இடுகைகள்

எண்டமூரி வீரேந்திரநாத் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சொத்துக்காக சிறுமியின் உயிரைப் பறிக்க காஷ்மோரா பூதத்தை ஏவும் கும்பல்! துளசிதளம் - எண்டமூரி வீரேந்திரநாத்

படம்
  துளசிதளம்  எண்டமூரி வீரேந்திரநாத் தமிழில் கௌரி கிருபானந்தன் அல்லயன்ஸ்  துளசிதளம் நாவல் தலைப்பை அறிந்தவுடன் கோட்டயம் புஷ்பநாத் நாவல் போல இருக்குமோ என யாருமே நினைக்கலாம். ஆனால் உண்மையில் கதை அப்படி அமையவில்லை.  ஶ்ரீதர், சாரதா, துளசி, அனிதா, நாராயணன் ஆகிய பாத்திரங்கள் முக்கியமானவை. துளசி என்ற ஶ்ரீதர் - சாரதா தம்பதிக்கு பிறக்கும் மகளுக்கு ஶ்ரீதரின் நிறுவன முதலாளி சொத்துக்களை எழுதி வைக்கிறார். இந்த சொத்து துளசிக்கு பத்து வயது ஆனபிறகு  கிடைக்கும். அப்படி அவள் பத்து வயதுக்குள் இறந்துவிட்டால், சொத்து கிருஷ்ணா என்ற ஆசிரமத்திற்கு கிடைக்கும். சொத்துக்காக ஆசிரம தலைவர் செய்யும் அதீத செயல்பாடுகளும் அதற்கான எதிர்வினையாக ஶ்ரீதர், அவரின் நண்பர் நம்பூதிரி, வழக்குரைஞர் லட்சுமிபதி, மருத்துவர் பார்த்தசாரி, ஹிப்னாட்டிச பேராசிரியர் ஆகியோர் என்ற செய்கிறார்கள் என்பதுதான் இறுதிப்பகுதி.  நாவலில் எண்டமூரி வீரேந்திர நாத்தின் புத்திசாலித்தனத்தை எங்கு வியக்கிறோம் என்றால் அது நூலின் இறுதிப்பகுதியில்தான்.அதில் காஷ்மோரா பூதம் அதிருப்தியடைந்து துளசியை விட்டுவிட்டதா, அவளைக் கொல்லும் முயற்சியை ஹிப்னாட்டிச பேராசிரியர் தா

ஐந்து ஆண்டுகளில் ஐம்பது லட்சம் சம்பாதித்தால் ஹாரிகா பரிசு! - பணம் - எண்டமூரி வீரேந்திரநாத்

படம்
  பணம்  எண்டமூரி வீரேந்திரநாத் தமிழில் கௌரி கிருபானந்தன் அல்லயன்ஸ் வெளியீடு நூலின் அட்டையைப் பார்த்து அதனை பற்றி முடிவெடுக்க கூடாது என்பதற்கு இந்த நூல் சாலப் பொருத்தமானது. அட்டை கண்ணாடிக்கல் மாறி தெரிந்தாலும் கதை வைரம்தான். நாவலின் தொடக்க காட்சியை வாசித்துவிட்டாலே உங்களால் அதனை கீழே வைக்கமுடியாது. இத்தனைக்கும் இது தெலுங்கில் எழுதப்பட்டு தமிழில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. இந்த நாவல் ஒரு மொழிபெயர்ப்பு என்பதையே உங்களால் நினைவில் வைத்திருக்க முடியாது. அந்தளவு வேகம்.  நாவலின் முதல்காட்சியே காந்தி, மருந்துக்கடையை தேடுவதும். அவனது அவசரத்தை பயன்படுத்தி ஆட்டோக்காரர், மருந்துக்கடைக்காரர்  ஆகிய இருவரும் பணத்தை சுரண்ட நினைப்பதுதான். மருந்தை வாங்கிக்கொண்டு போயும் கூட அதற்கான பயன் இருக்காது. அவனது அம்மா இறந்துபோய்விடுவார். அப்போது காந்தி கேட்கும் கேள்வி, மனதை அறுக்க கூடியது. அவனைப் பார்க்கும் நர்ஸ் கூட சற்று கலங்கிப்போய்விடுவாள். எண்டமூரி வீரேந்திரநாத்தின் சிறப்பே எழுதும் எழுத்துகள் உங்களுக்கு அப்படியே மனக்கண்ணில் காட்சியாக ஓடுவதுதான். இதனால் நாவலை உணர்வுப்பூர்வமாக வாசிக்கத் தொடங்கிவிடுகிறோம்.  க

