இடுகைகள்

வலை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

வௌவால்களை ஆராய்வது எளிதல்ல - குளோரியானா சாவேரி

படம்
  உயிரியலாளர் குளோரியானா சாவேரி, கோஸ்டாரிகா பல்கலைக்கழகம். மத்திய அமெரிக்காவில் உள்ள நாடு, கோஸ்டாரிகா. இங்குள்ள கோஸ்டாரிகா பல்கலையில்  உயிரியலாளராகப் பணியாற்றி வருபவர், குளோரியானா சாவேரி (Gloriana Chaverri). இவர் ஒற்றை இழை வலை (fine-corded monofilament net) மூலம் 20 இனத்தைச் சேர்ந்த 125 வௌவால்களை எளிதாகப் பிடித்து ஆராய்ந்துள்ளார்.  வௌவால்களை எப்படி பிடிக்கிறீர்கள்? கோஸ்டாரிகா பகுதியில் உள்ள காட்டில், வௌவால்களை இரவு நேரத்தில் தான் பிடித்தோம். இரவு 6முதல் 8 மணிக்குள் நிலத்திற்கு அருகில் வலைகளைக் கட்டி வைக்கிறோம். இரவு நேரத்தில் உணவு தேடுவதில் வௌவால்கள் வேகம் காட்டும். சூரியன் மறைந்தபிறகு, வலையை விரித்து நள்ளிரவு வரை காத்திருப்போம். எங்களது வலையில் மாட்டிக்கொண்ட வௌவால்கள் அதிலிருந்து விடுபட, இழைகளைத் தீவிரமாக கடிக்கும். அவை,எளிதில் துண்டிக்க முடியாதவை. 20 நிமிடங்களுக்கு ஒருமுறை வலையைச் சோதிப்போம்.  வௌவால்களைப் பிடிக்க பல்வேறு வலைகளை சோதித்திருப்பீர்கள். என்ன வேறுபாடுகளைப் பார்க்கிறீர்கள்?  கோஸ்டாரிகாவில் 2013ஆம் ஆண்டுதான் ஒற்றை இழை வலையை நான் பார்த்தேன். அதில் வௌவாலைப் பிடிக்க முடிந்தது.

ரோபோக்களின் தயாரிப்பில் சிலந்தி!

படம்
பிபிசி சிலந்தியின் வலை உண்மையில் பலரையும் ஆச்சரியப்படுத்தி வருகிறது. காரணம், அதன் பிரமாண்ட வடிவம். இதோடு ஆஸ்திரேலியாவில் பல கி.மீ. தூரத்திற்கு அமைக்கப்படும் வலை கூட சிலந்தியின் கைவண்ணம்தான்.  தற்போது சிலந்தி வலைகளை ரோபோக்களின் உடலில் தசைகளாக பயன்படுத்த முடியுமா என யோசித்து வருகின்றனர். இது எதிர்காலத்தில் சிறந்த பயனை அளிக்கலாம். பேராசிரியர் மார்க்கஸ் ப்யூலெர் இதுகுறித்த ஆராய்ச்சியைத் தொடங்கியுள்ளார். இவர் மசாசூசெட்ஸ் தொழில்நுட்ப மையத்தைச் சேர்ந்த விஞ்ஞானி. சிலந்தி தன் எச்சிலை காற்றின் மூலம் நூலாக்கி பிரமாண்ட வலையை உருவாக்குவது குறித்து ஆராய்ச்சியில் இவர் ஈடுபட்டிருந்தார்.  காற்றில் 70 சதவீத ஈரப்பதம் இருக்கும்போது சிலந்தி மிக எளிதாக வலை பின்னுகிறது என்பதை தற்போது கண்டுபிடித்துள்ளனர். இச்சூழலில் 300 டிகிரி கோணத்தில் வலையை சிலந்தி எச்சிலை இழைத்து முறுக்கி பின்னுகிறது. இதற்கு காரணம், வலையை மிகவும் வலிமையாக்குவதுதான்.  இதனால் வலை மிக மெல்லிய அதிர்வையும் மையத்திலுள்ள சிலந்திக்கு எளிதாக கடத்துகிறது. இதனால் வலையில் சிக்கும் எறும்புகள் ஓடவும் முடியாது. ஒளியவும் முடியாது. வலைய