நீரில் மூழ்கும் மரக்கட்டை!

 





 

 அறிவியல் கேள்வி பதில்கள்
மிஸ்டர் ரோனி

ஸ்டெயின்லெஸ் ஸ்டீலை கண்டுபிடித்தது யார்?

அமெரிக்காவைச் சேர்ந்த எல்வுட் ஹைனஸ் என்பவர், 1911ஆம்ஆண்டு ஸ்டெயின்லெஸ் ஸ்டீலை கண்டுபிடித்தார். இவர், பல்வேறு உலோகங்களை ஒன்றாக கலந்து ஆராய்ச்சி செய்யும்போது இந்த கண்டுபிடிப்பு சாத்தியமானது. ஐக்கிய ராஜ்யத்தைச் சேர்ந்த ஹாரி பிரர்லி, ஸ்டீலை மேம்படுத்தினார். அதற்காக புகழும் பெற்றார். 1913ஆம் ஆண்டு, ஸ்டீலில் குரோமியம் சேர்த்தால், அதில் அரிப்பு ஏற்படாது என்பதை கண்டுபிடித்து உலகிற்கு அறிவித்தார். இவர்கள் இல்லாமல் பிரடெரிக் பெக்கெட், பிலிப் மொன்னார்ஸ், டபிள்யூ போர்ச்சர்ஸ் ஆகியோர் ஸ்டீலை மேம்படுத்திய பெருமைக்கு உரியவர்கள்.

டெக்னெட்டியம் என்றால் என்ன?

யுரேனியத்தில் இருந்து கிடைக்கும் ஒரு பொருளே டெக்னெட்டியம். இதை மருத்துவத்துறையில் நோயை கண்டறியும் சோதனையில் பயன்படுத்துகிறார்கள். கதிரியக்க தனிமம். 1937ஆம் ஆண்டு, கார்லோ பெரியர், எமிலியோ செக்ரே ஆகிய இருவரும் தனிமத்தை தனியாக பிரித்து சாதித்தனர்.

அமெரிக்காவிலுள்ள நாணயங்கள் எந்த உலோகத்தினால் ஆனவை?

செம்பு, துத்தநாகத்தினால் ஆனவை. காலனிய காலகட்டத்தில் அதாவது இங்கிலாந்து அமெரிக்காவை ஆளும்போது, நாணயங்கள் தங்கம், வெள்ளி, செம்பு ஆகியவற்றால் தயாரிக்கப்பட்டன. பிறகு பொருளாதார மந்தநிலை 1933ஆம் ஆண்டு ஏற்பட்டது. நாணயங்கள் செம்பு, நிக்கல் கலக்கப்பட்டன. எழுபத்தைந்து சதவீதம் செம்பும், இருபத்தைந்து சதவீதம் நிக்கலும் நாணயங்களில் இருந்தன. இப்போது செம்பும், துத்தநாகமும் பயன்படுத்தப்படுகின்றன.

நிலக்கரி சுரங்கத்தில் வரும் நச்சுவாயுக்கள் என்னென்ன?

மீத்தேன், கார்பன் மோனாக்சைட், நைட்ரஜன், கார்பன் டையாக்சைட் ஆகியவை நிலக்கரி சுரங்கத்தில் வரும் நச்சு வாயுக்கள். இவற்றை டாம்ப் என்று குறிப்பிடுகிறார்கள். வெள்ளை டாம்ப் என்பது கார்பன் மோனாக்சைடைக் குறிக்கும். கருப்பு டாம்ப் என்பது நைட்ரஜன், கார்பன் டையாக்சைட் சேர்ந்த கலவை. கருப்பு டாம்ப் வெளியேறினால், நெருப்பு எளிதாக பற்றுவதோடு, பாதிக்கப்பட்டவர்கள் மூச்சு திணறத் தொடங்குவார்கள்.

மரக்கட்டை நீரில் முழ்குமா?

ஏன் மூழ்காது? அயர்ன்வுட் என்ற மரக்கட்டை அதன் அடர்த்தி காரணமாக நீரில் தூக்கிப்போட்டால் உடனே மூழ்கும். இதில் நிறைய பிரிவுகள் உண்டு, இவை அனைத்துமே பெயரில் வேறுபட்டாலும் நீரில் மூழ்குபவைதான். அயர்ன்வுட்டுக்கு அடுத்து பால்ஸாவுட் என்ற மரவகையும் நீரில் முழ்குபவை.

எசென்சியல் ஆயில் என்பவை என்ன?

பெர்காமொட், யூகலிப்டஸ், இஞ்சி, பைன், ஸ்பியர்மின்ட், வின்டர்க்ரீன் ஆகிய எண்ணெய்கள் எசென்சியல் ஆயில் எனப்படுகின்றன. இவற்றை இப்போது செயற்கையாகவும் தயாரிக்கிறார்கள். இவற்றை எளிதாக ஆல்கஹாலில் கரைத்து வாசனை திரவியங்கள்,கிருமிநாசினி, மருந்து என பல்வேறு வடிவங்களில் பயன்படுத்த முடியும்.



கருத்துகள்

பிரபலமான இடுகைகள்