இடுகைகள்

கோமாளி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

வைரம் திருடிய சிறுமியைக் காக்க ஒன்று கூடும் பெண்கள் படை - ஹார்லி குயின் பேர்ட்ஸ் ஆப் பிரே - மார்கட் ராபி

படம்
  ஹார்லி குயின் – பேர்ட்ஸ் ஆப் பிரே தயாரிப்பு – நடிப்பு – மார்கட் ராபி தமிழ் டப் – ரசிகர்களின் டப்பிங்   இன்று குறிப்பிட்ட காமிக்ஸ் பாத்திரம் ஒருவருக்கு கொடுக்கப்பட்டால் அதில் நடித்து புகழும் கிடைத்தால், பிறகு அந்த நடிகர் தானே தயாரிப்பாளராக அதே பாத்திரத்தை மேம்படுத்தி நடிக்கத் தொடங்கிவிடுகிறார். இதுதான் இப்போதைய ஆங்கிலப் படங்களின் டிரெண்ட். மார்வெல்லில் ரியான் ரெனால்ட்ஸ் அப்படித்தான் நடித்து வருகிறார். ஹார்லி குயின் படத்தில் மார்கட் ராபி தானே தயாரித்து கதாநாயகியாக இந்த படத்தில் நடித்துள்ளார். கதையில் பெரிய திருப்பம் என்று ஏதும் கிடையாது. படத்தில் ஹார்லியை முட்டாள் கோமாளியான ஜோக்கர், தன் வீட்டிலிருந்து வெளியேற்றி விடுகிறான். இதனால் மனமுடைந்து போன ஹார்ட்லி, டாக் என்பவரின் வீட்டில் அமைதியாக மறைந்து வாழ்கிறாள். மேலும் ஜோக்கரின் மீதுள்ள காதலை மறக்க முடியாமல் தவிக்கிறாள். அதேசமயம், பார், பப் என சென்று அங்கிருப்பவர்களை எப்போதும் போல வம்புக்கு இழுக்கிறாள். இப்படியிருக்கும்   வாழ்வில்தான் சிறு திருட்டுகளை செய்யும் சிறுமி ஒருத்தி வருகிறாள். இவள் எதேச்சையாக பிக்பாக்கெட் அடிக்கும்போது

இயற்பியலை மாற்றிய ஃபெய்மன் வரைபடம்!

படம்
  இயற்பியலை மாற்றிய ஃபெய்மன் வரைபடம்! இயற்பியலில் அணுத்துகள்களைக் கணக்கிடுவதில் 1940 ஆம் ஆண்டு ஒரு புரட்சிகர மாற்றம் நடந்தது.  ஆம் ஆண்டில்தான் இயற்பியலாளர் ரிச்சர்ட் ஃபெய்மன், அணுத்துகள்களைக் கணக்கிடுவதற்கான வழியைக் கண்டுபிடித்தார்.  இருபதாம் நூற்றாண்டில் புகழ்பெற்ற ரிச்சர்ட் ஃபெய்மனை நாம் நினைத்துப் பார்ப்பதற்கான காரணமும் அதுதான். அமெரிக்காவில் மன்ஹாட்டன் ப்ராஜெக்டில்  அணுகுண்டை மேம்படுத்துவதற்கான குழுவில் ஃபெய்மன் பணியாற்றி வந்தார்.  இக்குழுத்தலைவராக இயங்கிய ஹான்ஸ் பெதே(Hans bethe) வுக்கு 1967 ஆம் ஆண்டு  இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. அப்போது ஹான்ஸ் சொன்ன வாக்கியம் மறக்க முடியாதது. உலகில் இருவகை அறிவாளிகள் உண்டு. ஒருவர் கடினமான உழைத்து பெரிய காரியங்களைச் சாதிப்பார்கள். சிலர் மாந்த்ரீகர்கள் போல செயல்பட்டு எப்படி சாதித்தார்கள் என வியக்க வைப்பார்கள். இரண்டாவது வகையைச் சேர்ந்தவர், ஃபெய்மன் என்று கூறினார்.  மிகச்சிறந்த அறிவாளி, கோமாளித்தனமும் புத்திசாலித்தனமும் நிறைந்தவர் என அறிவியல் வட்டாரங்களும், நண்பர்களும் புகழும் ஆளுமை. 1962 ஆம் ஆண்டு கல்லூரி மாணவர்களுக்கு இயற்பியல் பற்றி