இடுகைகள்

இந்தியா- மொழிகளின் வளர்ச்சி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ராஷ்டிர மொழியாகும் இந்தி!- பிறமொழிகளின் நிலைமை என்ன?

படம்
இந்தியமொழிகளின் வளர்ச்சி ! இந்தியாவிலுள்ள மக்களில் 43.6% பேர் இந்திமொழி பேசுவதாக சென்சஸ் தகவலின் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன . பத்தாயிரம் பேர்களுக்கும் மேல் பேசும் மொழியாக 121 மொழிகள் உள்ளன . பட்டியலிடப்பட்ட 22 மொழிகளில் ஏதேனும் ஒரு மொழியை 96.7% பேர் பேசிவருகின்றனர் . பெங்காலி (8%), மராத்தி (6.9%), தெலுங்கு (6.7%), தமிழ் (5.7%), குஜராத்தி (4.6%) ஆகியவை டாப் 5 மொழிகளாக பட்டியலில் இடம்பிடித்துள்ளன . இரண்டு லட்சத்து 60 ஆயிரம் பேர் ஆங்கிலமொழியை தங்கள் முதல் மொழியாக கூறியுள்ளனர் . இதில் ஒரு லட்சத்து 6 ஆயிரம் பேர் மகாராஷ்டிராவில் வசித்து வருகின்றனர் . மேற்கு மற்றும் மத்திய இந்தியாவில் பிலி , கோண்டி உள்ளிட்ட மொழிகள் அதிகளவில் பேசப்பட்டு வருகின்றன .