நாட்டை துண்டாடிய காந்தி, ஜின்னாவின் முரண்பட்ட கருத்துகள்! - புத்தகம் புதுசு

 


புத்தகம் புதுசு 












ரைட்டர் - ரெபல், சோல்ஜர், லவ்வர் - தி மெனி லிவ்ஸ் ஆஃப் அக்யேயா 
அக்ஷயா முகுல் 
வின்டேஜ் புக்ஸ்

2017ஆம் ஆண்டு அக்ஷய முகுல் இந்து பிரஸ் அண்ட் மேக்கிங் ஆஃப் இந்து இந்தியா என்ற நூலை எழுதினார். இதில் மதம், அரசியல், தேசியம் என நிறைய விஷயங்களைப் பேசியிருக்கிறார். இந்த நூலை ஜாலியாக படிக்கலாம் என்றும் சொல்ல முடியாது. கல்விக்கானது என்றும் கூறமுடியாது.  இப்போது எழுதியுள்ள இந்த நூல் சச்சிதானந்த ஹிரானந்தா வாத்சியாயன் வாழ்க்கையைப் பேசுகிறது. இவரது வாழ்க்கை இரண்டு உலகப்போர்களை மையமாக கொண்டது. அமெரிக்க உளவு நிறுவனமான சிஐஏவுடன் கொண்டுள்ள உறவு, தனிப்பட்ட காதல் உறவு என பல்வேறு விஷயங்களை முகுல் நூலில் விவரிக்கிறார். இந்தி இலக்கியத்தில் முக்கியமான புனிதர் ஆனது பற்றி எழுதியிருப்பது வாசிக்க சுவாரசியமாக உள்ளது. 





கிரிம்சன் ஸ்பிரிங்
நவ்தேஜ் சர்னா
ஆலெப்

ஜாலியன் வாலாபாக் படுகொலையை ஒன்பது நபர்கள் பார்க்கிறார்கள். இவர்களில் சிலர் ஆங்கிலேயர்கள், இந்தியர்கள், படித்தவர்கள் என உள்ளனர். இவர்களின் மனப்போக்கில் அந்த சம்பவம் எப்படி பதிந்துள்ளது என்பதை நாவலாக எழுதியுள்ளார் ஆசிரியர். 



எ கன்ட்ரி கால்டு சைல்ட்ஹூட்
தீப்தி நாவல்

1950 - 1960 களில் தீப்தி நாவல் பஞ்சாப்பின் அமிர்தசரஸ் நகரில் எப்படி வளர்ந்து வந்தார் என்பதை விவரிக்கிறது இந்த நூல். தீப்தி நாவலின் இளமைக்கால வாழ்வையும், அதில் அவருக்கு ஏற்பட்ட வலியையும் துயரத்தையும் பேசுகிறது இந்த நூல்.




வேர் தி கோப்ல்டு பாத் லீட்ஸ் 
ஹாமிஸ் ஹாமில்டன்  

கற்பனையான கதை. பதினொரு வயதான சிறுவனுக்கு பேய்கள் எப்படி அவன் துக்கத்தை, வேதனையைக் கடந்து வர உதவுகிறது என்பதே நாவலாகியிருக்கிறது. 




தி மேப் அண்ட் தி சிசர்ஸ் 
ஹார்ப்பர் கோலின்ஸ் 

காந்தி, ஜின்னா ஆகியோர் தான் இதில் நாயகர்கள். இந்த இரு தலைவர்களின் முரண்பாடான கருத்துகள் எப்படி நாட்டை பிளவுபடுத்தின என்பதை நாவலாக எழுதியிருக்கிறார் அமித் மஜூம்தார். 

  Readers digest


கருத்துகள்