இடுகைகள்

அரசியல் பகடி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

இந்திய வெளியுறவுக் கொள்கையின் தவிர்க்க முடியாத ஏழு அம்சங்கள்!

படம்
  இந்திய வெளியுறவுக் கொள்கையின் ஏழு தூண்கள் வெளிநாட்டுப் பயணம் இந்திய வெளியுறவு அமைச்சகத்தில் உள்ள அதிகாரிகள் அப்ரைசல் பெறுவதற்கான முக்கியமான தகுதி, அவர்களுடைய முதலாளி அதாவது, தலைவர் வெளிநாடுகளுக்கு செல்ல ஏற்பாடு செய்திருக்கிறாரா இல்லையா என்பதுதான். அதிகமுறை வெளிநாடுகளுக்கு செல்ல உதவியிருந்தால் அவருக்கு நிச்சயமாக பதவி உயர்வு உண்டு. அதிக நாட்கள் தலைவர் வெளிநாட்டு மண்ணில் இருந்தால், வெளியுறவு அமைச்சகத்தில் அத்றகு உதவிய அதிகாரிகளுக்கு விரைவான வளர்ச்சி சாத்தியம். கட்டி அணைப்பேன் உன்னையே… நாட்டின் தலைவர், உலகின் வலிமையான தலைவர்களைக் கட்டிப்பிடிக்கும்போது அதை புகைப்படமாக, வீடியோ வழியாக பார்க்கும் அனைத்து இந்தியர்களின் நெஞ்சமும் பெருமையால் விம்மும். ஆனால் அப்படி உணர்ச்சி பொங்காதபோது நீங்கள் உடனே அருகிலுள்ள தேசிய புலனாய்வு முகமைக்கு சென்று உங்கள் இதயத்தில் தேசதுரோக கருத்துகள் உள்ளதாக என சோதித்துக்கொள்வது நல்லது. இந்திய வெளியுறவுக் கொள்கையில் தலைவர்களைக் கட்டிப் பிடிப்பது முக்கியமான அம்சம். இதை நீண்ட காலமாக முக்கியமான கொள்கையாக கடைபிடித்து வருகிறார்கள். இதன் மூலம் ஐ.நா பாதுகாப்பு கௌன்சிலில் நிர

30 பிளஸ் ஆட்களுக்கான அரசில் பகடி அதிரடி - முத்தின கத்திரிக்கா

படம்
முத்தின கத்திரிக்கா இயக்கம் வேங்கட் ராகவன் ஒளிப்பதிவு - பானு முருகன் இசை - சித்தார்த் விபின் மூலப்படம் - வெள்ளி மூங்கா கதை - ஜோஜி தாமஸ் ஆஹா படம் உங்களை சிரிக்க வைத்துக்கொண்டே இருக்கும் என்பதுதான் கேரண்டி. சுந்தர்.சி, சதீஸ், ரவி மரியா, சிங்கம் புலி என அனைவருமே பிரமாதமாக நடித்திருக்கிறார்கள். மலையாளப்படத்தின் அங்கதத்தை அப்படியே கடத்தியிருக்கிறார்கள். அதனால் சிலநேரம் தீவிரமான அரசியல் பகடியோ என்று தோன்றுமளவு படம் செல்கிறது. இது தமிழ் ரசிகர்களுக்கு புதிய அனுபவம்தான். காமெடி என்பதால் பாடல்களில் இசையமைப்பாளரும் மெனக்கெடவில்லை. கோவிலூர் நகராட்சியில் நின்று ஜெயிக்கும் லெட்டர்பேடு கட்சித்தலைவர் என்பதுதான் ஒன்லைன். இதில் நாற்பது வயது கடந்த அவருக்கு திருமணம் ஆகவில்லை என்பது முக்கியமான விஷயம். இதை வைத்தே படம் முழுக்க கலாய்த்து சிரிக்க வைத்திருக்கிறார்கள். ஐய்யய்யோ... சிங்கம்புலி சொல்வது போல ஐந்து தெருக்களை கொண்ட ஊர் என்பதால் பானு முருகனின் கேமரா தடுமாறி இருக்கிறது. எனவே இருக்கும் விஷயங்களை வைத்து பட்ஜெட்டிற்குள் பதவிசமாக பிரமாண்டமாக படம் எடுத்திருக்கிறார்கள். பா