இடுகைகள்

கன்ஹா லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

புலிகள் சரணாலயத்தை சுற்றி வளைக்கும் மாவோயிஸ்டுகள்!

படம்
  மத்தியப் பிரதேசத்தில் புலிகள் காப்பகம் ஒன்றுள்ளது. அதன்பெயர், கன்ஹா. 2,162 சதுர கி.மீ. பரப்பு கொண்ட நிலம். இங்கு புலி, காட்டெருமை கரடி, காட்டு நாய் என நிறைய விலங்குகள் உண்டு. இதைத்தாண்டி அதை இந்தியளவில் கவனப்படுத்தும் அம்சம் ஒன்று இருக்கிறது. அதுதான், மாவோயிஸ்ட்டுகள். இந்த புலிகள் காப்பகத்தில் நூற்றுக்கும் அதிகமாக புலிகள் வாழ்க்கின்றன. இங்கு தங்கள் கூடாரத்தை விரித்துள்ள மாவோயிஸ்ட்கள் அங்கு பணியாற்றும் வனக்காவலர்களை சுட்டுக்கொன்று வருகின்றனர்.  பாலகாட், மண்ட்லா என இரு மாவட்டங்களுக்குள் புலிகள் காப்பகம் வருகிறது. இங்கு வனத்துறை பணியாளர்களாக காவல் காத்தவர்கள் ஒவ்வொருவராக மாவோயிஸ்ட்களால் தாக்கப்பட்டு உயிரிழந்தனர். பிறகுதான் இது காவல்துறைக்கு தெரியப்படுத்தப்பட்டது. அண்மையில் சுக்தியோ என்ற வனக்காவலர் போலீஸ் உளவாளி என கண்டறியப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டார். மார்ச் 23 அன்று பாலகாட்டிலுள்ள விடுதி ஒன்றில் சுக்தியோவின் உடல் கண்டறியப்பட்டது.  பிறகு இதில் சூழல் துறை அமைச்சர் பூபேந்திர யாதவ் காதில் விழுந்து அரசு மரபுப்படி ஏராளமான கலந்துரையாடல்கள் சந்திப்பு நடத்தப்பட்டு புலிகள் காப்பகத்திற்கு வெளிய