முட்டாளின் தங்கம்!
அறிவியல் கேள்வி பதில்கள்
மிஸ்டர் ரோனி
கியூபிக் ஸிர்கோனியம் என்றால் என்ன?
1937ஆம் ஆண்டு, ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த கனிமவியலாளர்கள் எம் வி ஸ்டாக்ஹெல்பர்க், கே சுடோபா ஆகிய இருவரும் கியூபிக் ஸிர்கோனியத்தை கண்டுபிடித்தார்கள். 1970ஆம் ஆண்டு, சோவியத் யூனியனில் உள்ள லெபடேவ் இயற்பியல் ஆய்வகத்தில் கனிமங்களை உருவாக்கும் முயற்சி நடைபெற்று வந்தது. இதை மேற்பார்வை செய்தவர், விவி ஓசிகா என்ற அறிவியலாளர். அப்போது அந்த வட்டாரத்தில் ஸிர்கோனியம் புகழ்பெற்றதாக விளங்கியது. ஸிர்கோனியம் ஆக்சைடு, இட்ரியம் ஆக்சைடு என இரு வேதிப்பொருட்கள் கலந்து ஸிர்கோனியம் உருவாகிறது.
மதிப்பு மிகுந்த உலோகம் என்னென்ன?
தங்கம், வெள்ளி, பிளாட்டினம் ஆகிய உலோகங்களை மதிப்பு மிகுந்த உலோகங்களாக கூறலாம். மதிப்பிற்குரியது, அரியது என்ற வகையில் பிளாட்டினத்தைக் கூறலாம்.
இருபத்து நான்கு கேரட் என்பதற்கான அர்த்தம் என்ன?
இருபத்து நான்கு கேரட் என்பது, நகையில் உள்ள தங்கத்தின் தூய்மை அளவைக் குறிப்பிடுகிறார்கள். பதினெட்டு கேரட் என்றால், தங்கத்தின் தூய்மை அளவு எழுபத்து ஐந்து சதவீதம் என புரிந்துகொள்ளலாம்.
வெள்ளை தங்கம் என்றால் என்ன?
தங்கம் தொண்ணூறு சதவீதமும், பத்து சதவீதம் பல்லாடியம் உலோகமும் சேர்த்து உற்பத்தி செய்வது வெள்ளைத் தங்கம். இந்த உலோகம் பார்க்க வெள்ளை நிறத்தில் இருக்கும்.
முட்டாளின் தங்கம் என அழைக்கப்படும் உலோகம் எது?
அயர்ன் பைரைட் என்பது பார்க்க மஞ்சள் நிறமாக தெரியும். அதாவது, சரியாக சோதிக்கவில்லையென்றால் தங்கம் என வியாபாரிகள் ஏமாற்றிவிடக்கூட வாய்ப்புண்டு. உண்மையான தங்கம் அழகில் மட்டுமல்ல எடையிலும் சற்று கனமாக இருக்கும்.
யுரேனியம் எந்த நாட்டில் அதிகமுள்ளது?
உலகில் ஆஸ்திரேலியா நாட்டில் எழுபத்தைந்து சதவீத யுரேனியம் உள்ளது. அடுத்து, கஜகஸ்தான் நாட்டில் பதினேழு சதவீதம் உள்ளது. இதற்கடுத்து கனடா, அமெரிக்கா, தென் ஆப்பிரிக்கா, நமீபியா, பிரேசில், நைஜீரியா, ரஷ்யா ஆகிய நாடுகளில் யுரேனியம் கிடைக்கிறது.
கருத்துகள்
கருத்துரையிடுக