இடுகைகள்

ஆவி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மறுபிறப்பெடுத்து இரண்டாயிரம் ஆண்டுகளாக அடைத்து வைத்த தீயசக்தியுடன் போராடும் பூசாரி!

படம்
  ஃபிரம் நவ் ஆன் இட்ஸ் ஷோ டைம் ஃபிரம் நவ் ஆன், இட்ஸ் ஷோ டைம் கே டிராமா ராக்குட்டன் விக்கி இரண்டாயிரம் ஆண்டுகளாக அடைக்கப்பட்ட தீயசக்திக்கும், அதை அடைத்த பூசாரிக்குமான   ஜென்மச் சண்டை. தொன்மைக் கால கொரியா. அங்குள்ள சிற்றரசு நாடு. அதில் வாழும் தலைமை பூசாரி, பஞ்சம் தீர்க்க தனது புனித கண்ணாடியைக் கொண்டு   வேண்டிய மழையை வரவைக்கிறார். நாடு செழிப்புறுகிறது. நாட்டு மக்களும் மகிழ்கிறார்கள். அந்த நாட்டின் மன்னரின் மகள், அதாவது இளவரசி அனைவரின் முன்னிலையில் தான் பூன் சிக் என்ற தலைமை பூசாரியை காதலிப்பதாக பேனர் பிடித்து சொல்கிறாள். பூன் சிக்கிற்கு என்ன சொல்வது என்று தெரியாத நிலை, இளவரசியை தான் விரும்புகிறேன் என்று சொன்னால் அடுத்த நொடி அவரின் தலையை வெட்டி எறிந்துவிடுவார்கள். அவரின் இனத்தை   அழித்து வீடுகளை கொளுத்திவிடுவார்கள். எனவே இளவரசியிடம் அரச குல ஆட்களைப் பார்த்து மணந்துகொள்ளுங்கள். தான் தாழ்ந்த குலத்தை சார்ந்தவன் என்று கூறுகிறார். ஆனால், இளவரசி கேட்பதாக இல்லை. தலைமை பூசாரியும், இளவரசியும் குணத்தில் ஒன்று போலத்தான். தன்னை அழித்துக்கொண்டாவது பிறருக்கு நன்மை செய்பவர்கள். இதுதான் அவர்களை

நண்பகலில் ஜேம்ஸின் உடலுக்குள் புகும் ஆவி - நண்பகல் நேரத்து மயக்கம் - லிஜோ ஜோஸ் பெல்லிச்சேரி

படம்
  நண்பகல் நேரத்து மயக்கம் - மலையாளம் நண்பகல் நேரத்து மயக்கம் மலையாளம் இயக்கம் லிஜோ ஜோஸ் பெல்லிச்சேரி வேளாங்கண்ணி கோவிலுக்கு போய்விட்டு கேரளத்துக்கு திரும்பிக்கொண்டிருக்கும் ஒரு நபர், திடீரென வேனில் இருந்து இறங்கி ஊருக்குள் சென்றுவிடுகிறார். அங்குள்ள வீட்டில் வாழ்ந்து இறந்துபோன ஒருவராக (சுந்தரம்) மாறி வேலை செய்கிறார். உண்மையில் அவருக்குள் என்ன நடந்தது, ஏன் கிராமத்திலுள்ள வீடு ஒன்றுக்கு சென்று தங்குகிறார் என்பதே கதை. ஆன்மா, இன்னொருவரின் உடலுக்குள் இறங்கி தனது குடும்பத்தைப் பார்த்துக்கொள்வதுதான் கதை. இயக்குநர் லிஜோ, சிஜி ஏதும் இல்லாமல் மனிதர்களின் உணர்வுகளை படம்பிடித்திருக்கிறார். இதனால் நண்பகல் நேரத்து மயக்கம் சிறந்த படமாக மாறுகிறது. படத்தின் கதை புதுமையானது என்று எல்லாம் கூறிவிட முடியாது. இந்து மதத்தில் உள்ள இறந்துபோனவர் மீண்டும் இன்னொரு உடலில் புகுந்து ஆசையை நிறைவேற்றிக்கொள்வதுதான் படத்தின் மையக்கதை. ஆனால் அதை லிஜோ கையாண்ட விதம் முழுக்க மனிதர்களின் உளவியல் சார்ந்த தன்மையில் என்பதுதான் படத்தை நேர்த்தியான படமாக மாற்றியிருக்கிறது. சந்தைக்கு சென்ற கணவர் காணாமல் போய்விடுகிறார்

