இடுகைகள்

கார்முகில் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சூரியன், நிலவு பிரகாசம், ஐன்ஸ்டீனின் வேலை, திரள்மேகம் - அறிவியல் பேச்சு - மிஸ்டர் ரோனி

படம்
            அறிவியல் பேச்சு மிஸ்டர் ரோனி சார்பியல் கோட்பாட்டை ஐன்ஸ்டீன் கண்டுபிடித்தபோது, பல்கலைக்கழகத்தில் பணியாற்றிக்கொண்டிருந்தார் என்ற செய்தி உண்மையா? இல்லை. அப்போது அவர் பெர்ன் நகரில் உள்ள சுவிஸ் காப்புரிமை அலுவலகத்தில் கணக்காளராக பணியாற்றிக்கொண்டிருந்தார். 1905ஆம்ஆண்டு ஐன்ஸ்டீன் தனது வாழ்க்கையில் புகழ்பெற்ற மூன்று ஆய்வுக்கோட்பாடுகளை வெளியிட்டார். 1909ஆம் ஆண்டு, அவருக்கு ஜூரிச் பல்கலைக்கழகத்தில் வேலை கிடைத்தது. அந்த ஆண்டில்தான் E=mc ஸ்கொயர்ட் என புகழ்பெற்ற சமன்பாட்டை கல்வி தொடர்பான மாநாட்டில் சமர்ப்பித்தார். அப்போது அவரின் வயது முப்பது. அன்றைய காலகட்ட வழக்கப்படி, முப்பது வயதில் பெரும்பாலான அறிவியலாளர்களின் அறிவியல் வாழ்க்கை ஏறத்தாழ முடிவுக்கு வந்துவிடும் காலம். ஆனால், அந்த வயதில் இருந்துதான் ஐன்ஸ்டீனின் அறிவியல் பயணம் தொடங்கியது. க்ளவுட் நைன் என்றால் என்ன அர்த்தம்? நேரடியான அர்த்தம் என்பது நான் மகிழ்ச்சியாக திருப்தியாக இருக்கிறேன் என்று கூறலாம்.அறிவியல் அடிப்படையில் ஆழமாக சென்றால், மேகத்தின் வகைகளில் க்ளவுட் நைனும் ஒன்று. மேகத்தில் மொத்தம் 52 வகைகள் உண...