மதவாத சமூகம் புறக்கணித்த தலித்துகளின் சமையலறை!
தலித் கிச்சன்ஸ் ஆப் மராத்வடா சாகு படோல் ஆங்கிலம் ஹார்பர் கோலின்ஸ் இந்த நூலில், எழுத்தாளர் சாகு படோல் மும்பையில் உள்ள தலித் மக்களின் வாழ்க்கை, சாதிமுறை, கொண்டாடும் பண்டிகைகள், நம்பிக்கை, உணவுமுறை, அதை செய்வது எப்படி என ஏராளமான தகவல்களைக் கொண்டு விளக்கியுள்ளார். பெரும்பாலும் அசைவ உணவுகள்தான். சைவ உணவு செய்முறைகளும் இறுதியில் உள்ளன. அதை தவிர்த்துவிடுவோம். அசைவ உணவுகளை எப்படி சமைக்கிறார்கள் என்பதே நம்மை பெரிதும் ஆச்சரியப்படுத்துகிறது. அசைவ உணவு செய்முறைகளில் பலவும் மிகச்சில பொருட்களை வைத்தே செய்கிறார்கள். நிறைய அசைவ பொருட்களை சமைக்க நீர் கூட பயன்படுத்தப்படுவதில்லை. சட்டியில் கறியை போட்டு அதை சூட்டில் வறுப்பதே பெரும்பாலான உணவு செய்முறையாக உள்ளது. விலங்கின் ரத்தத்தை ஊற்றி அதை வேக வைக்கும் முறை தொடங்கி, தலித்துகளின் உணவுமுறை பற்றிய வியப்பு தொடங்குகிறது. மும்பையில் உள்ள சாதிமுறை, சாதி மேலாதிக்கம், தெய்வ வழிபாடு பற்றியும் விரிவாக கூறியுள்ளார். அவர்களின் வழிபாட்டில் தமிழ்நாடு, கர்நாடகம் ஆகிய மாநிலங்களின் தெய்வ கதைகளும் உள்ளன. சாதிமுறையில் தலித்துகளுக்கும் நிறைய பிரிவினைகள் உள்ளன. நூலில், மக...