இடுகைகள்

ரென் ஜெங்ஃபெய் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மேற்கு நாடுகள் ஹூவாவெய் மீது நடத்திய வன்ம தாக்குதல்!

படம்
  ஹூவாவெய், உலகளவில் முக்கியமான தொலைத்தொடர்பு சேவை நிறுவனம். சிறந்த நிறுவனங்களோடு இணைந்து பணியாற்றியும் வந்தது. ஆனாலும் அதன் பூர்விகம் சீனா என்பதை யாரும் மறக்கவில்லை. இதை ரென் உணர்ந்தபோது நிறுவனத்தின் பெயரை ஊடகங்கள் வெறுப்புடன் உச்சரித்துக்கொண்டிருந்தனர்.   2005ஆம் ஆண்டு சீனாவில் ஹூவாவெய் நிறுவன அலுவலகத்தில் வேலை செய்த பணியாளர் மூளை அழற்சியால் இறந்துபோனார். உடனே அந்த விவகாரத்தை கையில் எடுத்த ஊடகங்கள், அய்யகோ மெத்தை கலாசாரம் தொடங்கிவிட்டது. அதனால்தான் இப்போது ஒரு உயிர் போய்விட்டது என கூக்குரலிடத் தொடங்கின. மேலும் விவரங்கள் தெரியவேண்டுமா? விளம்பரத்திற்கு பிறகு பாருங்கள் என ஸ்க்ரோல் செய்திகள் போட்டன.   ஹூவாவெய் நிறைய விஷயங்களில் மாறியிருந்தது. ஆனால் கலாசாரம் சார்ந்த விஷயங்களில் பெரிய மாற்றமில்லை. காரணம், ரென்னின் ராணுவப்பணிதான். முன்னமே ரென் சில கொள்கைகளை பின்பற்றுகிறார் என குறிப்பிட்டிருந்தோம். அது வேறொன்றுமில்லை. ராணுவத்தில் இருக்கும் முக்கிய கொள்கையான கீழ்படிதல். அந்த இயல்பு இல்லாமல் ராணுவத்தில் ஒருவர் வேலை செய்யமுடியாது. மேலதிகாரியின் உத்தரவுக்கு கீழ்ப்படிந்தே ஆகவேண்டும். இல்லையென்றா

நான் துறவி அல்ல!

படம்
  ஹூவாவெய்யை குழுவைத் திரட்டி வேட்டையாடும் ஓநாய் என்றே கூறலாம். வாசனையை முகரும் மூக்கு, மூர்க்கமான குணம், குழுவாக வேட்டையாடும் இயல்பு ஆகியவற்றை வைத்தே ஓநாய் இன்றும் உலகில் மனிதர்களை சமாளித்து வாழ்கிறது. இல்லையெனில் பிற விலங்குகளைப் போல எப்போதோ அழிந்து போயிருக்கும்.   ஹூவாவெய் நிறுவன உள்நாட்டு ஊழியர்களுக்கு அதன் நோக்கம் எளிதாக புரியும். ஆனால் வெளிநாட்டு ஊழியர்களைப் பொறுத்தவரை அவர்களுக்கு முதலில் கடின உழைப்பு என்பதே புரியவில்லை. பின்னர்தான் அதை ஏற்றுக்கொண்டனர். 2008ஆம் ஆண்டு ஐரோப்பிய நாடுகள் பொருளாதார மந்தநிலையில் தவித்தபோது ஜெர்மனி மட்டுமே சற்று சரிவில்லாமல் இருந்தது. இத்தனைக்கும் மக்கள் நலத்திட்டங்களுக்கு நிறைய செலவழிக்கும் நாடுதான் அது. பொறியியல் துறையில்  ஜெர்மனி செய்த சாதனைகள் அதிகம். இசை அமைப்பாளர்கள், நடிகர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், ஓவியர்கள்  என பல்வேறு  ஆளுமைகளை உருவாக்கி உலகிற்கு அளித்த நாடு அது.   ஹூவாவெய் நிறுவனத்தில், ரென்னுக்கு 1.42 சதவீத பங்குள்ளது. மீதி அனைத்தும் ஊழியர்களுடையதுதான். நிறுவனத்தின் பங்குகளை பிரித்துக்கொடுப்பதை, சில ஆண்டுகளுக்குப் பின்னர் ரென் தான் முடி