இடுகைகள்

கோபிகோ லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

குழந்தைகளை வாடிக்கையாளர்களாக்கி வளைக்கும் பெருநிறுவனங்கள்!

படம்
  லியோ காபி என்றதும் உங்கள் மனதில் என்ன நினைவுக்கு வருகிறது. ஏ ஆர் ஆரின் விளம்பர இசை நினைவுக்கு வந்தால் சிறப்பு. அதைக்கடந்து ஹாரிஸ்   ஏ ஆர் ஆரின் விளம்பர இசையை முதற்கனவே பாடலில் (மஜ்னு) பயன்படுத்தியதும் நினைவுக்கு வந்தால் மிகச்சிறப்பு.   இதேபோல்தான் குஜராத்தில் தயாரிக்கப்பட்டு இந்துஸ்தான் யூனிலீவருக்கு போட்டியாக சலவை சோப், தூளை விற்ற நிர்மா நிறுவனம். இந்த நிறுவனத்தின் விளம்பரம் பலருக்கும் நினைவில் இருக்கும். இப்போதும் இந்த நிறுவனம் போட்டிகளை சந்தித்து சோப்பு, சலவைத்தூளை விற்கிறது. நிறுவனத்தின் ட்ரேட்மார்க்காக பாவாடை பறக்கும் பாப்பா கூட மாற்றப்படவில்லை. நினைவு தெரிந்த நாட்களில் கேட்ட விளம்பர இசை என்பதால் மேற்சொன்னவற்றை ஒப்புக் கொள்ளலாம். இதைக் கடந்து குழந்தை   வயிற்றில் இருக்கும்போதே அம்மாவின் இதயத்துடிப்பு, உடலில் செல்லும் பல்வேறு திரவங்களின் ஒலியைக் கேட்கிறது. கர்ப்ப காலத்தில் அம்மா கேட்கும் கார்த்திக் ஐயரின் ‘ஆசை முகம் மறந்துபோச்சே’ பாடலைக் கூட கேட்டு வைப் செய்ய முடியும். இப்படி கேட்டு வளரும் குழந்தை, அம்மாவின் இசை ரசனையை எளிதாக கற்று பின்னாளில் மகத்தான இசைக்கலைஞராக கூட மாறலாம். கர