இடுகைகள்

டாய்ஸ்டோரி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

விண்ணைத்தாண்டி சொந்த கிரகத்திற்கு பறக்க முயலும் பஸ் லைட் இயர்! - லைட்இயர் - டிஸ்னி பிக்ஸார்

படம்
  லைட் இயர் பிக்சார் -டிஸ்னி வேற்று கிரகத்திலிருந்து பூமியை ஒத்த கிரகம் ஒன்றுக்கு ஆராய்ச்சி செய்ய ஸ்பேஸ் ரேஞ்சர்கள் வருகிறார்கள். அப்படி வந்து ஆராய்ச்சி செய்யும்போது, அங்கு உயிருள்ள ஜந்துகளை பிடித்து உண்ணும் மர விழுதுகள் இருப்பதைப் பார்க்கிறார்கள். அவற்றிடமிருந்து தப்பிக்கும்போது விண்கலம் பாறையில் மோத அங்குள்ள பீடபூமி அமைப்பு ஒன்றில் சிக்கிக் கொள்கிறார்கள். அவர்கள் அங்கிருந்து தங்கள் கோளுக்கு மீண்டு சென்றார்களா இல்லையா என்பதே கதை.  பஸ் லைட் இயர் (செல்லப்பெயர் பஸ்) என்பவர்தான் இதில் ஸ்பேஸ் ரேஞ்சர்களில் ஒருவர். இவருக்கு ஆணைகளை வழங்கும் கமாண்டர் பெண்மணி ஒருவர் உண்டு. அவர் பெயர் அலிஷா. பஸ் செய்யும் தவறு காரணமாகவே விண்கலம் பீடபூமி அமைப்பில் மாட்டிக்கொள்கிறது. கூடவே விண்கலத்திற்கு ஆற்றல் தரும் கிரிஸ்டலும் உடைந்துபோய் விடுகிறது. இந்த எரிபொருள் இருந்தால்தான் அவர்களின் சொந்த கிரகத்திற்கு செல்ல முடியும்.  இதை அதே கிரகம் ஒன்றிலிருந்து அகழ்ந்து எடுத்து சோதித்து பிறகுதான் பயன்படுத்த முடியும்.  தங்களது சொந்த கிரகத்திற்கு செல்வதே பஸ் காலகட்ட வீரர்களுக்கு லட்சியம்.  பஸ் இப்படி ...