இடுகைகள்

ரோஹிங்கயா லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

முக்கியமான தெற்காசிய ஆவணப்படங்கள்!

படம்
  ஷோகேர்ள்ஸ் ஆஃப் பாகிஸ்தான் 2020 கோஸ்ட் ஆப் ஆப்கானிஸ்தான்  லாங் பீரியட் ஆஃப் பர்சிகியூசன் கோஸ்ட் ஆப் ஆப்கானிஸ்தான்  2021 ஆப்கானிஸ்தான் ஆப்கானிஸ்தானில், தாலிபன் எப்படி வென்றார்கள், நேட்டோ படை அங்கு தோற்றுப்போனதையும், பெண்கள் பாதிக்கப்பட்டதையும் ஆவணப்படம் விளக்குகிறது.  லாங் பீரியட் ஆஃப் பர்சிகியூசன்  2019 வங்கதேசம் ப்ரோசூன் ரஹ்மான் உருவாக்கியுள்ள ஆவணப்படம் இது. புலம் பெயர்ந்த ரோஹிங்கயா முஸ்லீம்களின் வாழ்க்கையைப் பற்றியது. மியான்மரிலிருந்து விரட்டப்பட்டு இனத்தூய்மை நாடாக அது மாறியதைப் பற்றி பேசுகிறது.  ஷோகேர்ள்ஸ் ஆஃப் பாகிஸ்தான் 2020  பாகிஸ்தான்  சயீத்கான் உருவாக்கியுள்ள ஆவணப்படம் இது. முஜ்ரா எனும் கலாசாரத்தை முக்கியத்துவப்படுத்தியுள்ளது. மூன்று நடனப் பெண்மணிகள் வாழ்க்கையைப் பேசுகிறது. இவர்கள் மதம் சார்ந்த பல்வேறு மிரட்டல்களை சந்தித்தாலும் நடனத்தை தொடர்ந்து வருவதை காட்சிபடுத்துகிறது. 

அகதிகளை மரியாதையாக நடத்த கற்பது அவசியம் - சேட்டன் பகத்

படம்
மியான்மரில் புத்த பெரும்பான்மையினர் சிறுபான்மையினரான ரோஹிங்கயா முஸ்லீம்களை கொடுமைப்படுத்தி இனப்படுகொலை முயற்சிகளை அரங்கேற்றினர். இதன் விளைவாக, வாழ வழியற்ற அம்மக்கள் வங்காளதேசம் வழியாக இந்தியாவிற்குள் நுழைந்தனர். அவர்களை எல்லைப் பாதுகாப்பு படையினர் மிளகு ஸ்ப்ரே அடித்து விரட்டினர். உண்மையில் இந்த விவகாரத்தில் இந்தியா இப்படி நடந்துகொள்ளும் என்று நான் நினைத்தே பார்க்கவில்லை. வளரும் பொருளாதாரம் கொண்ட நாடு இந்தியா. முக்கியமான விவகாரத்தில் இப்படி முதிர்ச்சியற்று நடந்துகொண்டது என்னை வேதனைப்படுத்தியது. உலகம் முழுக்க போர்களால் மக்கள் இடம்பெயர்ந்து வருகின்றனர். சில நாடுகள் அகதி மக்களை ஏற்கின்றனர். உதாரணம்  -கனடா, ஜெர்மனி, பிரான்ஸ் போன்ற நாடுகள். சிலர் தீவிரமாக அவர்களை ஏற்க மறுக்கின்றனர். உதாரணம் - ஆஸ்திரேலியா, அமெரிக்கா போன்ற நாடுகள்.  அவரவருக்கு ஏற்பதா, இல்லையா என்பதில் கருத்துகள் உண்டு. இந்தியா ரோஹிங்கயா முஸ்லீம்களை தங்க வைப்பதில் பெரிய பிரச்னை வந்துவிடாது. ஏற்கனவே இங்கு 40 ஆயிரம் பேர் உள்ளனர் என்பது அரசுக்கு பிரச்னையாக இருக்காது. பாதுகாப்பு தொடர்பான பிரச்னை என்றாலும் அரசு, அம்மக