இடுகைகள்

புத்தகம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

நாட்டை துண்டாடிய காந்தி, ஜின்னாவின் முரண்பட்ட கருத்துகள்! - புத்தகம் புதுசு

படம்
  புத்தகம் புதுசு  ரைட்டர் - ரெபல், சோல்ஜர், லவ்வர் - தி மெனி லிவ்ஸ் ஆஃப் அக்யேயா  அக்ஷயா முகுல்  வின்டேஜ் புக்ஸ் 2017ஆம் ஆண்டு அக்ஷய முகுல் இந்து பிரஸ் அண்ட் மேக்கிங் ஆஃப் இந்து இந்தியா என்ற நூலை எழுதினார். இதில் மதம், அரசியல், தேசியம் என நிறைய விஷயங்களைப் பேசியிருக்கிறார். இந்த நூலை ஜாலியாக படிக்கலாம் என்றும் சொல்ல முடியாது. கல்விக்கானது என்றும் கூறமுடியாது.  இப்போது எழுதியுள்ள இந்த நூல் சச்சிதானந்த ஹிரானந்தா வாத்சியாயன் வாழ்க்கையைப் பேசுகிறது. இவரது வாழ்க்கை இரண்டு உலகப்போர்களை மையமாக கொண்டது. அமெரிக்க உளவு நிறுவனமான சிஐஏவுடன் கொண்டுள்ள உறவு, தனிப்பட்ட காதல் உறவு என பல்வேறு விஷயங்களை முகுல் நூலில் விவரிக்கிறார். இந்தி இலக்கியத்தில் முக்கியமான புனிதர் ஆனது பற்றி எழுதியிருப்பது வாசிக்க சுவாரசியமாக உள்ளது.  கிரிம்சன் ஸ்பிரிங் நவ்தேஜ் சர்னா ஆலெப் ஜாலியன் வாலாபாக் படுகொலையை ஒன்பது நபர்கள் பார்க்கிறார்கள். இவர்களில் சிலர் ஆங்கிலேயர்கள், இந்தியர்கள், படித்தவர்கள் என உள்ளனர். இவர்களின் மனப்போக்கில் அந்த சம்பவம் எப்படி பதிந்துள்ளது என்பதை நாவலாக எழுதியுள்ளார் ஆசிரியர்.  எ கன்ட்ரி கால்டு சைல்

புத்தகம் புதுசு - புதினின் மனதில் என்ன இருக்கிறது?

படம்
  ஆஃப்டர் ஸ்டீவ் டிரிப் மிக்கில் ஹார்ப்பர் கோலின்ஸ் 599 ஸ்டீவ் ஜாப்ஸ் இருந்தபோது ஆப்பிளின் மதிப்பே வேறு. புதிய கண்டுபிடிப்புகள் வந்தன. பழைய பொருட்கள் தூக்கியெறியப்பட்டன. ஆனால் இப்போது நிறுவனம் தனது ஆன்மாவை இழந்துவிட்டது. புதிய கண்டுபிடிப்புகள் ஏதும் இல்லை. பழைய பொருட்களையே அப்டேட் செய்து விற்று வருகிறார்கள். நூலை ஆசிரியர் 200 முன்னாள், இந்நாள் ஊழியர்களிடம் பேசி ஆப்பிள் எப்படி செயல்படுகிறது என அடையாளம் கண்டு எழுதி உள்ளார்.  புதின்  பிலிப் ஷார்ட்  பெங்குவின் ராண்டம் ஹவுஸ்  புதிதின் புதிய ரஷ்யாவைப் பார்த்துக்கொண்டிருக்கிறோம். அது உக்ரைனை அழித்துக்கொண்டிருக்கிறது. 2000இல் ரஷ்ய அதிபராக பதவியில் உட்கார்ந்தார் புதின். பிறகுதான் சோவியத் ரஷ்யா கால அதிகாரத்தை கொண்டு வர நினைத்து பல்வேறு வேலைகளை செய்யத் தொடங்கினார். பனிப்போர், சைபர் போர், பிரிந்துசென்ற நாடுகளை மிரட்டி ரஷ்யாவுடன் இணைப்பது என புதினின் மனதில் மூளையில் என்னதான் உள்ளது என விளக்கமளிக்க முயல்கிறது இந்த நூல்.  தி மிஸ்ஸிங் கிரிப்டோகுயின் ஜேமி பார்ட்லெட் பெங்குவின் ராண்டம் ஹவுஸ் இக்னாடோவா என்ற பெண்மணி மற்றிய கதை. இவர் ஹார்வர்டில் படித்தவர்.

