கொலை செய்ய எலி சொன்னது தவறா?
அசுரகுலம்
சுட்டோமு மியசாகி
1988 ஆம் ஆண்டு வாக்கில் ஜப்பான் மக்களை பயமுறுத்தி சைக்கோ கொலைகாரரின் பெயர் சுட்டோமு மியசாகி. அங்குள்ள சிறுவர், சிறுமிகளை மட்டும் கடத்தி சித்திரவதை செய்து கொன்று நீட்டாக பேக்கேஜ் செய்து அவர்களுக்கு வீட்டுக்கு அனுப்பி பெற்றோரின் மனநிலையை உடைப்பது சுட்டோமுவுக்கு ரொம்ப பிடிக்கும்.
சுட்டோமுவின் தாத்தா இறந்துபோன மூன்று மாதங்களுக்கு பிறகு வேட்டையைத் தொடங்கினார். அன்று ஆக.22, 1988 ஆம் ஆண்டு. மாரி கொன்னோ என்ற நாலு வயது சிறுமி வீட்டின் வெளியே தன் தோழியுடன் விளையாடிக் கொண்டிருந்தார்.
அவளைப் பார்க்க பார்க்க சுட்டோமுவின் மனதில் இருள் சாத்தானின் நிழல் படிந்தது. உடனே பாய்ந்தவர் அச்சிறுமியை தூக்கிக்கொண்டு மரங்கள் நிறைந்த காட்டுக்கு கொண்டு சென்று கழுத்தை திருகி ஆசையாக கொன்றார்.
இரண்டு மாதங்களுக்குப் பிறகு மசாமி யோசிஸாவா என்ற அடுத்த இலக்கை குறிவைத்தார் இருபத்தாறு வயதேயான சுட்டோமு. அதிகமில்லை ஏழுவயதான சிறுமி. தூக்கிச்சென்று கொன்னோவைக் கொன்ற அதே இடத்தில் வைத்து கொன்றார். அடுத்து டிச. 12 அன்று நான்கு வயது சிறுமி எரிகா நன்பாவை கடத்தினார். பார்க்கிங் செய்யும் இடத்தில் மாட்டியதால் அவளது உயிரும் பறிபோனது. கொலை செய்ய சரியான இடம் கிடைக்காத தால் காரில் கொன்று உடலை தூக்கி எறிந்தார் சுட்டோமு.
1989 ஆம் ஆண்டு ஜூன் 6 அன்று தன் கடைசி கொலையாக அயகோ நோமோடோ என்ற ஐந்து வயது சிறுமியை ரசித்துக் கொன்றார்.
2
கொலைக்கும் ஒரு கணக்குண்டு அல்லவா? சுட்டோமுவின் மேட்டரிலும் இது கச்சிதமாக நடந்த து. ஜூலை 23 அன்று இரண்டு சகோதரிகளை காம்போவாக கொலை செய்ய முயற்சித்தார். அப்போது சகோதரிகளில் ஒருத்தி மட்டும் தப்பித்து கொண்டது சுட்டோமுவின் துரதிர்ஷ்டம். பெண்கள் சும்மா இருப்பார்களா? அப்பாவை கத்தி உதவிக்கு அழைத்தாள். துரத்திச்சென்ற தந்தை, சுட்டோமுவைப் பார்த்தால் அம்மணக்கட்டையாக காரில் உட்கார்ந்து ஆறு வயது சிறுமியின் யோனியை புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்தார். விரட்டியபோது நிர்வாணமாக ஓடிய சுட்டோமு கார் வேண்டுமே என சில மணிநேரம் கழித்து வந்தபோது மாட்டிக்கொண்டார்.
போலீஸ் இதுமட்டும்தானா வேறு ஏதாவது செய்தீர்களா? நான்கு தட்டு தட்ட சிறுமிகளை போட்டுத்தள்ளிய சைக்கோ கொலைகாரனைப் பிடித்துவிட்டோம் என போலீஸ் மலர்ச்சியானார்கள்.
நிர்வாணமாக ஓடியதை வைத்து அவரது குடும்பத்தை ச்சீ என்ன பெரிய ஹிஸ்டரி இருக்கப்போகிறது என நினைத்து விடாதீர்கள். சுட்டோமுவின் குடும்பம் பசையுள்ளதுதான். சமூகத்தின் மதிப்பான ஆட்களும் கூட. அவரது அப்பா, நாளிதழ் ஒன்றை நடத்தி வந்தார். தந்தையும் தாயும் த த்தம் தொழிலில் வெற்றிகரமாக இருந்தவர்கள்தான்.
என்ன சுட்டோமுவை வளர்த்தியதில் தடுமாறி விட்டார்கள். முதலில் பள்ளியில் நல்ல மார்க் எடுத்த சுட்டோமுவை நம்பிக்கையாகத்தான் பெற்றோர் நினைத்தனர். ஆனால் மெல்ல மதிப்பெண்கள் குறைந்து ரேஷன் அரிசி ரேட்டுக்கு வந்தபோது பேச ஏதுமில்லை. பல்கலைக்கழகத்திலும் இணைவதற்கான வாய்ப்பை இழந்துவிட்டார் சுட்டோமு.
