வரைந்து பழக சூப்பர் ஆப்ஸ்!
நீங்களும் ஆர்ட்டிஸ்ட்தான்!
வரைந்து பழகுவதற்கான ஆப்ஸ்கள் இதோ. இதனை கணினியில் மட்டுமல்ல, நீங்கள் வைத்திருக்கும் போன், அல்லது டேப்லட்டில் கூட வரைந்து ஜமாய்க்கலாம். டங்கா கலைஞரான முருகன் வாயால் பாராட்டும் பெறலாம்.
லினியா கோ(Linea go)
மினிமலிச வடிவில் ஓவியம் வரைய உதவும் ஆப் இது. ஆண்ட்ராய்டு, ஐஓஎஸ் என இரண்டிலும் பயன்படுத்தலாம், போட்டோஷாப் போலவே லேயர், பென் விட்த் என அனைத்து வசதிகளும் உண்டு.
மெடிபாங் பெயின்ட்
டங்கா கலைஞர் முருகன் போன்றோர் பயன்படுத்தி மகிழ்வதற்கான ஆப் இது. ஏராளமான புகைப்படங்களை நீங்களே ட்ரேஸ் செய்து வரைந்து இன்ஸ்பையர் ஆகலாம். பிரமாதமான ஆப்.
ஆட்டோடெஸ்க் ஸ்கெட்ச் புக்
மினிமலிச இடைமுகம் சற்றே மிரட்சி தரலாம், பெயின்ட் டூல்ஸ் உள்ளிட்ட அனைத்து கருவிகளும் விரல்களால் தொட்டால் வரும். எடுத்து வரைந்து பிரமாதப்படுத்துங்கள்.
தயாசுய் ஸ்கெட்சஸ்
வரையும் படங்களில் சிறிது Noise தோன்றும்படியான ஸ்டைலில் நீங்கள் வரையலாம். அதுதான் இப்படங்களின் தனித்துவமும் கூட.
அஃபினிட்டி டிசைனர்
நீங்கள் இல்லஸ்டிரேட்டரா, வேக்குவம் பேடில் புகுந்து விளையாடுவீர்களா, அப்போது அஃபினிட்டி டிசைனரிலும் பின்னி எடுக்கலாம். எனவே கலங்காமல் ஆப்பை இன்ஸ்டால் செய்தி கலைவானில் பறக்கலாம்.
நன்றி: ஸ்டஃப் இதழ்