இடுகைகள்

ஸ்டஃப் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

வரைந்து பழக சூப்பர் ஆப்ஸ்!

நீங்களும் ஆர்ட்டிஸ்ட்தான்! வரைந்து பழகுவதற்கான ஆப்ஸ்கள் இதோ. இதனை கணினியில் மட்டுமல்ல, நீங்கள் வைத்திருக்கும் போன், அல்லது டேப்லட்டில் கூட வரைந்து ஜமாய்க்கலாம். டங்கா கலைஞரான முருகன் வாயால் பாராட்டும் பெறலாம். லினியா கோ(Linea go) மினிமலிச வடிவில் ஓவியம் வரைய உதவும் ஆப் இது. ஆண்ட்ராய்டு, ஐஓஎஸ் என இரண்டிலும் பயன்படுத்தலாம், போட்டோஷாப் போலவே லேயர், பென் விட்த் என அனைத்து வசதிகளும் உண்டு. மெடிபாங் பெயின்ட் டங்கா கலைஞர் முருகன் போன்றோர் பயன்படுத்தி மகிழ்வதற்கான ஆப் இது. ஏராளமான புகைப்படங்களை நீங்களே ட்ரேஸ் செய்து வரைந்து இன்ஸ்பையர் ஆகலாம். பிரமாதமான ஆப். ஆட்டோடெஸ்க் ஸ்கெட்ச் புக் மினிமலிச இடைமுகம் சற்றே மிரட்சி தரலாம், பெயின்ட் டூல்ஸ் உள்ளிட்ட அனைத்து கருவிகளும் விரல்களால் தொட்டால் வரும். எடுத்து வரைந்து பிரமாதப்படுத்துங்கள். தயாசுய் ஸ்கெட்சஸ் வரையும் படங்களில் சிறிது Noise தோன்றும்படியான ஸ்டைலில் நீங்கள் வரையலாம். அதுதான் இப்படங்களின் தனித்துவமும் கூட. அஃபினிட்டி டிசைனர் நீங்கள் இல்லஸ்டிரேட்டரா, வேக்குவம் பேடில் புகுந்து விளையாடுவீர்களா, அப்போது அஃபினிட்டி டிசைனர

விஆர் விளையாட்டுகள் - மே 2019

எதிர்பாருங்கள் விஆர் விளையாட்டுகள் மார்வெல் அயன்மேன் விஆர் பேட்மேன் ஆர்காம் சிட்டி விஆர் விளையாட்டுகளை விளையாடி இருப்பீர்கள். இது மார்வெல்லின் முறை அயன்மேனுக்கான விஆர் விளையாட்டு. அயன்மேனின் கண்களுக்கு தெரியும் மெனு இனி உங்கள் கண்களுக்கும் தெரியும். ஆப்சன்களை அழுத்தி பின்னி எடுங்கள். தேச துரோகிகளை போட்டுத்தள்ளி சாந்தி அடையுங்கள் நோ மென்ஸ் ஸ்கை விண்வெளியில் விளையாடும் விளையாட்டு. விளையாட்டின் களமே சவாலானது என்பதால் விளையாடிப் பார்த்தால் மற்ற விஷயங்கள் உங்களுக்கே புரியும். ப்ளட் அண்ட் ட்ரூத் கை ரிச்சியின் படத்தை தழுவிய விளையாட்டு. கன்ட்ரோலர் மூலம் உங்களுக்கு இரண்டு பிஸ்டல்களை கொடுத்து விடுவார்கள். அதைவைத்து வல்லரசு விஜயகாந்தாக அடித்து விளையாடினால் கேம் ருசிக்கும் மே 29 ரிலீஸ். நன்றி: ஸ்டஃப் இதழ் உதவி: பாபு பெ.அகரம்