இடுகைகள்

ஓப்பன்மைண்ட்ஸ் 2023 லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஓப்பன் மைண்ட்ஸ் 2023 நிறைவுப்பகுதி - ஜெரோதா நிதின் காமத், சசிதரூர், சல்மான் ருஷ்டி, நந்தன் நீல்கேனி

படம்
  சல்மான் ருஷ்டி, எழுத்தாளர் சசிதரூர், எழுத்தாளர், நாடாளுமன்ற உறுப்பினர் தொழில்நுட்ப ஆலோசகர் நந்தன் நீல்கேனி நிதின் காமத், ஜெரோதா ஓப்பன் மைண்ட்ஸ் 2023 சல்மான் ருஷ்டி 76 எழுத்தாளர் இந்தியாவை மையப்படுத்திய விக்டரி சிட்டி என்ற நாவலை வெளியிட்டார். நியூயார்க்கின் சட்டாகுவா என்ற இடத்தில் நூல் தொடர்பான நிகழ்ச்சியில் பங்கேற்றபோது, தீவிரவாதி ஒருவனால் கடுமையாக தாக்கப்பட்டார். ஈரான் நாட்டின் அயதுல்லா கோமெய்னி என்ற மத அடிப்படைவாத தலைவரால் தூண்டுதல் பெற்ற ஆள்தான் தாக்குதலுக்கு காரணம். சல்மான் ருஷ்டி. தனது கற்பனைக்கு கொடுத்த பெரிய விலை இத்தகைய தாக்குதல் என கூறலாம். விக்டரி சிட்டி நாவல், விஜயநகர பேரரசரைப் பற்றிய புனைவை மையமாக கொண்டது. இதற்கு முன்னர், மிட்நைட் சில்ரன் என்ற ஒரு நாவலை இந்தியாவின் சுதந்திரத்தை மையமாக வைத்து எழுதினார் ருஷ்டி. மத அடிப்படைவாதிகளை தூண்டிவிடும் அளவுக்கு கற்பனை வளம் கொண்ட எழுத்துக்கு சொந்தக்காரர். மாய அழகு கொண்ட எழுத்துக்களால் பேரரசர்கள் மறைந்துவிட்ட உலகிலும் புகழ்பெற்று பேசப்படுகிறார் ருஷ்டி. எதிர்காலத்திலும் அவரது நாவல்கள் புகழ்பெற்று விளங்கும் என்பதை மறுக்க முடி

ஓப்பன் மைண்ட்ஸ் 2023 - ராஜ் ஷெட்டி, மாதாபி, ரோகினி பாண்டே, மஞ்சுள் பார்க்கவா

படம்
  மாதாபி, தலைவர், செபி ராகுல் பாட்டியா, இண்டிகோ என் சந்திரசேகரன், டாடா குழுமம் ரோகினி பாண்டே, பொருளாதார வல்லுநர் ராஜ் ஷெட்டி, பொருளாதார வல்லுநர் ராஜ் செட்டி 43 பொருளாதா வல்லுநர் டெல்லியை பூர்விகமாக கொண்ட பொருளாதார வல்லுநர். அரசின் கொள்கைகளை பொருளாதார தகவல்கள் அடிப்படையில் உருவாக்கவேண்டும் என்பதை தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறார். தனது 29 வயதில் பெருமை மிக்க ஜான் பேட்ஸ் கிளார்க் விருதை வென்றவர். இந்த விருது, பேபி நோபல் பரிசு என மரியாதையாக குறிப்பிடப்படுகிறது. பொருளாதார   பாகுபாடுகள் பற்றிய ஆய்வுகளை அர்ப்பணிப்புடன் செய்தவர், ஏழை மக்களில் 30 சதவீதம்பேர்தான் உயர்கல்விக்கு செல்கிறார்கள் என்ற உண்மையைக் கூறியிருக்கிறார். தற்போது ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் பொது பொருளாதாரப் பிரிவில் பேராசிரியராக உள்ளார்.   மாதாபி பூரி புச் தலைவர்,செபி நிதி சந்தையைக் கட்டுபடுத்தும் ஒழுங்குமுறை அமைப்பின் முதல் பெண் தலைவர். ஐஐஎம் அகமதாபாத்தில் எம்பிஏ பட்டதாரி. கடந்த ஆண்டு செபியில் தலைவராக பதவியேற்றவர், அதன் செயல்பாடுகளில் வெளிப்படைத்தன்மையை உருவாக்க முனைந்து வருகிறார். பொதுவாக அரசியல்வாதிகளுக்க

ஓப்பன் மைண்ட்ஸ் 2023 - மீனா கந்தசாமி, தில்ஜித் தோசன்ஜி, வினோத்குமார் சுக்லா

படம்
  கவிஞர் மீனா கந்தசாமி எழுத்தாளர் வினோத்குமார் சுக்லா ஓப்பன் மைண்ட்ஸ் 2023 தில்ஜித் தோசன்ஜி 39 பாடகர், எழுத்தாளர், பாடலாசிரியர் இன்ஸ்டாகிராமில் பதினைந்து மில்லியன் ரசிகர்களைக் கொண்டுள்ள கலைஞன். பஞ்சாபி இசையை பிராண்டிங் செய்து உலகம் முழுக்க கொண்டு சென்றுவருகிறார். பிரதமர் மோடி அமெரிக்காவிற்கு சென்றபோது, மேடையில் பேசிய செயலாளர் ஆன்டனி பிலிங்கன், “”தோசன்ஜியின் பாடல்களுக்கு நாங்கள் நடனமாடிக்கொண்டு இருக்கிறோம்” என புகழ்ந்து பேசினார். கோச்செல் இசைவிழாவில் பஞ்சாபி மக்களின் உடைகளை அணிந்து கொண்டு பாடல்களை பாடி நடனமாடி அசத்தினார். இந்தி திரைப்பட உலகில் நிறைய படங்கள் நடித்தாலும் அவரை கவனிக்க வைத்தது உட்டா பஞ்சாப் என்ற படம்தான். இந்தி திரைப்படங்களைக் கடந்து தனியிசை பாடல்கள் மூலம் பெரிய கவனம் பெற்றவர், பஞ்சாபி மொழி படங்களிலும் தொடர்ச்சியாக நடிக்கிறார். ஜூட் அந்தாணி ஜோசப் 40 திரைப்பட இயக்குநர், மலையாளம்.   2018 எவரி ஒன் இஸ் ஹீரோ என்ற படத்தை எடுத்தார் ஜோசப். இயற்கை பேரிடரை அடிப்படையாக வைத்து படத்தை உருவாக்கி வெற்றி பெற்றவர்கள் உலகளவில் குறைவு. இவரது படம், கேரளத்தில் மட்டுமே 200 கோடி