இடுகைகள்

செய்திக் கட்டுரை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

கணிதம் சொல்லி உலகை வசப்படுத்திய ஆசிரியை!

படம்
கணித நுட்பங்களை கற்றுத்தரும் ஆசிரியை!  பீகாரைச் சேர்ந்த கணித ஆசிரியை ரூபி குமாரி, தன் புதுமையான கணித நுட்பங்களால் மாணவர்களை கவர்ந்து வருகிறார்.  2014ஆம் ஆண்டு பீகாரைச் சேர்ந்த கணித ஆசிரியை ரூபிகுமாரி மாணவர்களுக்குக் கற்பிக்க தொடங்கினார். புதுமையான நுட்ப வழிகளில் கணிதத்தைக் கற்றுத் தந்தவர், மாணவர்களை ஈர்க்கத் தொடங்கினார். ஒன்பதைப் பெருக்க விரல்களை எப்படி கால்குலேட்டராக பயன்படுத்துவது என்று இவர் கற்பிக்கும் வீடியோ இணைய உலகில் அதிகம் பகிரப்பட்டது. இதனால் பலருக்கும் அறிந்த முகமாக ரூபி குமாரி மாறினார். இவரின் கற்றல்முறை தொழிலதிபர் ஆனந்த் மகிந்திரா முதல் இந்தி நடிகர் ஷாருக்கான் வரை ஈர்க்க, பாராட்டுகளும் வாழ்த்துகளும் குவிந்தன. பீகாரின் பங்கா எனும் சிறுநகரில் பிறந்தவர் ரூபிகுமாரி. முதல் தலைமுறையாக கல்வி கற்க விரும்புபவர்களுக்கு எளிய முறையில் கணிதத்தை பயிற்றுவிக்க நினைத்தார். ஆனால் இந்த எண்ணம் அவ்வளவு எளிதில் நிறைவேறவில்லை. 250 மாணவர்களுக்கு தனது புதுமையான கற்றல் முறையில் கற்பித்தார்.  “நான் விளையாட்டு மூலம் பாடங்களை சொல்லிக்கொடுத்தது மாணவர்களின் பெற்றோர்களுக்குப் பிடிக்கவி

கல்வித்திறனுக்கு மரபணுக்கள் உதவுமா?

படம்
pixabay  மரபணுக்களை ஆராய்வதன் மூலம் மாணவர்களின் திறன்களை மதிப்பிட முடியாது என ஆய்வில் தெரிய வந்துள்ளது.  இங்கிலாந்தில் நடைபெற்ற மரபணு மற்றும் கல்வி தொடர்பான ஆய்வு நடைபெற்றது. இதில், பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் பங்கேற்றனர். இதில் செய்த ஆய்வுகளின்படி, மரபணுக்களுக்கும், அதனை அடிப்படையாக கொண்ட கல்வித்திறனுக்கும் எந்த தொடர்பும் இல்லை என தெரியவந்துள்ளது. இந்த ஆய்வுகள் பெற்றோர்களுக்கு கணிசமான செலவை ஏற்படுத்துகின்றன. ஆனால் அவர்களின் கல்வி சார்ந்த முன்னேற்றத்திற்கு உதவுகிறது பள்ளி நிர்வாகம் அவர்களை பேசி ஒப்புக்கொள்ளச் செய்கிறது. இத்தகவல்களை கல்வி சார்ந்த விஷயங்களுக்கு மட்டுமே பயன்படுத்துகிறார்கள் என்பதற்கு எந்த உறுதித்தன்மையும் கிடையாது. “மரபணுரீதியான தேர்வுகளில் குறைந்த புள்ளிகளைப் பெற்றவர்கள் பதினாறு வயதிலேயே சிறந்த மாணவர்களாக சாதித்து காட்டியவர்கள் உண்டு ” என்கிறார் பிரிஸ்டல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் டிம் மோரிஸ். மரபணுக்களில் கல்விக்கான எந்த மரபணு வளர்ச்சியை ஏற்படுத்துகின்றது என உறுதியாக ஆராய்ச்சியாளர்களால் கூற முடியவில்லை. ஆனால் இத்தகவல்களை கொண்டு கல்வி ம

நைஜீரியாவில் பெருகும் திடக்கழிவுகள்! - பெட் பாட்டில் அபாயம்!

படம்
giphy பிளாஸ்டிக் பயங்கரம்! உலகளவில் ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவின், லாகோஸில் பிளாஸ்டிக் கழிவுகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஆப்பிரிக்க நகரங்களில் ஒன்றான லாகோஸில், திடக்கழிவுகள் அதிகரித்து வருகின்றன. இதனை உலகளவில் ஒப்பிடும்போது, குறைவு (2016படி) என்றாலும் ஆப்பிரிக்க நகரங்களில் மோசமான கட்டமைப்பு காரணமாக கழிவுத் தேக்கத்தில் முன்னிலை பெறுகிறது. இரண்டு கோடிப் பேருக்கு மேல் மக்கள் தொகை கொண்டது லாகோஸ் நகரம். நைஜீரியாவில் பயன்படுத்தப்படும் 1,50,000 மெட்ரிக் டன்கள் பிளாஸ்டிக் பொருட்களில் பாதியளவு லாகோஸ் நகரில் பயன்படுத்தப்படுகின்றன. இதில் ஐந்தில் நான்கு சதவீதப் பொருட்கள் மறுசுழற்சி செய்யப்படுவதில்லை. இதனால் சிறியளவிலான மழைவெள்ளத்திற்கே, நகரம் முழுக்க தத்தளிக்க தொடங்கிவிடுகிறது. பயன்படுத்திவிட்டு வீசியெறியப்படும் பிளாஸ்டிக் பாட்டில்கள், சாக்கடைகளை அடைத்துக்கொள்வதே இதற்கு முக்கியக் காரணம். அங்குள்ள முன்னணி உணவுத்தயாரிப்பு, குளிர்பான நிறுவனங்களும் பிளாஸ்டிக்குகளின் எண்ணிக்கையைக் குறைப்பதற்கான முயற்சிகளை செய்து வருகின்றனர். இத்தனைக்கும் கடந்த ஆண்டு நைஜீரியா பயன்படுத்திய ப