இடுகைகள்

ஆஸ்திரேலியா லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

உடலைத் தீய்க்கும் பாலைவனப் பயணத்தில் இயற்கையைப் புரிந்துகொள்ளும் பெண்! தடங்கள் -ராபின் டேவிட்சன்

படம்
  தடங்கள் ராபின் டேவிட்சன் தமிழில் – பத்மஜா நாராயணன் எதிர் வெளியீடு   அமெரிக்காவைச் சேர்ந்த பெண்மணி, ஆஸ்திரேலியாவின் பாலைவனத்தை தனியாக கடக்கிற பயணத்தை, அதற்கான திட்டமிடலை, போராட்டத்தை க்கூறுகிற கதை இது. நூல் மொத்தம் 300 பக்கங்களைக் கொண்டுள்ளது. இந்த பக்கங்கள் முழுவதும் ஒட்டகங்கள், அவற்றை வளர்ப்பது, பாதுகாப்பது, பராமரிப்பது பற்றித்தான் அதிகம் பேசப்பட்டுள்ளது. டூக்கி, கோலியாத், ஜெலிகா ஆகிய ஒட்டகங்களோடு ஆசிரியருக்கு இருக்கும் உறவானது, மனிதர்களோடு இருக்கும் உறவை விட உறுதியானதாக மாறுகிறது. டிக்கிட்டி எனும் பெண் நாயை ஆசிரியர் இழக்கும் சமயம், ஆசிரியரின் மனதிற்குள் நடக்கும் விரக்தி, வெறுமை நம்மையும் பற்றிக்கொள்கிறது. பாலைவனப் பரப்பு மனித மனங்களில் ஏற்படுத்தும் பாதிப்புகளை   விளக்கும் பகுதிகள் சிறப்பாக எழுத்து வடிவம் பெற்றுள்ளன. வெப்பம், மிக அதிக வெப்பம், தாங்க முடியாத வெப்பம் என்பதே அங்கு பயணிப்பவர்கள் அனுபவிக்கவேண்டிய சூழ்நிலை. இந்த நிலையில் ஒருவர் சந்திக்கும் அனுபவங்கள் என்னவாக இருக்கும்? காட்டு ஒட்டகங்களின் தாக்குதல், சுற்றுலா பயணிகளின் நாகரிகமே இல்லாத புகைப்பட வேட்கை,   வழிப்

ஆஸ்திரேலியாவுடனான டெஸ்ட்போட்டி எனது வாழ்க்கையை மாற்றிப்போட்டது! ஹர்பஜன்சிங் - 13 விக்கெட்டுகளை அள்ளிய பாஜி

படம்
              2001 ஆம் ஆண்டு இந்தியாவிற்கும் ஆஸ்திரேலியாவிற்கும் ஈடன் கார்டன் மைதானத்தில் டெஸ்ட் போட்டி நடைபெற்றது . அதில் பெற்ற வெற்றி இந்தியாவிற்கு முக்கியமானது . கூடுதலாக அதில்தான் இருபது வயதான சர்தார் ஒருவர் அணிக்கு கிடைத்தார் . பாஜி என்று அழைக்கப்படும் ஆக்ரோஷ சுழற்பந்து வீச்சாளரான ஹர்பஜன் சிங்தான் அவர் . முதல்நாளில் மூன்று விக்கெட்டுகள் , அடுத்தநாள் ஐந்துவிக்கெட்டுகள் என எடுத்தவர் அந்த போட்டியில் இந்திய அணி மகத்தான வெற்றி பெற்றது . பாஜி 13 விக்கெட்டுகளை எடுத்திருந்தார் . அவரது வாழ்க்கையே அதற்குப்பிறகு மாறியது . இத்தனைக்கும் இந்த போட்டியில் அவரைத் தேர்ந்தெடுத்ததில் சௌரவ் கங்குலி , பயிற்சியாளர் ஜான் ரைட் ஆகியோருக்கும் முக்கியப் பங்குண்டு . 2001 ஆம் ஆண்டு போட்டி பற்றி உங்கள் கருத்து… அந்த போட்டி எனது வாழ்க்கையை மாற்றியது . இந்திய அணியாக எங்களால் யாரையும் எதிர்த்து போட்டியிட்டு வெல்ல முடியும் என்ற நம்பிக்கையை கொடுத்தது .    உலகில் சிறந்த அணிக்கு எதிராக போட்டியிட்டீர்கள் என்று கூறலாமா ? என்னைப் பொறுத்தவரை அனைத்து விளையாட்டுப் போட்டிகளுமே நாம் பிழைத்தி

நடுவராவதற்கு கடுமையான முன்தயாரிப்புகள் அவசியம்!

