இடுகைகள்

ஸ்மார்ட் விளக்கு கம்பம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

கண்காணிப்பை தகர்க்கும் போராட்டக்காரர்கள்! - சீனா எரிச்சல்

படம்
கண்காணிக்கும் விளக்கு கம்பம்! ஹாங்காங்கில் போராட்டக்கார ர்கள் செய்யும் குறிப்பிட்ட காரியம் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. நாம் சாதாரணமாக கவனமின்றி எரிச்சலில் என்ன செய்வோம்? ஜல்லிக்கற்களை எடுத்து சோடியம் வேபர் விளக்கில் விட்டெறிந்து அதனை உடைப்போம். இது ஒரு ஜாலியான பொழுதுபோக்கு. பின்னர் அப்படி அடித்த ஆட்களே அதனை தவறு என்று மாறுவது வழக்கம். அதேபோல அங்கு சீன அரசு அமைத்துள்ள மின்விளக்கு தூண்களை ஹாங்காங் குடிமகன்கள் அடித்து உடைத்து சாய்க்கின்றனர். அதனை புகைப்படமாக எடுத்து சமூக வலைத்தளத்தில் போடுகின்றனர். எதற்கு? காரணம், அது சீனாவின் கண்காணிப்பு கோபுரமாக உள்ளது. சீன அரசு அதனை போக்குவரத்தை கண்காணிக்கும் கம்பம் என்று கூறுகிறது. மின்விளக்கு கம்பம்தான், குப்பைகளைப் போடுபவர்களை கண்காணிக்கிறது. மேலும் தட்பவெப்பநிலை, 5ஜி இணைய இணைப்பு, ப்ளூடூத் உள்ளிட்ட வசதிகளைக் கொண்டு இயங்குகிறது. ஸ்மார்ட் சிட்டி வசதிகளில் இதுவும் ஒரு அங்கம். இதைத்தான் ஹாங்காங்க் புரட்சியாளர்கள் அடித்து உடைக்கின்றனர். அவர்களின் கூட்டம் அதற்கு அப்ளாஸ் எழுப்புகின்றனர். இதன் விலை 34.75 மில்லியன் டாலர்கள். அதாவது ஒரு க