இடுகைகள்

கேள்வி பதில்கள் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

புயல்களை துரத்திச் செல்வதன் பயன்?

படம்
        அறிவியல் கேள்வி பதில்கள் மிஸ்டர் ரோனி ஹபூப் என்றால் என்ன? மணல், தூசி கலந்த புயல் என்று ஹபூப்பைக் குறிக்கலாம். இதன் வேர்ச்சொல் அரபி மொழியில் இருந்து வந்தது. ஆப்பிரிக்காவின் சகாரா, அமெரிக்காவின் தென்மேற்கு பகுதியிலுள்ள பாலைவனங்கள், ஆஸ்திரேலியா, ஆசியா ஆகியவற்றில் தீவிரமான புயல் வீசுவதைக் காணலாம். விண்ட் ஷியர் என்றால் என்ன? ஷியர் என்றால் காற்று மாறுபாடு என்று கொள்ளலாம். குறுகிய தொலைவில் காற்று வேகமாக சட்டென திசையில் மாறுபட்டு வீசும்.இடியுன் கூடிய மழையில் காற்று திடீரென திசை மாறி வீசுவதைக் காணலாம். அதேநேரம், விமானம் இச்சூழ்நிலையில் பயணிக்க நேர்ந்தால் ஆபத்து நேருவதற்கு வாய்ப்பு அதிகம். இப்படியான சூழலை முன்னரே உணர்ந்து விமானிகளை எச்சரிக்க, விமானநிலையங்களில் ஏற்பாடுகளை செய்து வைத்திருந்த காலமெல்லாம் உண்டு. மைக்ரோ கிளைமேட் என்றால் என்ன? பெரிய நிலப்பரப்பில் உள்ள சிறிய பகுதியில் மட்டும் தட்பவெப்பநிலை, வீசும் காற்று, கருமேகங்கள் சூழ்வது என சூழல் மாறுவதை மைக்ரோகிளைமேட் என்று ஆங்கிலத்தில் அழைக்கிறார்கள்.  கடற்கரைப்பகுதியில் இப்படியான சூழல் மாற்றங்கள் ஏற்படுவது வாடிக்க...

புத்தர் இறந்துவிட்டார். அவர் நமக்கு எப்படி உதவுவார்?

  பௌத்தம் - கேள்வி பதில்கள் புத்தர் இறந்துவிட்டார். அவர் எப்படி நமக்கு உதவ முடியும்? பாரடே, லியனார்டோ டாவின்சி, லூயி பாஸ்டர் ஆகியோர் இன்று உயிருடன் இல்லை. ஆனால், அவர்கள் கண்டுபிடித்த விஷயங்கள் நமக்கு உதவிக்கொண்டுதானே இருக்கின்றன. அவர்களின் உழைப்பும் ஆராய்ச்சியும் பல லட்சம் பேர்களுக்கு ஊக்கமளித்து வருகிறது. அது மாறவில்லைதானே? புத்தர் இறந்து பல நூறு ஆண்டுகள் ஆனாலும் கூட அவரின் சொற்கள் இன்றைக்கும் நமது வாழ்க்கையை செழிப்பாக்க வழிகாட்ட உதவிக்கொண்டுதான் உள்ளன. புத்தருக்கு மட்டுமே இத்தகைய பெருமை உரியதாகும்.  புத்தர் கடவுளா? இல்லை. அவர் தன்னை கடவுள் என்று எங்கேயும் கூறிக்கொண்டதில்லை. அவர் இறைவனின் பிள்ளை அல்ல. அவரின் தூதரும் அல்ல. அவர் தன்னை நேர்த்தி செய்துகொள்ள முயன்ற மனிதர். நாம் அவரைப் பின்பற்றி ஒழுங்கு செய்துகொள்கிறோம்.  அவர் கடவுள் அல்லாதபோது அவரை மக்கள் வழிபடுவது எதற்காக? உங்கள் ஆசிரியர் வகுப்பறைக்குள் பாடமெடுக்க வரும்போது எழுந்து நின்று மரியாதை அளிக்கிறீர்கள். தேசியகீதம் பாடும்போது, அசையாமல் நின்று அதற்கு மரியாதை தெரிவிக்கிறீர்கள். இதைப்போன்றதுதான் புத்தரை வழிபாடு செய்வது...

பௌத்தம் வெறும் தத்துவம்தானா? - கேள்வி பதில்கள்

படம்
  பௌத்தம் என்றால் என்ன? பௌத்தம் என்றால் விழித்தெழுவது என்று பொருள். பௌத்த மதத்தின் அடிப்படை தத்துவமே, மனிதர்களை விழித்தெழச் செய்து விழிப்புணர்வுடன் இருக்கச் செய்வதுதான். தனது 36 வயதில் விழிப்புணர்வு பெற்ற சித்தார்த்த கௌதமர், புத்தர் என அழைக்கப்படுகிறார். உலகம் முழுக்க 300 மில்லியன் மக்கள் பின்பற்றும் மதமான பௌத்தம், உருவாகி 2500 ஆண்டுகளுக்கு மேலாகிறது. ஆசியாவில் தோன்றினாலும் இப்போது அமெரிக்கா, ஐரோப்பாவில் செல்வாக்கு பெற்றுவருகிறது.  பௌத்தம் என்பது வெறும் தத்துவம்தானா? தத்துவம் என்பதற்கு அறிவின் மீதான அன்பு என்று ஆங்கிலச் சொற்களை பிரித்தால் பொருள் வரும். இதுவே பௌத்த மதத்தை சிறப்பாக சுருக்கமாக விளக்குகிறது. அறிவுசார்ந்த புரிதலை ஆழமாக்கி விரிவாக்கி அனைத்து உயிரினங்களுக்கும் நண்பனாக இருப்பதை பௌத்தம் வலியுறுத்துகிறது. அன்பையும் இரக்கத்தையும் அடிப்படையாக கொண்ட பௌத்தம், வெறும் தத்துவமல்ல. அது மானுடத்தின் உயர்ந்த தத்துவம்.  புத்தர் என்பவர் யார்? கி மு 563. இந்தியாவின் வடக்குப்பகுதியில் அரச குடும்ப வாரிசு பிறந்தது. அந்த குழந்தையின் பெயர்தான் சித்தார்த்தன். உலகின் சோகங்கள் தாக்காமல்...