக்குதலை நடத்தலாம். ஆனால், இதற்கு பயிற்சி அவசியம். ஆங்கில, தைவான் படங்களைப் பார்த்துவிட்டு மண்டையை உடைத்துக்கொள்ளாதீர். சரியான முறையில் தலையாலும் தாக்குதல் நடத்தலாம். முடிந்தவரை சண்டையை தவிர்க்க முயலவேண்டும். அப்படி சண்டை போட்டாலும் தாக்குபவரின் உயிர்நிலைகளை தாக்கி வீழ்த்திவிட்டு ஓடிவிடலாம். தற்காப்பு ஆயுதங்கள் சந்தையில் நிறைய கிடைக்கின்றன. அவற்றை நீங்கள் பயன்படுத்தலாம்.

உயிர்பிழைக்கவே தாக்குதல் நடத்துகிறீர்கள். பழிவாங்கவோ, பெருமையைக் காப்பாற்றவோ இல்லை என்பதை மனதில் கொள்ளுங்கள். சண்டையை முடித்தால் வீட்டுக்கு பத்திரமாக சென்று சேரவேண்டும் என்பதை இறுதி லட்சியமாக கொள்ளுங்கள்.

உயிர் பிழைக்கவேண்டும் என்ற நிலை வரும்போது எந்த விதியும் உங்களுக்கு கிடையாது. நேர்மையான சண்டை என்பது எங்குமே நடப்பதில்லை. எனவே அதைப் பற்றி கவலைப்பட வேண்டும். உங்களை நீங்கள் காத்துக்கொள்ளவேண்டும். அவ்வளவுதான். 

படம்- தொல் திருமாவளவன் - எக்ஸ் தளம்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

செக்ஸ் அண்ட் ஜென்: ஆபாச படமா? உணர்வுபூர்வ படமா?

இன்ஸ்டாமில் செக்ஸ் தொழில் ஜரூர்!

தனது செக்ஸ் பிரச்னையை வெளிப்படையாக பகிரத் தொடங்கியுள்ள இந்தியப் பெண்கள்!