இடுகைகள்

ஜெப்ரி டாமர் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தனிமைத் துயரைப் போக்கும் பிணங்கள் - ஜெப்ரி டாமர்

படம்
  அசுரகுலம் ரத்த சாட்சி 1.0 ஜெப்ரி டாமர் பெயரை குற்ற உலக வரலாறு எப்போதும் மறந்திருக்காது. இவரது பெயரில் ஓடிடியில் தொடரைக் கூட வெளியிட்டு வருகிறார்கள்.   1991ஆம் ஆண்டில் பதினேழு பேர்களை வெட்டி கொலை செய்திருந்தார். இவர் கொலை செய்ய திட்டமிட்டவர்களில் ஒருவர் மட்டும்   தப்பிப் போய் காவல்துறைக்கு தகவல் கொடுத்து கொலைத் திருவிழாவை தடுத்துவிட்டார். இல்லையென்றால் கொலைகள் ஒருவழியாக ரவுண்ட் ஃபிகராக வந்திருக்கும். கொலை செய்தவர்களின் உடல்களை, வெட்டியெடுத்த உடல் பாகங்களை தடய அறிவியல் துறையை விட தெளிவாக புகைப்படம் எடுத்து வைத்திருந்தார் டாமர். அதெல்லாம் காவல்துறைக்கு அவரது குற்றத்தைப் புரிந்துகொள்ள உதவின. குளிர்பதனப் பெட்டியில் குடல், குண்டாமணி, இதயம், நுரையீரல் என அனைத்தையும் பங்கு பாகம் பிரித்து வைத்திருந்தார். உடல்களை கரைக்க, பதப்படுத்தவென பேரல் நிறைய அமிலங்களும் இருந்தன.   காவல்துறை சேகரித்தது பதினொரு ஆண்களின் உடல் பாகங்களைத்தான். அதற்கும் மேல் ஆறு பேர் உண்டு என கூடுதல் தந்து உதவினார் டாமர். பின்னே இதெல்லாம் சாதனைதானே? பதினெட்டு வயதில் ஸ்டீவ் ஹிக்ஸ் என்பவரைக் கொலை செய்து ரத்த ருசி கண்டார்.