படம்
நேர்காணல் ஆஸ்திரேலிய நடுவர் சைமன் டஃபல் , தற்போது ஓய்வு பெற்றுள்ளார். பணிக்காலத்தில் பிறருக்கு எடுத்துக்காட்டாக பணியாற்றியவர் இவர். தற்போது அதிகாரிகளுக்கான ஆளுமைப்பயிற்சிகளை அளித்து வருகிறார். அவரிடம் கிரிக்கெட் பற்றிப் பேசினோம். விராட் கோலி, தோனி இருவரின் ஸ்டைல் மற்றும் பிளஸ் மைனஸ்களை சொல்லுங்கள்.  விராட் கோலி ஆஸ்திரேலியா அணியை டெஸ்ட் போட்டிகளில் 71 ஆண்டுகளுக்கு பிறகு வென்றபிறகு அளித்த பேட்டியைப் பார்த்தேன். என்னால் அந்த நிகழ்வை மறக்கவே முடியாது. மிகவும் கவனமாக அணியை ஒருங்கிணைத்து வெற்றியைப் பெற்றுத்தந்தவர். அணியின் முன்னாள் அணித்தலைவரான தோனி மீது பெரும் மரியாதை கொண்டவர் விராட். இன்றைய நவீன தலைமுறைக்கான புதுமையான வழிமுறையைக் கொண்டது கோலியினுடையது. ஆனால் தோனியினுடையது, நிதானமாக ஒருங்கிணைப்பட்டதாக இருக்கும். நீங்கள் பணிக்காலத்தில் ஐசிசி அளிக்கும் ஆண்டின் சிறந்த நடுவர்  விருதை ஐந்து முறை பெற்றிருக்கிறீர்கள். எப்படி சாத்தியமானது? தொண்ணூறுகளில் நான் நடுவராக பணியாற்றத் தொடங்கினேன். அப்போது விளையாட்டுத்துறை மீது கவனம் குவியத் தொடங்கியது. இத்துறையில் கிடைக்கும் பணம், புகழுக்

சுற்றுலா பயணிகளை கொல்லும் சைக்கோ கொலைகாரர்! - இவான் மிலாட்

படம்
அசுரகுலம் இந்த தொடரில் நீங்கள் ஏற்கனவே அமெரிக்க ஆட்களை நிறைய பார்த்துவிட்டீர்கள். எனவே அந்த அத்தியாயம் இத்தோடு முடிந்தது. இனி உலகம் முழுக்க உள்ள சில முக்கியமான சைக்கோ சீரியல் கொலைகார ர்களை பார்ப்போம். இப்போது ஆஸி.யைச் சேர்ந்த இவான் மிலாட்டைப் பார்ப்போம். ஆஸ்திரேலியாவில் தொண்ணூறுகளில் இவர் பிரபலம். ஏழு பேர்களை கொன்று புதைத்தார். அதற்கான பெருமை இவானையே சேரும். இதற்கான காரணங்களைப் பார்ப்போம். வாங்க. இவான் மிலாட்டை மையமாக வைத்து பத்திரிகையாளரும் எழுத்தாளருமான விட்டேகர் சின்ஸ் ஆப் தி பிரதர் என்ற நூலை எழுதினார். பின்னாளில் இந்த நூல் திரைவடிவமானது. அதன் பெயர் வோல்ஃப் க்ரீக். 1944ஆம் ஆண்டு பிறந்தவர் இவான். இவரது தந்தை கடும் முன்கோபி. அதிலும் ரொமான்ஸ் மூடு ஏகத்திற்கும் ஏற, பதினான்கு பிள்ளைகளை பெற்றார் அவரது அம்மா. அதில் வறுமை காரணமாக 13 பிள்ளைகள் சிறுவயதிலேயே இறந்து போனார்கள். குரோஷிய நாட்டுக்கார குடும்பம் இது. அகதிகள் குடும்பம் என்றால் எடுப்பார் கைப்பிள்ளை போலத்தானே? ஆஸி.யின் சிட்னிக்கு வெளியே உள்ள மூர்பேங்கில்தான் வீடு. அங்கு கத்தோலிக்க பள்ளிக்கு இவான் மற்றும் அவர்களின்