விலையை குறைக்கவே குறைக்காத புத்தகக் கடை! - கடிதங்கள்

படம்
  அன்புள்ள ஆசிரியர் கே.என்.சிவராமன் அவர்களுக்கு, வணக்கம்.  நலமாக இருக்க இறைவனை வேண்டுகிறேன். இப்போதுதான் வடபழனி சென்று வந்தேன். ஃபோரம் விஜயா மாலில் உள்ள கிராஸ்வேர்ட் கடைக்கு சென்றேன். அங்கு ஷோபாடே எழுதிய கட்டுரை நூலை வாங்கினேன். 2008இல் வந்த நூலைக் கூட விலை குறைக்காமல் விற்கும் துணிச்சலான நிறுவனம். இன்னும் கொஞ்சநாளில் நூல்களை விட ஃபேன்சி பொருட்களை விற்கத் தொடங்கிவிடும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. நூல்களின் எண்ணிக்கைக்கு சமமாக பேக்குகள், பேனாக்கள், நோட்டு புத்தகங்கள் உள்ளன.  இந்த வாரம் முழுக்க எந்த நூலையும் ஆர்வமாக படிக்க முடியவில்லை. எ மிராக்கிள் என்ற துருக்கி தொடரை எம்எக்ஸ் பிளேயர் ஆப்பில் பார்த்தேன். இந்த தொடர் தென்கொரிய தொடரான குட் டாக்டரின் ரீமேக்தான். துருக்கியில் அதனைப் பார்ப்பதற்கு முக்கியமான காரணம், அதன் நாயகனாக நடித்து ஆட்டிச பாதிப்பை நமக்கு புரிய வைத்துள்ளார். நிறைய காட்சிகளில் கண்ணீரை கட்டுப்படுத்தவே முடியவில்லை. புனைவுதான். ஆட்டிச பாதிப்பை கட்டுப்படுத்தி நல்ல அறுவை சிகிச்சை நிபுணராக மாறினார் என்பதே கதை. தரவிறக்கி வைத்துள்ள கட்டுரை நூல்களை படிக்கவேண்டும் என நினைக்கிறேன். விரைவி

சீரியல் கொலைகாரர்களுக்கு பிடித்த புத்தகம்!

படம்
  பிடித்த புத்தகம் சீரியல் கொலைகார ர்கள் பொதுவாக தாங்கள் செய்யும் அனைத்து அட்டூழியங்களுக்கும் குரான், பைபிள், இந்து இதிகாசங்கள் என அனைத்தையும் காரணம் காட்டுவார்கள். அதற்காக இவர்கள் மத நூல்களை கரைத்து குடித்தவர்கள் என்று நினைக்கவேண்டாம். நீதிமன்றத்தில் தண்டனை குறைவாக கிடைக்க இப்படி பேசுவார்கள். மதம் சார்ந்த நம்பிக்கை கொண்டவர்களுக்கு இதை எதிர்கொள்வது கடினமாக இருக்கும்.  தான் நினைப்பது சரி, பிறர் செய்வதும், நினைப்பதும் தவறு, உலகமே மோசமாக இருக்கிறது என்பதுதான் சீரியல் கொலைகார ர்கள், வல்லுறவு செய்பவர்களின் நினைப்பு. இந்த வாதத்தை சரிகட்டத்தான் அவர்கள் பைபிள், குரான், இதிகாச புராணங்கள் , பாத்திர ங்களை தேடி நம் கண் முன்னே கொண்டு வருகிறார்கள்.  தாங்கள் எடுத்துக்காட்டாக கூறும் பல நூல்களை சீரியல் கொலைகாரர்கள் படித்திருக்கவே மாட்டார்கள். கேட்சர் இன் தி ரை என்ற நாவலில் சீரியல் கில்லர் பாத்திரம் ஒன்றை ஜே.டி. சாலிங்கர் உருவாக்கியிருக்கிறார். இப்பாத்திரம், தான் செய்வது சரி, பிறர் செய்வது தவறு என உறுதியாக நம்பி செயல்படும். ஓரளவுக்கு தன்னைத்தானே விரும்பும் சுயநலமான சீரியல் கில்லர் பாத்திரத்திற்கு கால்பீ

புதிய புத்தகம் பேசுது! - தேசியவாதம் நல்லது!

