இடுகைகள்

திருநெல்வேலி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

எனக்கு கிடைத்த மறக்க முடியாத நண்பர் நீங்கள்! கடிதங்கள்

படம்
            அன்பு நண்பர் கதிரவனுக்கு , நலமா ?    உங்கள் வீட்டில் உள்ளவர்களும் நலமாக இருப்பார்கள் என நினைக்கிறேன் . பெருந்தொற்று காலகட்டத்தில் வேலையை காப்பாற்றிக்கொள்வதே கடினமாக உள்ளது . இதழ்களில் விளம்பரங்கள் கிடைப்பது வெகுவாக குறைந்துவிட்டது . பொதுவாக அனைத்து தொழில்களும் தள்ளாடி வருகின்றன . பொதுமுடக்கம் அனைத்து துறைகளையும் பாதித்துள்ளது . நீலகண்ட பறவையைத் தேடி என்ற நாவலின் சில பகுதிகளை படித்தேன் . வங்கதேச முஸ்லீம்களின் வாழ்க்கையை பேசும் நூலில் 60 பக்கங்கள் நிறைவு பெற்றுள்ளன . இப்போதுள்ள நிலையில் மனநிலையை கட்டுக்குள் வைத்துக்கொண்டு வேலையை செய்வது கடினமாக உள்ளது . படங்கள் பார்ப்பதை விட யூட்யூபில் டிவி தொடர்களை பார்த்து வருவதே எனது பொழுதுபோக்காக மாறிவிட்டது . கொரிய டிவி தொடர்களில் புதிய ஐடியாக்கள் , பாத்திரங்கள் , இந்திய மனநிலை , மதிப்புகள் என நிறைய விஷயங்களை அழகாக பேசுகிறார்கள் . பேரிளம் பெண்ணின் அழகிய வனப்பும் வளங்களும் , குழந்தையின் மனமுமாக கொரிய டிவி தொடர் பெண்கள் காட்டப்படுவது புதுமை . சீரியல் கொலைகாரர்களின் மனநிலை பற்றிய நூல்களை படித்து வருகிறேன் . இதனை எதிர்வரும் நாட்களில

அன்பின் ஈரம் குறையாத சிறுகதைகள்! - நாபிக்கமலம் - வண்ணதாசன்

படம்
            நாபிக்கமலம் வண்ணதாசன் இந்த தொகுப்பில் மொத்தம் பதிமூன்று கதைகள் உள்ளன . இதில் வண்ணதாசன் கதைகளில் இல்லாத சிறப்பு என்னவென்றால் , இதில் இடம்பெறும் பாத்திரங்கள் முன்னர் தங்களுக்கு ஏற்பட்ட நிலைகளுக்கு யாரையும் குறை சொல்லமாட்டார்கள் . ஆனால் இத்தொகுப்பில் உள்ள கதைகளில் மனிதர்கள் தங்களுக்கு பிடித்ததைப் போலவே பிடிக்காத விஷயங்களையும் பகிர்கிறார்கள் . அடுத்தவர்களுக்கு அது புரிகிறதோ இல்லையோ தங்கள் மனதிலுள்ளதை வெளிப்படுத்த நினைக்கிறார்கள் . ஒருவரின் உலகில் ஒருவர் மட்டுமே இருந்தால் போதுமா என நாபிக்கமலத்தில் சங்கரபாதம் கேட்கும் கேள்வி முக்கியமானது . அவரது மனைவி அவரின் தோழிகளின் மீதும் , அவர் மீதும சந்தேகப்படுவதால் அவரது வாழ்க்கை நரகமாகிறது அதனை அவர் எங்கும் வெளிப்படுத்த முடியவில்லை என்றாலும் அவரது வாழ்க்கை சுதந்திரமானதாக இல்லை . வருத்தம் தொய்ந்ததாக மாறுகிறது . காசிராஜன் , தாயம்மளா , அகஸ்திய அத்தை , தனுஷ்கோடி அண்ணன் , பிரேமா , சரவணன் என பல்வேறு கதாபாத்திரங்கள் உறவுகளுக்கு ஏங்குபவர்களாகவும் , ஒருவரின் கரம் பற்றி பேசுவதில் தங்கள் ஆன்மாவை மறக்கிறவர்களாகவும் உள்ள

கைகளைச் சுற்றிய பாம்பு - சாதிக்கயிறுகள் எதற்கு?

படம்
thewire இது ஒன்றும் புதிதல்ல. நாங்கள் இப்படி கைகளின் கயிறு பேண்ட் கட்டிக்கொண்டு பள்ளிக்கு வருவதில் என்ன தவறு இருக்கிறது? பத்தாண்டுகளுக்கு மேலாக இப்படித்தானே இருக்கிறது? எங்கள் சாதி பற்றி எங்களுக்கு பெருமை என்று பேசியது யாரோ அல்ல; நாளை இந்த சமூகத்தில் தலைமை தாங்கிச்செல்லக்கூடிய மாணவர் ஒருவரின் குரல்தான் இது. திருநெல்வேலி, தென்காசியில் சாதிக்கயிறுகளின் ஆட்சி அதிகம். அண்மையில் பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன், பள்ளிகளில் நெற்றியில் திலகம்,  பொட்டு, சாதியைக் குறிக்கும் கலர் கயிறுகள், பேண்டுகள் கட்டிவரக்கூடாது என தடை விதித்துள்ளது. சாதியைச் சொல்லும் இந்தப் பெருமை முதலில் பெரியவர்கள் பையன்களுக்குக் கற்றுத்தந்தனர். இந்த நச்சு பள்ளிக்குள் புகுந்தது. இப்போது இந்த விவகாரத்தில் ஒதுங்கியிருந்த மாணவிகளும் தம் தலையில் கலர் ரிப்பன்களை சூடி சாதியை பிறருக்கு சொல்லத் தொடங்கி விட்டனர். மாணவர்கள் ஒழுங்காகப் பேசவும், நடக்கவும் தொடங்கும் முன்னரே சாதிப்பெருமைக்கான சுழலில் சிக்கி விடுகின்றனர். அவர்களது சாதியைச் சேர்ந்த தலைவர்களது புகழ் பாடத்தொடங்குகின்றனர். இதுதான் இந்த சாதி நச்சுப்ப