புதிய துப்பறியும் விவகாரத்தை விளையாட்டுத்தனமாக கண்டுபிடிக்கும் ஆத்ரேயா! - கடிதங்கள்

படம்
  சாய் சீனிவாஸ் ஆத்ரேயா  அன்புள்ள முருகானந்தம் அவர்களுக்கு, வணக்கம். நலமாக இருக்கிறீர்களா? கடந்த மாதம் எங்களுக்கு பாதி நாட்களிலேயே வீட்டிலேயே வேலை பார்ப்பதற்கான அனுமதியை வழங்கிவிட்டார்கள். அதற்காக சம்பளத்தை முழுக்க கொடுக்க முடியுமா? பாதிதான் கொடுத்தார்கள். இந்த மாதம் முழுக்க விடுமுறை என்று சொல்லிவிட்டார்கள்.  விஸ்வரூபம் எண்ட மூரி வீரேந்திரநாத்தின் நாவல் ஒன்றை படித்தேன்.  ராமகிருஷ்ணன் என்ற முன்னாள் ராணுவ வீரன் ஒருவனை காதலை காரணமாக காட்டி அணு ஆயுத ரகசியங்களை திருடுகிறது தாலிபன். இதைவைத்து சாரங்கபாணி என்ற விஞ்ஞானியை பயன்படுத்தி ஆயுதங்களை தயாரித்துத் தர சொல்லுகிறது. அவனையும் அவன் மனைவியை தந்திரமாக அவனே கொன்றான் என்று தடயங்களை உருவாக்கி மிரட்டுகிறது. இவற்றை ராமகிருஷ்ணன் எப்படி முறியடித்து இந்தியாவை காப்பாற்றுகிறான். தாலிபன் தீவிரவாதிகளை கொல்கிறான் என்பதுதான் கதை. 336 பக்க கதையில்  நாம் இந்தியா, இரான், ஆப்கானிஸ்தான், டெல்லி, பாகிஸ்தான் என பல்வேறு நாடுகளுக்கு பயணிக்கிறோம். தமிழ் மொழிபெயர்ப்பு கௌரி கிருபானந்தன்.  விறுவிறுப்பான தேசபக்தி நாவல். தொடக்கத்தில் வரும் காதல் உரையாடல்கள் நன்றாக இருக்கி

அட்டகாசமான ரகசிய உளவாளியின் கதை- ருத்ரநேத்ரா

படம்
ருத்ர நேத்ரா எண்டமூரி வீரேந்திரநாத் தமிழில் - கௌரி கிருபானந்தன் ருத்ர நேத்ரா, ஒரு மணிநேரத்தில் விறுவிறுவென படிக்கவேண்டிய நூல். கதை இளமையும் குறும்பும் கொண்ட சீக்ரெட் ஏஜெண்ட் நேத்ரா எதிர்கொள்ளும் வழக்கு பற்றியது. அந்த வழக்கை அவர் மேலதிகாரி சிறிய வழக்கு என்று கூறி அவரிடம் கொடுக்கிறார். ஆனால் அந்த வழக்கு விசாரணை பாகிஸ்தான், புளூட்டோனியம், விஷவாயு ஆராய்ச்சி என நினைத்து பார்க்க முடியாதபடி நீள்கிறது. இதற்கிடையில் சீக்ரெட் ஏஜெண்டுகளின் அலட்சியத்தால் நேத்ராவின் நண்பனும் தங்கையும் பலியாகிறார்கள். இதற்கு காரணமான பிளாக் ஈகிள், அவனது மகன் ஏஜெண்ட் க்யூ இருவரையும் நேத்ரா என்ன செய்தான், அவனை வெறித்தனமாக காதலிக்கும் தொழிலதிபர் பூஷணத்தின் மகள் அம்சரேகா, சந்தேகிக்கும் வளர்ப்பு மகள் சுவர்ணரேகா, இவர்களின் காதலை பொறாமையோடு பார்க்கும் பிரதிமா ஆகியோரின் காதல் பகுதிகளும் நூலில் உண்டு. தேசப்பற்று போதிக்கும் கதை. எளிதாக நம்மை வாசிக்க வைப்பதில் எண்டவீரி வென்றுவிடுகிறார். கதை விறுவிறுவென செல்கிறது. இதில் காமெடி அத்தியாயங்களை சக பெண் சீக்ரெட் ஏஜெண்ட் பிரதிமா மற்றும் அவரது பாட்டி பார்த்துக்கொள்கிற