இடுகைகள்

பள்ளிகள் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தமிழகத்தில் பரவும் அகிரா மியாவகி வகை காடுகள்!

படம்
நகரில் வளர்க்கலாம் காட்டை! நகரில் லூயிஸ் பிலிப் சட்டை போட்டு ஆபீஸ் செல்லும் அனைவரின் மனதிலும் காட்டைப் பற்றிய எண்ணம் ரகசியமாக இருக்கும். காரணம் நாம் அங்கிருந்து வந்தவர்கள்தானே? இதன்காரணமாகவே நாம் பழுப்பை விட பச்சையை விரும்புகிறோம். வயல்வெளியைப் பார்த்தால் ஒருகணம் திடுக்கிட்டு நின்றுவிடுகிறோம். ஆனால் நகரத்தில் எங்கே பசுமையைக் காண? அதற்கும் பதில் வைத்திருக்கிறார்கள் துவக்கம் குழுவினர். ஜப்பானைச்  சேர்ந்த தாவரவியலாளர் அகிரா மியாவகியின் டெக்னிக்தான் நகரங்களில் கிடைக்கும் இடங்களில் மரக்கன்றுகளை உருவாக்குவது. இதனை கையில் எடுத்து குரோம்பேட்டையிலுள்ள ஜெயின் பள்ளியில் மினி காட்டை உருவாக்கிக் காட்டினர். சென்னையில் தண்ணீர் கிடையாது. இந்த லட்சணத்தில் எப்படி மரக்கன்றுகளுக்கு தண்ணீர் ஊற்றுவது? என்ற கேள்விக்கும் இவர்களிடம் பதில் உள்ளது. நம்மோடு பேசிக்கொண்டே அவருக்கு வந்த 40 போன்கால்களையும் பேசிச் சமாளிக்கிறார். அடுத்த கோடைக்குள் மரங்களை உருவாக்கும் வேகத்தில் மக்கள் உள்ளனர். இம்முறையில் நாங்கள் அனைத்து வகை மரக்கன்றுகளையும் ஒன்றாகவே விதைக்கிறோம். இது அசப்பில் காடுபோன்ற டெக்னிக்தான். இடம்தான்

பத்து ஆண்டுகளில் நிறைவான கல்வி - இந்திய அரசின் திட்டம் வெல்லுமா?

படம்
இந்தியா, 2030 ஆம் ஆண்டில் நூறு சதவீத கல்வி என்ற லட்சியத்தை நோக்கி அடியெடுத்து வைத்து வருகிறது.  ஐ.நா சபை, மற்றும் யுனெஸ்கோ ஆகியோரின் கொள்கைகளை பின்பற்றும் முடிவை அரசு எடுத்துள்ளது. அரசு பல்வேறு முயற்சிகள் எடுத்தும் 6 - 17 வயதிலுள்ள மாணவர்களில் ஆறில் ஒருவர் கல்வி பயிலும் வாய்ப்பு இல்லாமல் இருக்கிறார்  என்று ஐ.நா அறிக்கை கூறுகிறது. இந்தியாவைப் பொறுத்தவரை 2030 ஆம் ஆண்டுக்குள் குழந்தைகள் தொடக்க கல்வியை நூறு சதவீதம் பேர் நிறைவு செய்திருப்பார்கள் என்றும், மேல்நிலைக்கல்வியை 84 சதவீதம் பேர் பெற்றிருப்பார்கள் என்றும் ஆய்வுகள் கூறுகின்றன. 2008 முதல் 2012 வரை இந்தியாவில் மாணவிகளின் சேர்க்கை அதிகமாகியுள்ளது டைம்ஸ் ஆப் இந்தியாவின் ஆய்வில் தெரியவந்துள்ளது. அதேசமயம் மேல்நிலைக்கல்வியில் இடைநிற்றல் அளவு 40 சதவீதமாக உள்ளது அபாயகரமானது. 2030 ஆம் ஆண்டில் 20 சதவீத இளைஞர்களும் , 30 சதவீத வயது வந்தோர்களும் கல்வி அறிவின்றி இருப்பார்கள். இந்தியாவில் கல்வி கற்பதில் பொருளாதாரம் முக்கியப் பங்கு வகிக்கிறது. கல்வி கற்பதை கைவிட்டவர்களுக்கும் அதிக படிப்புகளைப் படிப்பவர்களுக்கும் உள்ள இடைவெளி வளர்ந்துகொண