படம்
தி கேஸ் ஃபார்  நேஷனலிசம் ரிச் லோரி உலகெங்கும் தேசியவாதம் வளர்ந்து வருகிறது. இதை வைத்து பல்வேறு வலதுசாரி வாத கட்சிகள் தேர்தலில் வென்று வருகின்றன. அதற்கு காரணம் என்ற என்று ஆசிரியர் லோரி ஆராய்ந்திருக்கிறார். ஏறத்தாழ ட்ரம்பிசம் முதற்கொண்டு அனைத்து தேசியவாதங்களும் நல்லதுதான் என முடிவு செய்து எழுதியுள்ளார் ரிச் லோரி. ஃபீமேல்ஸ் ஆண்ட்ரூ லாங் சூ அதிகம் விரும்பப்படுவதும், வெறுக்கப்படுவதும் பெண்கள்தான். அந்த பெண்களைப் பற்றியதுதான் இந்த புத்தகம். அனைவரும் பெண்கள்தான் என ஆசிரியர் சொல்லுகிறார். எதை வைத்து என்பதை புத்தகம் படித்து புரிந்துகொள்ளுங்கள். ஆபாச படங்களுக்கு எதிரான பெண்கள், பெண்ணியவாதிகள் என பல்வேறு துறை சார்ந்த பெண்களைப் பற்றியும் ஆசிரியர் கவலைப்பட்டு எழுதியிருக்கிறார். இன் டிஃபன்ஸ் ஆஃப் எலைட்டிசம் ட்ரம்ப் 2016 ஆம் ஆண்டு பாப்புலிச சிந்தனைகளைச் சொல்லி அடித்தட்டு அமெரிக்கர்களின் நம்பிக்கையைப் பெற்றார். அதன்பிறகு பேசியே மக்களின் மனதில் நின்றார். அடுத்த தேர்தலிலும் அவர் வெல்ல வாய்ப்புகள் உள்ளன. எப்படி தன்னை தற்காத்துகொள்கிறது மேல்தட்டு வர்க்கம் என ஜோயல் ஸ்டெய்ன் விளக்

புத்தகமா? இபுக்கா எது பெஸ்ட்?

படம்
இபுக்குகளை விட காகித புத்தகங்களே சிறந்தவை. இரண்டு வயதுக்கு குறைவான குழந்தைகள் இபுத்தகங்களை மட்டுமே டிவி, செல்போன் திரையைப் பார்ப்பது தவறு என மருத்துவர்கள் வலியுறுத்தியுள்ளனர். இது குறித்த அறிக்கை பீடியாட்டிரிக்ஸ் பத்திரிகையில் வெளியாகியுள்ளது. மிச்சிகன் பல்கலையைச் சேர்ந்த டாக்டர் டிஃபானி முன்சர், புத்தகங்களை படிப்பது குழந்தை மற்றும் சிறுவர்களின் மொழி, பேச்சு ஆகியவற்றை ஊக்குவித்து உறுதியாக்க உதவுகிறது. இது உடல் மற்றும் மன வளர்ச்சிக்கும் ஆதாரமாகிறது என்கிறார். அதேசமயம் இதனை எதிராக நீங்கள் புரிந்துகொள்ளக்கூடாது. புத்தகங்களை உங்களுக்குப் பிடிக்கும் என்றாலும் குறிப்பிட்ட அளவுதானே வீட்டில் வைத்து படிக்க முடியும். இபுக் வந்தபின், லட்சக்கணக்கான நூல்களை டேப்லட்டில், கிண்டிலில் படிக்க முடிகிறதே என டெக்கி வாசகர்கள் கேள்வி எழுப்பலாம். ஒப்பீடு என்பது புத்தகங்களுக்கே சாதகமாகியுள்ளது. நடைமுறை எதார்த்தம் நம்மை இபுக்குகளை தேட வைக்கிறது என புரிந்துகொண்டு வாசியுங்கள். முன்சர் குழு, 37 பெற்றோர் - குழந்தைகளை ஆராய்ந்ததில்  இந்த உண்மையை அறிந்துள்ளனர். ஒரே கதையை மூன்றுவகை பிளாட்பார்ம் வழி