டெவில்ஸ் அட்வகேட் கரண் தாப்பர் ரூ.375 ஹார்ப்பர் கோலின்ஸ் அமேசான் இந்தியாவில் இன்போடெய்ன்மென்ட் டெலிவிஷன் நெட்வொர்க் என்ற நிறுவனம் தொடங்கி அதன் மூலம் பல்வேறு தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு நேர்காணல் நிகழ்ச்சிகளை செய்துகொடுத்த பத்திரிகையாளர் கரண் தாப்பர் எழுதியுள்ள சுயசரிதை நூல், டெவில்ஸ் அட்வகேட். இதேபெயரில் அவர் சிஎன்என் ஐபிஎன் டிவி சேனலில் நேர்காணல் நிகழ்ச்சி நடத்தியுள்ளார். தற்போது, கரண் தாப்பர் தி வயர் என்ற இணைய பத்திரிகைக்கு நேர்காணல் நிகழ்ச்சிகளை செய்து கொடுத்து வருகிறார். டெவில்ஸ் அட்வகேட் நூல், மொத்தம் 187 பக்கங்களைக் கொண்டது. இந்த பக்கங்களில் அவர் தான் காஷ்மீரில் பிறந்தது, அவரது பெற்றோரின் அதீத பாசம், மூன்று சகோதரிகளின் அன்பு, பள்ளிப்படிப்பு, தனக்கு கரண் என பெயர் வந்ததற்கான காரணம் ஆகியவற்றை தொடக்கத்தில் விவரிக்கிறார். இந்தப்பகுதி சற்று நெகிழ்ச்சியாக இருக்கிறது. மூன்று பெண் குழந்தைகளுக்குப் பிறகு பிறக்கும் ஆண் பிள்ளை கரண் தாப்பர். இவர் பிறக்கும்போது அவரின் அப்பாவிற்கு வயது, 50. எனவே, ராணுவ அதிகாரியான அப்பாவிற்கு, கரண் மீது தனி பிரியம் இருக்கிறது. அதேசமயம் ...