இடுகைகள்

நிலவொளிரும் மலைகள் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

நிலவொளிரும் மலைகள் - முத்தாரம் கடைசிபக்க நேர்காணல்கள் - மின்னூல் வெளியீடு

படம்
  முத்தாரம் இதழ் தொடக்கத்தில் பொது அறிவுக் களஞ்சியமாக மாற்றப்படாதபோது, கிளுகிளுப்பான தொடர்களைக் கொண்டு சற்று ஜனரஞ்சமாக இருந்தது. வயதான அதன் வாசகர்கள அதில் நிறைய சரித்திரக் கதைகளைப் படித்திருப்பார்கள். எனது பணிக்காலத்த்தில் பொது அறிவுக் களஞ்சியம் என்ற வகையில் அதன் கேப்ஷனுக்கு ஏற்ப ஏதேனும் மாற்றங்களை செய்யவேண்டும் என முயன்றேன்  தடைகள் இருந்தாலும் விடாப்பிடியாக நின்று பக்க எண்கள் வடிவமைப்பு, தொடருக்கான லோகோ ஆகியவற்றை தனியாக வரைந்து வாங்கி பயன்படுத்தினோம் இந்தியா டுடேவின் சில நேர்காணல்களை படித்தேன். அதில் கடைசிபக்க நேர்காணல் நன்றாக இருக்கும். குறைந்த கேள்விகள், வடிவமைப்பு நுட்பமாக இருக்கும். இன்று வரைக்கும் அந்த இதழில் அப்பகுதி தடைபடாமல் வருகிறது. பெரும்பாலும் சினிமா பிரபலங்கள் வருவார்கள். அந்த ஐடியாவை உருவி, வடிவத்தை மாற்றி முத்தாரத்தில் பயன்படுத்தியதுதான் கடைசிபக்க நேர்காணல், இதை முத்தாரம் மினி என்று பெயர்வைத்து செய்தோம்.  அப்போது குங்குமம் முதன்மை ஆசிரியர் கே.என். சிவராமன் புதிதாக வந்திருந்தார். பத்திரிகையாளர் தி.முருகன் வேறு இதழுக்கு சென்றிருந்தார். திரு.கே.என்.சிவராமன் அவர்கள் குங்கும

நிலவொளிரும் மலைகள் - புதிய மின்னூலின் அட்டைப்படம் வெளியீடு

படம்