இடுகைகள்

சிக்மண்ட் ஃப்ராய்ட் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஆசைகளை மனதில் மறைத்து வைத்தால் ஏற்படும் ஆபத்தான நிலைமை!

படம்
  உளவியலில் தன்னுணர்வற்ற நிலை என்பது மிகவும் முக்கியமானது. இந்த நிலை என்பது ஒருவரின் வாழ்பனுவத்தைக் கடந்த இயல்புடையது. கட்டுப்பாட்டில் இல்லாத ஒன்று. தன்னுணர்வற்ற நிலையில் நினைவுகள், உணர்ச்சிகள், கருத்துகள் சேகரமாகின்றன. இதனால்தான் இந்த கருத்து மீது ஆஸ்திரிய நாட்டைச் சேர்ந்த உளவியலாளர் சிக்மண்ட் உளவியலாளர் ஆர்வம் கொண்டு ஆராய்ச்சியில் ஈடுபட்டார்.  அன்றைய காலத்தில் தன்னுணர்வற்ற நிலை பற்றிய ஆராய்ச்சி, வேகமாக நடைபெறவில்லை. இந்த காலத்தில் ஃபிராய்ட் செய்த ஆராய்ச்சி அவருக்கு பெரும் புகழைப் பெற்றுக் கொடுத்தது. அவர் ஒருவரின் சிந்தனை, அனுபவம் ஆகியவை தன்னுணர்வு, தன்னுணர்வற்ற நிலை ஆகியவற்றில் ஏற்படுத்தும் விளைவுகளைப் பற்றி விரிவாக விளக்கினார்.  சார்கட்டிடம் பணியாற்றும்போது, ஹிஸ்டீரியா நோயாளிகளுக்கு ஹிப்னாசிஸ் முறையில் சிகிச்சை அளிக்கப்படுவை ஃபிராய்ட் கவனித்தார். நரம்பு மண்டலத்தில் ஏற்படும் பல்வேறு முரண்பாடுகளால் ஹிஸ்டீரியா குறைபாடு ஏற்படுகிறது என சார்கட் கருதினார். பிறகு வியன்னா திரும்பிய சிக்மண்ட் ஃபிராய்ட், ஹிஸ்டீரியாவுக்கான சரியான சிகிச்சை முறையைக் கண்டறிய முயன்றார். அப்போது அங்கு புகழ்பெற்றிருந

சிக்மண்ட் ஃப்ராய்டின் மனப்பகுப்பாய்வு கொள்கைகள் மங்கத்தொடங்கிய காலகட்டம்!

படம்
  காலக்கோடு 1895 சிக்மண்ட் ஃபிராய்ட், ஜோசப் ப்ரூயர் ஆகியோர் இணைந்து ஸ்டடிஸ் ஆன் ஹிஸ்டீரியா என ஆய்வறிக்கையை வெளியிட்டனர்.  1900 சிக்மண்ட, இன்டர்பிரிடேஷன் ஆஃப் ட்ரீம்ஸ் என்ற நூலில் சைக்கோ அனாலிசிஸ் என்ற கருத்தை அறிமுகப்படுத்தினார்.  1921 கார்ல் ஜங்க், தனது சைக்காலஜிகல் டைப்ஸ் என்ற நூலில் இன்ட்ரோவர்ட் எக்ஸ்ட்ரோவர்ட் என்ற கருத்துகளை வெளியிட்டார்.  1927 ஆல்ஃபிரட் அட்லர் என்பவரே தனிநபர் உளவியலுக்கான அடித்தளமிட்டவர். இவர் தி பிராக்டிஸ் அண்ட் தியரி ஆஃப் இண்டிவிஜூவல் சைக்காலஜி என்ற நூலை எழுதினார்.  1936 தி ஈகோ அண்ட் தி மெக்கானிச் ஆஃப் டிபென்ஸ் என்ற நூலை அன்னா ஃபிராய்ட் எழுதினார். 1937 பதினான்காவது சைக்கோ அனாலடிகல் மாநாட்டில் ஜாக்குயிஸ் லாகன், தி மிரர் ஸ்டேஜ் என்ற அறிக்கையை வெளியிட்டார்.  1941 சிக்மண்டின் கருத்துகளில் கரன் கார்னி வேறுபாடு கொண்டு அமெரிக்கன் இன்ஸ்டிடியூட் ஃபார் சைக்கோஅனாலிசிஸ்  என்ற அமைப்பைத் தொடங்கினார்.  1941 எரிக் ஃப்ரோம், தி ஃபியர் ஆஃப் ஃப்ரீடம் என்ற சமூக அரசியல் உளவியல் நூலை எழுதினார்.  இருபதாம் நூற்றாண்டில் குணநலன் சார்ந்த ஆராய்ச்சிகளை அமெரிக்க உளவியலாளர்கள் தீவிரமாக செய்யத்