இடுகைகள்

என்சிடி 48 லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மூளைக்கு மாத்திரை போட்டு புத்திசாலியாகும் இளைஞனும், அமெரிக்க அரசியலும்! - லிமிட்லெஸ் - வெப் தொடர்

படம்
லிமிட்லெஸ் இருபத்தெட்டு ஆண்டுகள் எதையும் செய்யாமல் கிளப்புகளில் பாட்டு பாடிக்கொண்டிருக்கும் இளைஞனுக்கு நண்பன் மூலம் என்சிடி மாத்திரை கிடைக்கிறது . மூளையின் அனைத்து செல்களையும் உற்சாகப்படுத்தி வேலைவாங்கும் மாத்திரையால் அசாதாரண புத்திசாலியாக மாறும் இளைஞன் வாழ்க்கைதான் கதை . வெப் தொடர் சீரியசான பிரச்னையை பேசினாலும் இதிலுள்ள காமெடி அனைத்தையும் ரசிக்க வைக்கும்படி இருக்கிறது . தொடரின் தொடக்கத்திலேயே என்சிடி மாத்திரையை பிரையன் பின்சுக்கு கொடுத்த நண்பர் தனது வீட்டில் கொலையாகி கிடக்கிறார் . அவரிடம் இன்னொரு மாத்திரை வேண்டும் என கேட்கப்போன பிரையன் சம்பவ இடத்தில் இருக்க அவரைப் போலீஸ் துரத்துகிறது . அதிலிருந்து அவர் மீண்டு ரெபெக்கா ஹாரிஸ் என்ற காவல்துறை அதிகாரி மூலம் எஃப்பிஐயில் ஆலோசகராக வேலைக்கு சேர்ந்து குற்றவாளிகளை பிடிக்க உதவுகிறான் . தொடரில் பிரையன்தான் நாயகன் . ஆனால் ஏராளமான பாத்திரங்களை உள்ளே சேர்ந்து போராடிக்காமல் பார்த்துக்கொண்டதோடு , காமெடிக்கான இடமும் தொடரில் அதிகமாக உள்ளது . ஜேக் மெக்டோர்மன் , ஜெனிஃபர் கார்பென்டர் , ஹில் கார்பர் , மேரி எலிசபெத் ஆகியோர்தான் இத