பேய்ப்படங்களை கேலி செய்யும் சிரிப்பே வராத படம் - இடியட் - ராம் பாலா

படம்
  இடியட் இயக்குநர் ராம்பாலா மிர்ச்சி சிவா, நிக்கி கல்ராணி செம்மனூர் ஜமீன், அவரது படைத்தளபதிகளால் நயவஞ்சகமாக கொல்லப்படுகிறார். கூடவே அவரது மனைவி, மகன், மகள் என எல்லோரும்தான்.அவர்கள் ஆவியாக வந்து தங்களைக் கொன்றவர்களின் வம்சாவளியை எப்படி பழிவாங்குகிறார்கள் என்பதே கதை. படம் பேய்ப்படமாக இருந்தாலும் ஒட்டுமொத்தமாக பேய்ப்படங்களை கிண்டல் செய்வதுதான் படம் நெடுக நடக்கிறது. ஆனால் படத்தில் எந்த காட்சிக்கும் நமக்கு சிரிப்பே வருவதில்லை என்பதுதான் பேரதிர்ச்சி. ராசுக்கவுண்டர், அவரது மகன் சின்ராசு ஆகியோருக்கான உறவு காட்டப்படும்போது சற்று ஆறுதலாக இருக்கிறது. ஆனந்தராஜின் நடிப்பும், மிர்ச்சி சிவாவின் வசனக் காமெடிகளும்தான் முதல் பகுதியில் நம்மைக் காப்பாற்றுகிறது. பிற்பகுதி படம் முழுக்க சேனாபதி மனநல மருத்துவமனையில்தான் நடக்கிறது. இடியட் படம் பேய்ப்படங்களை கிண்டல் செய்கிற படம். எனவே, இது பயமூட்டும் பேய் படமாக உருவாகவில்லை. குறைந்தபட்சம் அப்படி கிண்டல் செய்கிற இயல்பில் பார்வையாளர்கள் சந்தோஷப்பட ஏதேனும் வாய்ப்பு இருக்கிறதா என்றால் அதுவும் இல்லை. திரையில் இருவர் இருக்கிறார்கள். எப்போதும் பேசிக்கொண்டே

உலகிலுள்ள வினோதமான காடுகள்- தெரிஞ்சுக்கலாம் வாங்க!

படம்
  ஆவோகிகாகரா, ஜப்பான் வினோதமான காடுகள் விஸ்ட்மேன்ஸ் வுட் இங்கிலாந்து டர்ட்மூர் தேசியப்பூங்காவின் ஒருபகுதியாக விஸ்ட்மேன்ஸ் வுட் காடு உள்ளது. தென்மேற்கு பகுதியில் இந்தக் காடு அமைந்துள்ளது. உயரமாக ஓக் மரங்களின் கிளைகள் படர்ந்து வளர்ந்துள்ளதால் காட்டுக்குள்ளிருந்து ஆகாயத்தைப் பார்ப்பதே கடினமாக இருக்கும். பேய், பூதம், பிசாசு இருக்கும் என்றாலும் நம்பியே ஆகவேண்டிய அனைத்து செட்டப்புகளும் இக்காட்டில் உண்டு.  தி ஸ்வார்ஸ்வால்ட் ஜெர்மனி இதனை கருப்புக்காடு என்று சொல்லுகிறார்கள். பிரதர்ஸ் கிரிம்ப் போன்றோர் இக்காடு பற்றி ஏராளமான கதைகளை எழுதியுள்ளனர். ஓநாய் இருக்குமாம், சூனியக்காரிகள் இருப்பார்களாம், தீய சக்திகள் குடியிருக்கும் காடாம் என அரண்மனை 4, 5 எடுக்கும் அளவுக்கு சமாச்சாரங்கள் உள்ளன. இக்காட்டிற்குள் நுழையும் சிறுவர்கள், அவர்களின் பாவக்கணக்கிற்கு ஏற்ப தண்டிக்கும் அரக்க மனிதனும் இருக்கிறான் என்று சொல்லுகிறார்கள். இக்காட்டிற்குள் உள்ளே போனவர்கள் திரும்ப வெளியே வரமுடியாது எனவும் கதை கட்டி வருகிறார்கள்.  தி ஹோயா பசியு காடு ரோமானியா வடமேற்கு ரோமானியாவில் அமைந்துள்ள காடு. இதனை ரோமானியாவின் பெர்முடா டிர

நிதானமான ஆவி! - பழிக்குப்பழியில் வருகிறது கொட்டாவி

படம்
சௌபர்ணிகா - கோட்டயம் புஷ்பநாத் தமிழில் - சிவன் விலை - 65 சின்னத் திருமேனி ஸ்ரீகுமார், எலும்புக்கூடு ஒன்றை கல்லூரி லேபில் ஒன்று சேர்க்கிறார். இதன் விளைவாக சக்தி பெறும் ஆத்மா அவரை எதிரிகளை பழிவாங்க உதவக்கோருகிறது. அதற்கு அவர் இசைய, நேரும் பல்வேறு பிரச்னைகள், ஹோமங்கள், ஏவல்கள், பில்லி சூனியங்கள்தான் கதை. முழுக்க யூ சர்டிபிகேட் கதை. ஸ்ரீதேவி எனும் பெண் சொத்துக்காக்க சந்து நாயரால் கொல்லப்படுகிறார். அதற்கு பழிவாங்க ஸ்ரீகுமாரைப் பயன்படுத்துகிறார். ஸ்ரீகுமார், நம்பூதிரி குடும்பம் என்றாலும் அவருக்கு மாந்த்ரீகத்தில் அனுபவமில்லை. எனவே, அவரின் குலதெய்வமான பகவதி தன் சக்தியை அவருக்கு கொடுத்து உதவுகிறாள். அது என்ன? அவரின் எதிரிகள் யார்? என்பதுதான் கதை. காதல், செக்ஸ் இல்லாத கதை என்பதால் கதையில் பெரிய வேகம் இல்லை. எதிரிகளின் நோக்கம் சொத்து என்பது ஓகே. அதனைக் காப்பாற்றுபவருக்கு அதன் மீதான தீவிர மோகம் இல்லை என்பதால், கதை பாதியில் நொண்டியடிக்கிறது. ஸ்ரீதேவியின் ஆவி கூட நாளைக்கு பழிவாங்கிக்கொள்ளலாம் என்று நிதானமாக இருப்பது கதையினை நீட்டிக்க என்றே புரிந்துகொள்ள முடிகிறது. சன்டிவியில் திகில்