புகைப்பட வல்லுநராக முயன்றவரை அவரது பெற்றோரும் ஊக்குவிக்கவில்லை. அவரது சகோதரிகளும் புறக்கணித்தனர். மனம் நொந்துபோனவருக்கு ஒரே துணை தாத்தா மட்டுமே. தாத்தா இறந்த சோகத்தில் அவர் தனக்கும் முழுமையாக இருக்கவேண்டுமென அவரது சாம்பலைத் தின்ற பேரன்பை யாரும் புரிந்துகொள்ளவில்லை.
3
1962 ஆம் ஆண்டு ஆக.12 அன்று பிறந்த சுட்டோமுவுக்கு மணிக்கட்டு எலும்பே கிடையாது. ஐந்து பவுண்டுகள் எடையிருந்தார். தாய்க்கு முன்கூட்டியே பிறந்த குழந்தை என்பதால் உயிரைக்காப்பாற்ற மிகவும் சிரம ப்பட வேண்டியிருந்த து.
திருப்ப முடியாத குறைபாடு அப்படியே நிலைத்துவிட கேலி, கிண்டல்களால் மனம் குன்றினார். வீட்டில் உள்ள சகோதரிகளே அவரை ஒதுக்க தனியனாக வளர்ந்தார். எந்த மகிழ்ச்சியுமில்லாத இளம் பருவ வாழ்க்கை பெரும் சுமைதானே?
கொலை வழக்குகளுக்கான தீர்ப்பின்போது அதற்கு சம்பந்தப்படாத ஆட்களை நோண்டினால்தானே நியூஸ்? ஊடகங்கள் சுட்டோமுவின் அப்பாவிடம் பேனாவும், மைக்குமாக சென்று ஹவ் டூ யூ ஃபீலிங் நவ் என கேள்வி கேட்க, சமூக அந்தஸ்து கொண்ட மனிதர் நொறுங்கிப்போனார்.
நாளிதழ் நடத்தி ஊருக்கு புத்தி சொன்ன நமக்கு இப்படியொரு பிள்ளையா? என வருந்தினார் சுட்டோமுவின் தந்தை. நல்லநேரம் கூட பார்க்காமல் பாலத்திலிருந்து நீரில் குதித்து தற்கொலை செய்து கொண்டு அவமானத்திலிருந்து தப்பித்தார். கொலைச்செய்தியை சுட்டோமுவுக்கு போலீஸ் தெரிவித்த து. ஆனால் அவர் எந்த உணர்வையும் முதலில் காட்டவில்லை. பின் மெல்ல தற்கொலை உறுதியானவுடன் புத்துணர்ச்சியானதாக போலீஸ் கூறியது.
4
இத்தனை கொலை செய்தவரை போலீஸ் விசாரிக்காமல் இருப்பார்களா? உளவியலாளர் விசாரித்தபோது, எலி மனிதன்தான் தன்னை கொலை செய்யச்சொல்லி காதில் கிசுகிசுத்தான் என்று ஒரே போடாக போட்டார். என்ன பாஸ் சொல்றீங்க என்றபோது, படமே வரைந்து காட்டிவிட்டார்.
சுட்டோமுவின் அறையை ஆராய்ந்தால் முழுக்க காம களஞ்சியமாக இருந்த து. அறையில் மொத்தம் 5,763 வீடியோ டேப்புகள் இருந்தன. அத்தனையும் குழந்தை பாலுறவு வீடியோக்கள். தான் கொலை செய்த சிறுமிகளையும் அதில் பதிவு செய்து வைத்திருந்தார். அக்காலகட்டத்தில் குழந்தை பாலுறவு வீடியோக்களை பார்க்க ஜப்பான் அனுமதி அளித்திருந்த து. இதுதவிர பிடிஎஸ்எம் எனும் சித்திரவதை பாலுறவு காட்சி, அனிமேஷன் படங்கள் என நிறைய வைத்திருந்தார்.
முதன்முதலாக கொலை செய்த கொன்னோவின் உடல்பாகங்களையும் சிலதை வைத்திருந்தார் சுட்டோமு. வரலாறு முக்கியமா இல்லையா? சிறுமியை கடத்தி கொல்வதோடு, கொன்ற சிறுமியின் பற்கள், எலும்புகள், எரித்த சாம்பல் ஆகியவற்றையும் பெற்றோருக்கு அனுப்பி ரவுசு செய்வது சுட்டோமுவுக்கு மிகவும் பிடிக்கும்.
பின் போன் செய்து இருபது நிமிடங்கள் பேசாமல் அவர்களின் தவிப்பை ரசிப்பது என சாதித்தவர் சுட்டோமு.
இதைக் காரணமாக போலீஸ் சொல்ல அனிமே ஆர்வலர்கள் கடும் கண்டனங்களைத் தெரிவித்தனர். ஏனெனில் அப்போது அனிமே, காமிக்ஸ் கலாசாரம் அங்கே முளைவிட்டு வளர்ந்திருந்த து.
2008 ஜூன் 18 அன்று சுட்டோமு கூட இரண்டு பேர் ஆகியோருக்கு செட்டாக மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது.
ஆக்கம்: பொன்னையன் சேகர்
நன்றி: ரேங்கர், விக்கிப்பீடியா